(Reading time: 22 - 44 minutes)

ம்ம்ம் என்னடா இவரு நம்மளபத்தி ஒண்ணும் கேட்காம கல்யாணத்தை பத்தி பேசுறாரேநு பாக்குறீங்களா??நீங்க இங்க வந்து ஒரு ஒன் ஹவர் இருக்குமா??அதுகுள்ள சாக்ட்சி ஓராயிரம் தடவை உங்களை பாத்துட்டா..நா கூட பெருசா எடுத்துக்கல ராம்கிட்ட அப்பறமா கேட்கலாம்நு இருந்தேன்..நல்ல வேளையா மகியே எல்லாத்தையும் சொல்லிட்டா..சாக்ட்சியோட பார்வையை வச்சே அவ மனசை படிச்சுருவேன் நா..அவ பார்வையிலேயே தெரியுது அவ லைவ்க்கு நீங்க எவ்வளவு முக்கியம்நு அதனாலதான் நேரா கல்யாணத்தை பத்தி கேட்குறேன்..அதுமட்டுமில்லாம மகியும் ராமுமே சர்டிவிகேட் குடுத்தப்பறம் வேற யார்ட்டையும் கேட்கனுமா என்ன??என்று கூறி அனைவரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தார்..

பரணி ஏதோ கூற வாயெடுக்க கண்களாலேயே அடக்கினான் ராம்..இவ்வாறாக சாப்பாட்டை முடித்துவிட்டு ஹாலிற்கு வர,அமர்நாத் சாக்ட்சியிடம் தன் அறையிலிருந்து ஒரு கிப்ட் பாக்ஸை எடுத்து வரச் சொன்னார்..அதை மகியிடம் நீட்டி இந்த தாத்தாவோட கல்யாணபரிசு வாங்கிக்கோ மகி..வேண்டாம் என்று ராம் கூறவர மகி அதற்குள் அதை வாங்கியிருந்தாள்..தாத்தா இதை நா பிரிச்சு பாக்கலாமா??

பாரும்மா..அது உனக்கானது தான..

பிரித்தவள் உள்ளிருந்த பாக்ஸை ஓபன் பண்ண வைர நெக்லஸ் கண்களை பறித்தது..எப்படியும் விலை பல லட்சங்களில் இருக்கும்..பிடிச்சுருக்கா மகி??

போங்க தாத்தா நீங்க என்ன டிஸ்ஸப்பாண்மெண்ட் பண்ணிட்டீங்க..எனக்கு இதெல்லாம் வேண்டாம்..

ஏன் மகி டிஸைன் நல்லாயில்லையா வேணா சாக்ட்சிய கூட்டிட்டு போய் உனக்கு பிடிச்சதா வாங்கிக்கோ..

ராமோ இவ ஒரு முடிவுல தான் இருக்கா போலயே என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..

கடைக்கெல்லாம் போக வேண்டாம் எனக்கு பிடிச்சது இங்கேயேயிருக்கு அத தருவீங்களா..

கண்டிப்பா..என்ன வேணும்நு சொல்லு..

நா உள்ளே வரும்போது வாசல்ல நிறைய கலர் ரோஸ் பாத்தேன் எனக்கு ரெட் அண்ட் வொய்ட் ரோஸஸ் மட்டும் தறீங்களா??வாக்கு குடுத்துருக்கீங்க மாட்டேன்னு சொல்ல கூடாது..

தன்னவளை பெருமையாய் நோக்கினான் ராம்..எவ்வளவு நாசூக்காக அவரின் பரிசை நிராகரித்துவிடாள்..காரணமின்றி வேண்டாம் என்று கூறியிருந்தால் எப்படடியும் அவர் ஒத்துக் கொள்ள வைத்திருப்பார்..ஆனால் இப்போது…

மீண்டும் பெரிதாய் சிரித்தவர்,ராம் ஜாடிக்கேத்த மூடிதான்..உன்னையே மிஞ்சீட்டா போ உன் மனைவி..சரி இதையும் வச்சுக்கோ பூக்களையும் எடுத்துக்கோ மகி..

ம்ம்ம் நோ நோ எனக்கு நகைலலெல்லாம் இன்ட்ரெஸ்டேயில்ல தாத்தா..சோ எனக்கு நா கேட்டது மட்டும்போதும்..

ம்ம் உன்னை போய் குழந்தைநு நெனைச்சேனே..சரி உனக்கு எது வேணுமோ எடுத்துக்கோ..அப்பறமா போலாம் ராம்..சாக்ட்சியும் இங்க தனியா தான இருக்கா..நீங்களா இருந்தா அவளுக்கும் சந்தோஷமாயிருக்கும்..நா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்..சாக்ட்சி மகிக்கும் பரணிக்கும் வீட்டை சுத்தி காட்டுடா..என்றவாறு அவர் நகர..மகியை ஓடிவந்து கட்டிக் கொண்டாள் சாக்ட்சி..

ஹேய் அய்யோ வலிக்குது விடு சாக்ட்சி..ராம் ப்ளீஸ் காப்பாத்துங்க என்று பொய்யாக கூச்சலிட அவளை விடுவித்தவளின் கண்களிலோ நீர் கோர்த்திருந்தது..தேங்க் யு சோ மச் அண்ணி இவ்ளோ ஈஸியா தாத்தாட்ட பேசிட்டீங்க..லவ் யு அண்ணி என கன்னத்தில் முத்தமிட..ராம் அவளை முறைத்தான்..

என்னதிது ஓனர் ஆப் தி ப்ராப்பர்ட்டி நா என்கிட்ட கேட்காம என்ன இதெல்லாம்..-ராம்

போங்க நா அண்ணி பண்ணிண வேலைக்கு இனி பாக்குற அப்போயெல்லாம் கிஸ் பண்ணுவேன்..என்று கூறி சிரிக்க இனிமையாய் பொழுது கழிந்தது..லேசாக இருட்ட தொடங்கியிருக்க,ராம் அமர்நாத்திடம் ஏதோ பேசுவதற்காக சென்றிருக்க,பரணிக்கும் சாக்ட்சிக்கும் தனிமை குடுக்க எண்ணியவளாய் மகி வராண்டாவில் தோட்டத்து பூக்களை ரசித்தவாறு நின்றிருந்தாள்..தற்செயலாக திரும்பியவளின் கண்ணில் சற்று தூரத்திலிருந்த கெஸ்ட் கவுஸ் தெரிந்நதது..ஹய்யோ பாவம் அந்த பாயல் எவ்ளோ கஷ்டபடுறாங்களோ..ம்ம் எல்லாத்துக்கும் சீக்கிரமா ஒரு நல்ல முடிவு வரணும் என்று சிந்தனையிலிருந்தவள் வெல்கம் மிஸஸ் ராம் என்ற குரலில் தூக்கி வாரி போட திரும்பினாள்..

அங்கே கோர்ட் சூட்டில் கம்பீரமாய் அருகில் இருவருடன் நின்றவனை பார்த்து சற்று நடுங்கித்தான் போனாள்..சில நொடிகள் தான்..அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவள் அவனை கேள்வியாய் ஏறிட்டாள்..

ம்ம்ம் தைரியசாலிதான்..ரெண்டு தடவை மிரட்டியும் உன் புருஷனோட டெல்லிக்கு வந்தது பத்தாதுநு என் வீட்டுக்கே வந்துருக்கனா குட்…

ஓ,அதர்வா..என தனக்குள் கூறிக் கொண்டவள் எவ்வித உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமலிருந்தாள்..

நீயே இவ்வளவு தைரியமா இருக்கும் போது நானும் தைரியமா நேராகவே கேட்குறேன் உன் புருஷன் எதுக்காக என் ஹாஸ்பிட்டல்க்கு வந்தான்..??

அவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்க அருகிலிருந்த இரு அடியாட்களின் பார்வையோ மகியை ஊடுருவிக் கொண்டிருந்தது..அந்த அருவருப்பில் பொறுமை அனைத்தும் காற்றோடு போக,அதான் தைரியமா இருக்கனு சொல்றியே அதே தைரியத்தோட என் புருஷன்ட்ட போய் கேளு பதில் சொல்வாரு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.