“அந்த வேலையை இன்னும் கொஞ்ச நாள் நீ நினைச்சேப் பார்க்கக்கூடாது சொல்லிட்டேன்…”
சண்முகத்தின் கட்டளையா இல்லை பாசமா?... தெரியவில்லை… தகப்பனின் குரல் அவனை எதுவோ செய்தது மட்டும் உண்மை…
“இல்லப்பா கொஞ்ச நாள் லீவுல தான் வந்திருக்கேன்… இந்த் தடவை உங்க கூட இருப்பேன் நிறைய நாள்….”
“உன் வார்த்தையை கேட்க சந்தோஷமா இருக்கு சுதீப்…”
அந்த நேரம் சரியாக, சித்தப்பா என்ற கூவலுடன் வந்தனர் பூஜிதாவும் பிரேமிதாவும்….
“ஹாய் குட்டீஸ்… வாங்க…..” என இருவரையும் அணைத்துக்கொண்டவன்,
“சித்தப்பா உங்களுக்கு நிறைய வாங்கிட்டு வந்திருக்கேன்… என்னன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்…” என அவன் சொன்னதும், இரண்டு பேரும் மாறி மாறி இது அது என்று கூற,
“சரி எதுன்னு நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…” என்றவன், விசாலத்திடம் தனது பைகளில் ஒன்றை கொண்டு போய் தனதறையில் வைக்க சொல்ல அவளும் சென்றாள்…
“குட்டீஸ்… நீங்க போய் பாருங்க…. நான் இப்போ வந்திடுறேன்….” என அவர்களையும் அவன் அனுப்ப, அவர்களும் விசாலத்தின் பின் சென்றனர்…
பின், தகப்பனிடம், ஒரு பார்சலை கொடுத்தவன், “அப்பா இது உங்களுக்கு…” என கூற, அவரும் “எனக்கெதுக்குப்பா இதெல்லாம்….” என சொல்ல,
“பிடிங்கப்பா..” என அவனும் வற்புறுத்த அதன் பின் அவர் மறுக்கவில்லை….
“அண்ணி இது உங்களுக்கு…” என்றவன் சரயூவிடமும் ஒரு கவரை கொடுக்க, அவள் வாங்கவில்லை….
“வாங்கிக்கோம்மா….” என சண்முகமும் எடுத்து சொல்ல, “ம்ம்… சரி….” என தலையாட்டினாள் அவள்…
“சரி சுதீப்…. நான் என் ரூமுக்கு போறேன்…. நீ சின்னப்பிள்ளைங்க கூட பேசிட்டிரு…” என்றபடி அவர் சென்றதும்,
“வாங்கிக்கோங்க அண்ணி…. பிடிங்க….”
“இல்ல சுதீப்… எனக்கு வேண்டாம்… நீங்க சுகன்யாக்கு கொடுங்க…”
“அவளுக்கும் வாங்கிட்டு வந்திருக்கேன் அண்ணி…. அதனால நீங்க இதைப் பிடிங்க….”
“இல்ல பரவாயில்லை… இதையும் சேர்த்தே அவளுக்கு கொடுங்க…”
அவள் பிடிவாதமாய் மறுக்க, சற்று நேரம் அமைதியாய் இருந்தான் அவன்…
பின், “உங்க தம்பி கொடுத்தா வாங்க மாட்டீங்களா அண்ணி?....” எனக் கேட்டதும் சட்டென நிமிர்ந்தாள் அவள்…
“என்ன அண்ணி பார்க்குறீங்க?... அர்னவ் தான் உங்க தம்பியா?... நான் இல்லையா?...” எனக் கேட்டுக்கூட முடிக்கவில்லை அவனிடமிருந்து அந்த கவரை வாங்கிக்கொண்டாள் அவள்….
“ம்ம்… உங்களுக்கெல்லாம் பேச வேண்டிய விதத்துல பேசினா தான் புரியும் போல… இல்ல…??...” என புன்னகை மாறாமல் கேட்டவனைப் பார்த்து அவளும் சிரிக்க,
“நீ எப்போ வந்த?...” என்ற கேள்வியோடு வந்தான் திலீப்….
“வாண்ணா.. எப்படி இருக்குற?...”
“ம்ம்…. நீ எப்போ வந்த?...”
“இப்போதான் அண்ணா….”
“வந்ததும் வராததுமா இங்க நின்னு என்ன வெட்டிக்கதை பேசிட்டிருக்குற?... போ போய் ரெஸ்ட் எடு…”
“ம்ம்.. சரிண்ணா…” என்றவன் அதற்கும் மேல் அங்கே நிற்கவில்லை…
கையில் கவருடன் செய்வதறியாது நின்றிருந்த சரயூவின் மேல் அவனது கூர்மையான பார்வை ஒன்று பதிய, அவள் அப்படியே நின்றாள்…
“காபி கொண்டு வா….” என்ற குரலில் காபிக்கான தேவை எதுவும் இல்லை…
மாறாக கோபத்தில் அவளை கடித்து குதறிடும் தொனியே அதிகம் இருந்தது..
அதை உணர்ந்து கொண்ட அவளுக்கு, “கடவுளே…” என்றிருந்தது…..
இருந்தும் வாய் விட்டு சொல்லவில்லை அவள்… சொன்னால் அதற்கும் முறைத்துக்கொண்டு நின்றாலும் நிற்பான்… நானிருக்கும்போது கடவுளை ஏன் அழைத்தாய் என்று…
அவனது நடவடிக்கை அவள் அறியாதது இல்லை… இருந்தும் விதி அவளை சிக்கவைத்துக்கொண்டே இருந்தது மாறி மாறி…
இல்லையென்றால் சுதீப் கவரை கொடுக்கும்போதுதானா திலீப் வந்து சேர வேண்டும்???.... இது விதியின் சதியன்றி வேறு என்னவென்று சொல்லமுடியும் அவளால்?...
மனைவியிடத்தில் உரிமை, பாசம், அனைத்தும் இருக்கவேண்டியது தான்… ஆனால் இந்த அளவு அதீதமாய் இருந்தால், அது கொஞ்சமும் அவளுக்கு நன்மை அளிக்காது என்பதை அவன் உணர்ந்து கொள்ளாமல் இருந்தது தான் இதில் வேதனைக்குரிய விஷயம்…
பாசம் கூட ஓரளவுக்குத்தான்… அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே… அதைத்தான் திலீப்பும் செய்துகொண்டிருந்தான் சரயூவின் விஷயத்தில்…
ஆனால் இதுவரை செய்து கொண்டிருந்தது பத்தாது என, அடுத்து அவன் செய்யவிருக்கும் காரியம் அவனே அந்த நேரம் அறிந்திருக்கவில்லை…
அது நடக்காமலே போனால் பாதிப்பில்லை… ஒருவேளை அது நடந்தால் என்ன ஆகும்?...
நடத்தி வைக்கத்தானே நான் இருக்கிறேன் என்பது போல் சரயூவின் வாழ்வில் நுழைந்திருந்த விதி சத்தமாய் சிரிக்க, அதே நேரம் கையில் காபியுடன் திலீப்பின் அறைக்குள் நுழைந்தாள் சரயூ…
ஹாய்… ப்ரெண்ட்ஸ்…
அவசரம் அவசரமா டைப் செஞ்சதால நிறைய ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இருக்கலாம்… அப்படி நிறைய இருந்தா மன்னிச்சிடுங்க ஃப்ரெண்ட்ஸ்…
திலீப்-சரயூ வாழ்க்கையில் அப்படி என்னதான் பிரச்சினைன்னு அடுத்த வாரம் கண்டிப்பா சொல்லிடுவேன் ஃப்ரெண்ட்ஸ்… இந்த ஒரு வாரம் மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோங்க… ப்ளீஸ்…
ஹ்ம்ம்... எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்…
படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க… மறக்காம…
பை… பை… நெக்ஸ் வீக் அகெய்ன் மீட் பண்ணலாம்…
தொடரும்
{kunena_discuss:995}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.