(Reading time: 25 - 49 minutes)

14. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

கார்த்தி….” என ஜானவியின் உதடுகள் தானாய் கூற, அவள் பக்கத்திலிருந்த ஜனனி திடுக்கிட்டாள்…

“ஹேய்… ஜானு… என்ன ஆச்சு?...”

“…………….”

ஜானவியைப் பிடித்து அவள் உலுக்க, அவள் தன்னுணர்வு பெற்றாள்…

“ஆ…. சொல்லு ஜன்ன்ன்னி…”

“என்னத்தடி சொல்ல சொல்லுற?... உனக்கு என்னடி ஆச்சு?...”

“ஒன்னுமில்லடா….”

“பொய் சொல்லாத… உண்மையை சொல்லு… திடீர்னு என்னடி ஆச்சு உனக்கு?..”

“நிஜமா எதுவும் ஆகலை ஜன்ன்னி… ஏன் இப்படி கேட்குற?...”

“எதுவும் ஆகலையா?... அதுசரி… எதுவும் ஆகாம தான் கார்த்தின்னு இப்போ உளறினியா?...”

ஜனனியின் வார்த்தையில் சற்றே அதிர்ச்சியானாள் ஜானவி…

“எது நானா?... எப்போ?...”

“அடிப்பாவி… நீ எந்த உலகத்துல இருக்குறடி… இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான சொன்ன… நல்லவேளை இப்போ சார் இல்லை… அவர் மட்டும் இருந்திருந்தார்ன்னு வை கண்டிப்பா அவர் காதுக்கு கேட்டுருக்கும்…”

“ம்ம்… சாரி….”

“ஹே… லூசு ஜானு… எதுக்கு சாரி எல்லாம்?... மிஸ் பண்ணுறியா அவனை?...”

“ம்ம்… இருக்கலாம்… பட் உன் தம்பி நினைவாவே இருக்கு… அவர் என்னை கூப்பிட்டதா ஒரு ஃபீல்… அதான் என்னையும் அறியாம அவர் பேரை சொல்லிட்டேன் போல…”

“அட லூசு… பேச வேண்டியது தான… அத விட்டுட்டு ஏன் ஃபீல் பண்ணிட்டிருக்குற?...”

“ஆமா… நான் பேச ரெடிதான்… உன் தம்பி பேசணுமே… அதுதான இப்போ பிரச்சினையே...” என ஜானவி தனக்குள் பேசிக்கொள்ள, ஜனனி அவளின் முகத்தினையே பார்த்தாள்…

“என்ன ஜன்ன்ன்னி பார்க்குற?...”

“இல்ல உன் மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ண முடியுமான்னு பார்க்குறேன்… வேற ஒன்னுமில்லை…”

ஜனனி அப்படி சொன்னதும், அவளை பட்டென்று அடித்தாள் ஜானவி…

“ஸ்…. ஆ… பிசாசே… எதுக்குடி அடிச்ச?... வலிக்குது…… நியாயமா பார்த்தா நான் தான் உன்னை அடிக்கணும்… என் பேரை டெய்லி கொலை பண்ணுறியே….”

ஜனனியும் கத்த, ஜானு அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே,

“பின்ன வேலையைப் பார்க்காம என் மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ண முடியலைன்னு  சொல்லிட்டிருக்குற… அதுக்குத்தான் உன்னை அடிச்சேன்….” எனவும் ஜனனிக்கும் சிரிப்பு வந்துவிட்டது…

அப்போது அங்கு வந்த அவர்களின் சார்,

“ஜானவி… நியூஸ் பார்த்தீயா?...”

“நியூஸா?... என்ன நியூஸ் சார்?....”

“என்ன நியூஸா?... சரியாப்போச்சு போ… ஹ்ம்ம்.. UPSC Exam மட்டும் தான் ட்ரை பண்ணனும்னு கொள்கையோட இருக்குறீயா என்ன?...”

“அப்படி எல்லாம் இல்ல சார்… டிஎன்பிஎஸ்சி கூட ட்ரை பண்ணுவேன்… இன்ஃபாக்ட் இப்போ எல்லாம் டிஎன்பிஎஸ்சி மட்டும் தான் சார் எழுதுறேன்….”

“ஓ… குட்… அப்போ உனக்கு நான் சொல்லப்போற நியூஸ் யூஸ் ஆகும்….”

“என்னது சார்?...”

“குரூப் 4 Announcement வந்துடுச்சு… எனக்கு தெரிஞ்சு நம்ம ஆஃபீஸ்ல கவர்மெண்ட் எக்ஸாம் எழுத இன்டிரஸ்டடா இருக்குறது நீ தான்… அதான் உங்கிட்ட விஷயத்தை சொன்னேன்…”

“ஓ… அதுக்காகத்தான் சார் வெயிட் பண்ணிட்டிருந்தேன்… தேங்க்யூ சோ மச் சார்… நான் அப்ளை பண்ணிடுறேன்…”

“ஹ்ம்ம் ஓகே ஜானவி…” என்றவர் திடீரென்று நினைவு வந்தவராக,

“ஏன் ஜானவி… 40 வயசுக்கு மேல எதுவும் கவர்மென்ட் வேலை கிடைக்காதா?...”

“ம்ம்ம் யாருக்கு சார் கேட்குறீங்க?...”

“எனக்குத்தான்… எத்தனை நாள் இந்த வேலையே பண்ணுறது… எனக்கும் அரசாங்க சம்பளம் வாங்கணும்னு ஆசை வந்துடுச்சு…”

“ம்ம்.. ஒகே சார்…” என ஜானவி சிரிக்க, அவளைப் பார்த்து ஜனனியும் சிரித்தாள்…

“மறந்துடாதப்பா… விசாரிச்சு சொல்லு சரியா?...”

“சரிங்க சார்…”

“ஓகே ஜானவி…” என்றரும் அதன் பின் அலுவலக விஷயமாக அவளிடம் கேள்விகள் கேட்க அவளும் அதற்கான பதிலை சொன்னாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.