இதே கேள்வியை அவன் கொஞ்சம் மாற்றி சரணை அழைத்து,”உனக்கு ஹாசினி முக்கியமா..இல்லை அவந்திகா முக்கியமா”என்று கேட்க..
அவனிடமிருந்தும்,”அவந்திகா”என்று தான் பதில் வந்தது.
“ஹாசினி கோபப்பட மாட்டாங்களா..இப்படி அவங்ககிட்ட சொல்லிடாதடா”என்று அவன் அறிவுரை கூற..
“ஹாசினிக்கே இது நல்லா தெரியும்.எந்த இடத்திலையும் நான் அவந்திகாவை விட்டுக் கொடுக்க மாட்டேன் யஸ்வந்த்.நீ எதுக்காக கேட்டேன்னு எனக்கு தெரியாது..ஆனால் என்னோட பதில் இது தான்.எங்களோட நட்பால,தனிப்பட்ட வாழ்க்கைல பிரச்சனை வருதுன்னு தெரிஞ்சா,நாங்களே ஒதுங்கிக்குவோம்..அதே நேரத்தில யார்கிட்டயும் விட்டுக் கொடுக்க மாட்டோம்”என்று உறுதியாக சொல்ல,யஸ்வந்த் கொஞ்சம் தெளிந்தான்.
பால்கனியிலிருந்து வானத்தை பார்த்துக்கொண்டே அவன் யோசித்துக்கொண்டிருக்க..தனக்கு ஆபத்து ஏற்பட்ட போதும் கூட,”சரண்”என்று அவனை தான் அழைத்தாளே தவிர,தன்னை அழைக்கவில்லை என்று புரிந்தது.
இக்கட்டான சூழ்நிலையில் தன்னை தானே அழைத்திருக்க வேண்டும் என்று அவன் மனம் முரண்டு பிடித்தது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
‘அன்று மட்டுமல்ல..இனி என்றுமே அவள் ஆபத்தான நிலையில் இருந்தால்,அவளை அரவணைக்க..அரணாக காக்க..சரணை மட்டுமே அனுமதிப்பாள்’என்பதை புரிந்துகொள் என்று வானத்தில் உள்ள கண்ணுக்கு தெரியாத பல விழிகள்..அவனிடம் சத்தமில்லாமல் ரகசியத்தை சொல்லி..அவனுக்கு எச்சரிக்கை கொடுக்க முயன்று தோற்றுப் போனது.
தொடரும்
{kunena_discuss:1004}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.