(Reading time: 12 - 23 minutes)

ன்னடி ஆச்சு”என்று அவளை உலுக்க..

“இந்த யஸ்வந்த் சரியான திருடனா இருப்பான் போல வர்ஷூ..பாவிப் பய..கையில இருந்த தங்க மோதிரத்தை உருவிட்டுப் போயிட்டான்”என்று சொல்ல..

“அவரா..திருடனா..”என்றவள்..தோழியின் முகத்தை ஆராய்ந்துவிட்டு..

“இருக்கும்..இருக்கும்”என்று கிண்டலத்தவாறே அவளை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

ம்மா போதும்மா”என்று யஸ்வந்த் அலறிக்கொண்டே இருக்க,தாமரை அவனது பேச்சைக் கேட்காமல் தலைக்கு நல்லெண்ணெய்யை தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார்.

“நைட் நேரத்தில,இப்படி கொடுமை பண்ணியே ஆகணுமா”

“நீ எந்த நேரத்தில வீட்டுல இருக்கேன்னே தெரிய மாட்டேங்குது.அதான் கிடைச்ச நேரத்தில எல்லாம் செய்துவிடறேன்”என்று அவனை அடக்கிவிட்டு அவனது தலையில் மசாஜ் செய்து கொண்டிருந்தார்.

அவனது அப்பா,நல்லெண்ணெயில் பொடியை போட்டு ஆற வைத்துக் கொண்டிருக்க..எதிர்பாராத விதமாக,”மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா..ஹே குச்சி ஐஸுல எச்சி வச்சவ பிச்சி என்ன தின்னா..”என்ற பாடலோடு யஸ்வந்தின் போன் அலற..

அதை எடுத்தவர்,”நம்ம மருமக பொண்ணு”என்று தாமரையிடம் சொன்னவர்..

“அதெப்படிடா யஷ்வந்த்..டைமிங்க்கு ஏத்த மாதிரி என்னோட மருமக ரிங்டோன் வைக்குது”என்று சொல்லிவிட்டு,தண்ணீர் இருந்த பாத்திரத்தை எடுத்து அவனது முகத்துக்கு நேரே வைத்து..”மாங்கா மண்டை மாதிரியே இல்ல”என்று கேலி செய்யவும்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரியாவின் "என் காதல் பொன்னூஞ்சல் நீ" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“மீ..மாங்கா மண்டை..”என்று அலறியவன்..அவசரமாக போனை பிடுங்கிக்கொண்டு அவனது அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

“போன் எடுக்க இவ்வளவு நேரமா”என்று மறுமுனையில் அவள் கேட்க..

“என் போனை எடுத்து..எதுக்கு நீ இப்படியெல்லாம் டோன் வைக்கிற..என் தலையை பார்த்தா,உனக்கு மாங்கா மண்டை மாதிரி தெரியுதா”என்று கோபத்தில் அவன் திட்ட..

“ஹலோ பாஸ்..உங்களுக்கு அந்த ஹேர் ஸ்டைல் தான் நல்லா இருக்கும்.அதைவிட்டுட்டு எப்போ பார்த்தாலும்,முடியை ஒட்ட வெட்டிட்டு..நல்லாவே இல்லை”என்றாள்.

“அதெல்லாம் மாத்திக்க முடியாது.நீ எதுக்கு போன் செய்த”

“என்னோட ரிங்கை ஏன் உருவிட்டுப் போனீங்க..அதை முதல்ல திருப்பிக் கொடுங்க”

“நான் வேணும்னே எல்லாம் எடுக்கல..கை சாப்ட்டா இருக்கவும்,என் கையோட வந்துடுச்சு...நான் என்ன பண்ண முடியும்”என்று ஐஸ் மழையே பொழிய..எதிர்முனையில் பேச்சுக்கு இடமில்லாமல் போனது.

“லைன்ல இருக்கியா”என்றதும் தான்,

“ம்ம்”என்று குரல் கொடுத்தாள்.

“நாளைக்கு கொண்டு வந்து கொடுக்கறேன்..உன் வீட்டுல ரிங் காணோம்னு கேட்டாங்களா..”

“இல்லையே..அப்பா இன்னும் வீட்டுக்கே வரலை..”

“அப்போ அவருக்கு தெரியாம பேசணும்னு தான்,சீக்கிரமா போன் பண்ணியா”

“நான் எந்த திருட்டுத்தனமும் பண்ணலை..அப்புறம் எதுக்கு நான் பயந்து முன்னாடியே போன் செய்யணும்..இப்போ உங்களுக்கு போன் செய்தது தப்புன்னு சொல்ல வர்றீங்களா”என்று எகிறவும்,

“தப்புன்னு தானே,நம்மளை சுத்தி இருக்கவங்க அப்படித்தானே சொல்லுவாங்க..”

“ஓ..அப்போ நான் அந்த தப்பை இனி செய்ய மாட்டேன்.பாய்..”என்று வைத்துவிட்டாள்.

உடனே அவன் திருப்பி அழைக்கவும்,”நீங்க போன் செய்தா மட்டும் தப்பு இல்லையா”என்று அவள் பதிலுக்கு கோபப்பட..

“லவ் பண்ற பையன்கிட்ட பேசறேன்னு உன்னோட அப்பாகிட்ட சொல்லிப் பார்.அவரோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு அப்போ உனக்கு புரியும்..எல்லா வீட்டுலையும் தப்புன்னு தான் சொல்லுவாங்க..ஏன் சரண் கூட ஏதோ தப்பு செய்யற மாதிரி பயந்து பயந்து தானே,அந்தப் பொண்ணு ஹாசினி கூட பேசுவான்..”எனவும்..

“சரண் தப்பு செய்யறோம்னு நினைச்சு எல்லாம் அப்படி பேசலை..தன்னால எக்காரணத்தைக்கொண்டும்,ஹாசினியோட படிப்பு பாதில நின்னுடக் கூடாதுன்னு நினைக்கறான்..இதுக்கு பேர் திருட்டுத்தனம் கிடையாது”என்று சரணை விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.

யஸ்வந்த் எதையுமே யோசிக்காமல்,”எங்க ரெண்டு பேர்ல யார் முக்கியம்னு கேட்டா,நீ யாரை சொல்லுவ”என்றான்.

உள்ளுக்குள் இருக்கும் பொறாமை குணம் அப்படி கேட்க வைத்தது.

“சரண் தான் முக்கியம்னு சொல்லுவேன்”என்றதும்,அவன் போனை வைத்துவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.