(Reading time: 12 - 23 minutes)

06. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி

Vaana Vizhi Azhage

ஸ்வந்தின் மருத்துவ வாசம் முடிய நான்கு நாட்கள் ஆகிவிட்டது.தினமும் அவந்திகா பார்த்துவிட்டு செல்வாளே தவிர,தேவைக்கு அதிகமாக எதையும் பேசவில்லை.அதற்கு அவளுக்கு நேரமுமில்லை.

கடைசி செமஸ்டர் என்பதால்,இன்டர்வியூ என்று அடிக்கடி கம்பெனிகளுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.

அவந்திகாவிற்கு வெளியில் வேலைக்கு செல்வதில் விருப்பம் இல்லையென்பதால்,பலரை கலாய்ப்பதற்காகவே  நேர்முகத்தேர்விற்கு செல்வாள்.

ஹாசினி சொல்லவே வேண்டாம்.அவள் படிப்பதே பெரிய விஷயம் தான்.ஒரே பெண் என்பதால் அவள் தான் அப்பாவின் தொழிலை கவனித்துக்கொள்ள வேண்டும்.

அவந்திகாவும்,ஹாசினியும் ஒரே நிலையில் இருந்தாலும்,வர்ஷுவிற்காக தேர்வில் கலந்து கொண்டனர்.

அவள் முதல் தேர்விலையே செலக்ட் ஆகிவிட்டாலும்,சில கம்பெனிகள் அப்பாயின்மென்ட் லெட்டரை கொடுக்க தாமதம் செய்வார்கள் என்பதால் மேலும் இரண்டு கம்பெனிகளுக்கு சென்று கால் லெட்டர் வாங்கி வைத்துக்கொண்டாள்.

எதில் முதலாய் அழைக்கிறார்களோ அதற்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

மனநிலை சரியில்லாமல் இருக்கும் அக்காவுக்காக எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.தங்கைக்காகவே வாழ்ந்த நந்தனா,எதிர்பாராத விதமாக சிக்கலில் மாட்டிக்கொண்டு,இப்போது தங்கையை கூட அடையாளம் தெரியாமல் இருக்கிறாள்.

அவளை குணப்படுத்த வேண்டும் என்ற வைராக்கியம் மட்டுமே அவளது மனதில் இருக்கிறது.அதற்காக தோழிகளுக்கு தெரியாமல் பல வேலைகளை செய்கிறாள்.ஆனால் இன்னும் தன்னுடைய அக்காவின் நிலையை மட்டும் அவள் யாரிடமும் சொல்லவில்லை.

மனதில் உள்ள வேதனைகளை மறைத்துக்கொண்டு அவந்திகா சொன்ன இடத்திற்கு காலையிலையே வந்துவிட்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

இவளுக்கு முன்பே மற்ற இருவரும்,இன்னும் சில தோழிகளோடு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார்கள். 

வரிசையாக வந்து நின்ற பேருந்து எதிலும் ஏறாமல் அவர்கள் நின்றிருக்க,சரண் அவர்களை முறைத்துக்கொண்டே நின்றிருந்தான்.

அவனுக்கு காதில் புகை வந்து கொண்டிருந்தது.’என்னம்மா திட்டம் போடறாளுங்க’என்று ஹாசினியையும்,கேங் லீடர் அவந்திகாவையும் முறைத்தவன் பொறுக்க முடியாமல்,

“செவ்வந்தி..நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாவே இல்லடி..உனக்கு துணைக்கு இத்தனை பேரை சேர்த்துக்கிட்டது போதாதுன்னு,ஹாசினியையும் நீ சேர்த்துக்கிட்டது சரியில்ல”என்றவன்,ஹாசினியை முறைக்க..அவள் அவந்திகாவின் பின்னே ஒளிந்துகொண்டாள்.

“விடுடா மாமா..ஒரு நாளைக்கு தானே..உன்னோட ஆளை பத்திரமா கொண்டு வந்து விட்டுடறேன்”என்று அலட்டிக்காமல் சொல்லவும்,சரணுக்கு காதில் புகை வராத குறை தான்.

யஸ்வந்த் வந்தாளாவது இவள் அடங்குவாளா என்ற பேராசையில் அவனை அழைத்தவன்,”இன்னும் பத்து நிமிஷத்தில எங்க ஊர் பஸ் ஸ்டாப்பில நீ இருக்கணும்”என்றவன் பதிலை எதிர்பார்க்காமல் வைத்துவிட,எதுவும் அவசரமோ என்று பயந்து போன யஸ்வந்த் ஏழே நிமிடத்தில் வந்துவிட்டான்.

“என்னடா ஆச்சு”என்று பதறிப்போய் கேட்டவன்,அருகிலிருந்த பெண்களை பார்த்தவன் அசந்து தான் போய்விட்டான்.

அத்தனை பேரும் புடவையில்,புல் மேக்அப் செய்துகொண்டு நின்றிருந்தார்கள்.

அதிலும் அவன் கண்கள் அவசரமாக அவந்திகாவின் பக்கம் போக,பார்வையை அவனால் திருப்பத்தான் முடியவில்லை.

முயன்று தன்னை சரி செய்துகொண்டவன்,நண்பனின் பக்கம் திரும்பி,”எதுக்குடா வர சொன்ன”என்று கேட்பதற்குள் திணறித்தான் போய்விட்டான்.

“ஹி..ஹி..நீயும் காதல் வலைல விழுந்துட்டேன்னு கேள்விப்பட்டேன்..அது நிஜமான்னு டெஸ்ட் பண்ணிட்டு விஷயத்தை சொல்லலாம்னு இருந்தேன்.இப்போ கன்பார்ம் ஆகிடுச்சு”என்று நண்பனை கிண்டலடித்தவன்,

“இவங்க கிளாஸ் பசங்க எல்லாம் பக்கத்து டிபார்ட்மெண்ட் பொண்ணுங்களும்,ஜூனியர் பொண்ணுங்களும் தான் அழகா இருக்காங்கன்னு சொல்லி இவளுங்களை டேமேஜ் செய்துட்டானுங்க போல..இவளுங்களுக்கு பொறுக்கலை..அதான் அவனுங்களை எப்படியாவது கவுக்கனும்னு போறாளுங்க”என்று சொல்லவும்,இப்போது யஸ்வந்த் நேரடியாக அவந்திகாவை முறைத்தான்.

“அறிவில்லையா உனக்கு”என்று மிரட்ட,

“ஹலோ சார்..இது எங்க ஏரியா..கொஞ்சம் தள்ளியே நில்லுங்க”என்று சொன்னவள்,தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து நின்றுகொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.