அதன் பின் இருவரும் சிலநாள் படித்தனர்… சில நாள் படிக்கவில்லை… இப்படியே நாளும் செல்ல, பரீட்சையும் வந்தது… அவனுக்கு இது முதல் பரீட்சை என்பதால் சற்று தடுமாற்றம் இருந்தது… இருந்தாலும் அவள் ஓ.எம்.ஆர் ஷீட் முதற்கொண்டு நிரப்ப சொல்லிக்கொடுத்திருந்தபடியால் அவனுக்கு கொஞ்சம் சுலபமாய் இருந்தது…
சில தலைப்புக்கள் சார்ந்த தகவல்கள் மட்டுமே ஓரளவு முடிக்க முடிந்திருந்தது அவர்கள் படித்த அந்த சொற்ப நேரத்தில்… பின்னர் எங்கே பரீட்சையை சரியாக செய்திருப்பார்கள்?... பரீட்சையை முடித்து வீட்டிற்கு வந்ததும்,
“நான் நல்லாவே பண்ணலை… நாம படிச்சது ரொம்ப கொஞ்சம் தான் போல… இல்ல???…… ஹப்பா… எவ்வளோ கேள்வி இருக்கு…” என சொல்லிவிட்டு,
“நீ எப்படி பண்ணின…” என்ற அர்னவின் கேள்விக்கு,
“நல்லா பண்ணலை…” என்றாள் அவள்…
“ஏன்?... எனக்குத்தான இது முத பரீட்சை… பட் உனக்கு இது அப்படி இல்லையே… நிறைய கேள்விகள் முன்னாடியே தெரிஞ்சிருக்கும்… நிறைய படிக்கவும் செஞ்சிருப்ப… அப்போ நீ நல்லாதான பண்ணியிருக்கணும்… ஏன் நல்லா பண்ணலைன்னு சொல்லுற?..”
அவனது கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாது, அமைதியாகவே இருந்தாள் அவள்…
“ஹேய்… உங்கிட்ட தான் கேட்குறேன்… சொல்லு…”
“அம்மா கூப்பிடுறாங்க… அப்புறம் பேசுறேன்…” என போனை வைத்தவள், அந்த போனையே வெறித்துப் பார்த்தாள்… அவளது கண்ணீர்த்துளிகள் தானாக கன்னம் இறங்கியபோதும் அவள் அசையவே இல்லை தனது நிலையிலிருந்து…
“வா வா சுதீப்… இப்போதான் உனக்கு இங்க வரணும்னு தோணுச்சா?...” என வரவேற்பு ஒரு புறமும், விசாரிப்பு ஒருபுறமுமாய் கேட்டார் சண்முகம்..
“அப்படி எல்லாம் ஒன்னுமில்லப்பா… இப்போதான் லீவும் சேர்ந்தாற்போல கிடைச்சுச்சு…” என தகப்பனுக்கு பதில் சொன்னான் அவனும்….
“வாங்க சுதீப்… எப்படி இருக்குறீங்க?... பிரயாணம் எல்லாம் நல்லா இருந்துச்சா?...” என கேட்டுக்கொண்டே அவனிடமிருந்த பையை வாங்கினாள் சரயூ…
“பிரயாணமெல்லாம் ஓகே அண்ணி… நான் நல்லா இருக்கேன் அண்ணி… நீங்க எப்படி இருக்குறீங்க?... அண்ணன், குட்டி பாப்பா ரெண்டு பேரும் எப்படி இருக்குறாங்க?..”
“எல்லாரும் நல்லா இருக்குறோம்….” என்றவள், நினைவு வந்தவளாக,
“சுகன்யா கிட்ட சொன்னீங்களா சுதீப் நீங்க வர்றதா?...” எனக் கேட்டாள்…
“இல்ல அண்ணி… அவகிட்ட சொல்லாமலே நேருல போய் பார்க்கணும்….”
“அப்போ சரி…” என சிரித்தவள்,
“நீங்க உட்காருங்க… நான் ஜூஸ் எடுத்துட்டு வரேன்…” என கிச்சனுக்குள் நுழைந்து ஜூஸ் போட பழத்தை எடுத்தாள் அவள்…
“விருந்தாள் யாரும் வந்துருக்காங்களா?...” என தேங்காய் துருவிக்கொண்டிருந்த விசாலம் கேட்க,
“சுதீப் வந்திருக்காங்க….” என்றாள் சரயூ…
“சுதீப் தம்பியா?........... எப்போ?..............”
“ஆமா… இப்போதான்……”
“சரி சரி…. நீ போய் பேசிட்டிரு… நான் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன்…”
“இல்ல இருக்கட்டும்… நானே போட்டுக்குறேன்….”
“தம்பி வந்திருக்கு ரொம்ப நாளுக்குப் பிறகு, நீ போய் பேசிட்டிரு… நான் எடுத்துட்டு வரேன்…”
“இல்லங்க… பரவாயில்லை….” என சொன்ன சரயூவைப் பொருட்படுத்தாமல் அவளிடமிருந்து பழங்களை வாங்கி ஜூஸ் போட்டு முடித்தாள் விசாலம்…
விசாலத்தையே அசையாது பார்த்துக்கொண்டிருந்த சரயூவிடம், “உனக்கெதுக்கு சிரமம்னு தான் நான் போட்டேன்….” என மழுப்பியவள்,
“வாம்மா… நானே கொண்டு வரேன் இதை…” என கையில் ஜூஸை எடுத்துக்கொண்டு சரயூவிற்கு முன்னே விறுவிறுவென்று நடந்து சென்றாள் விசாலம்…
“வாங்க சுதீப் தம்பி…” என வாயெல்லாம் பல்லாக விசாலம் ஜூஸைக் கொண்டு கொடுக்க அவனும் அதை வாங்கிக்கொண்டு,
“நான் நல்லா இருக்குறேன் நீங்க எப்படி இருக்குறீங்கம்மா…” என விசாரித்தான்…
“இப்போதான் உங்களுக்கு வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா?... எத்தனை நாளாச்சு நீங்க இங்க வந்து?...” என அவள் ஆற்றாமையோடு சொல்ல
“என்ன பண்ணுறதும்மா… என் வேலை அப்படி இருக்குதே… அதான் வரமுடியலை…”
“என்ன வேலையோ, புள்ளையை இத்தனை நாள் வீட்டுக்கே வரவிடாம செஞ்ச வேலை…” என விசாலம் நொடித்துக்கொள்ள அவன் சிரித்தான்….