(Reading time: 25 - 49 minutes)

ம்ம்… சரி கார்த்தி.. ம்ம் சாரி நிஜமா..”

“எதுக்கு சாரி?...”

“இல்ல அப்பவே சட்டுன்னு போனை வச்சிட்டேன்… அது உங்களை ஹர்ட் பண்ணியிருக்குமோன்னு மனசுக்குள்ள ஒரே உறுத்தல்…. சாரி கார்த்தி… மன்னிச்சிடுங்க….” என அவள் உண்மையாகவே வருந்தி சொல்ல,

“ஹேய்… லூசு… அதெல்லாம் ஒரு ஹர்ட்டும் நான் ஆகலை… லூசு மாதிரி ஃபீல் பண்ணாம போய் சாப்பிடு சரியா?...”

“….”

“லூசு… நிஜமா நான் ஹர்ட் ஆகலை… நம்பு…”

அவனின் லூசு என்ற அழைப்பு அவளை வெகுவாகவே சமாதானம் செய்திருந்தது…

“ம்ம் சரி கார்த்தி…”

“சரி… நீ சாப்பிடு… நான் போனை வைக்குறேன்…”

“நீங்களும் நேரத்துக்கு சாப்பிடுங்க….” என்ற வேண்டுதலோடு அவளும் முடிக்க சரி என்றபடி போனை கட் செய்தவனின் முகம் முழுவதும் புன்னகை நிறைந்திருந்தது…

“சரியான லூசுதாண்டி நீ… லூசு…” என செல்போனை பார்த்து சொன்னவன், சிரித்துக்கொண்டே நெற்றியில் செல்போனை முட்டிக்கொண்டான்….

எப்போதடா சாய்ங்காலம் ஆகும் என்று துடித்தவள், அவனது அழைப்புக்காக காத்திருந்தாள்…

ஆனால் அவன் போன் செய்யாமல் மெஸேஜ் அனுப்பினான்…

“ஹாய்… இருக்கியா?...”

“சொல்லுங்க கார்த்தி…”

“எக்ஸாம் எத்தனை மார்க்?... என்ன எல்லாம் வரும்?... எவ்வளவு மார்க் எடுக்கணும்?...” என வரிசையாக அவன் கேள்வி கேட்க, அவள் அதற்கு மேலும் தாமதிக்காது அவனுக்கு போன் செய்தாள்…

“அதான் மெஸேஜ் பண்ணேன்ல… அதுல ரிப்ளை பண்ண வேண்டியதுதான?..”

“பரவாயில்லை… சொல்லுங்க… என்ன டீடெயில்ஸ் எல்லாம் வேணும்?...”

“ஒரு டீடெயிலும் தெரியாது… சோ எல்லாமே டீடெயிலா சொல்லு…” எனவும் அவள் சிரித்தாள்.. பின்,

“200 கேள்வி இருக்கும்… பட் மார்க் 300…”

“எது 300 மார்க்கா?... வேலைக்கே ஆகாது… முதல் ஃபாலே அவுட்டா?... சரியாப்போச்சு…”

“பேசாம கேட்குறீங்களா இல்லையா?...”

“சரி சொல்லித்தொலை… கேட்குறேன்…”

“ஃபர்ஸ்ட் அப்ளை பண்ணுறதுக்கு பாஸ் போர்ட் சைஸ் போட்டோ வேணும்.. உங்க சைன் வேணும்… அப்புறம் உங்களைப் பத்தின ஃபுல் டீடெயில்ஸ்ம் வேணும்…”

“என்னைப் பத்தி என்ன டீடெயில்ஸ் வேணும்… என் பேரு, ஊரு, படிப்பு எல்லாமே உனக்குத் தெரியுமே…”

“அட்ரஸ், மார்க் ஷீட் நம்பர், எல்லாம் தெரியாதே…”

“அட்ரஸ் தெரியாதா?... அப்புறம் எப்படி சிஸ் நிச்சயதார்த்ததுக்கு வீட்டுக்கு வந்த?..”

“அது உங்க ஏரியா பேர் மட்டும் தான் தெரியும்… அதை வச்சு வந்தேன்.. பட் வீட்டு நம்பர் எல்லாம் எனக்கு எப்படி தெரியும்…”

“கேட்கணும்… கேட்டிருந்தா சொல்லியிருப்பேன்…”

“சரி இப்போ கேட்குறேன்… சொல்லுங்க…”

“சரி..” என்றவன் வேகமாக தனது முகவரியை சொல்ல ஆரம்பிக்க, அவள் நிறுத்தினாள்…

“வெயிட் வெயிட்…” என்றவள், “நான் நோட் பண்ணிக்குறேன்… பட் அதுக்கும் முன்னாடி நீங்க ஒரு நோட், பேனாவோட ரெடியாகிட்டு சொல்லுங்க எனக்கு…”

“எதுக்கு நோட், பேனா எல்லாம்?...”

“அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபில் பண்ணுறதுக்குத்தான்…”

“அதான் உங்கிட்ட சொல்லுறேன்ல… நீ பண்ண மாட்டியா?..”

“அய்யோ கார்த்தி… நான் தான் பண்ணப்போறேன்… இல்லைன்னு சொல்லலை… பட் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கணும்ல… அதான்…”

“அதெல்லாம் ஒன்னும் தெரியவேண்டாம்…. அதை தெரிஞ்சு வச்சு நான் என்ன பண்ணப்போறேன்?...”

“சொன்னாக் கேளுங்க… விதண்டாவாதம் பண்ணாதீங்க… ஒருவேளை நாளைக்கு நானே இல்லைன்னாலும் நீங்களே உங்களுக்கு அப்ளை பண்ணிக்கலாம்ல…”

அவளின் பதிலில் சட்டென கோபம் வந்தது அவனுக்கு…

“புரியலை நீ சொல்லுறது?... நீ இல்லன்னாவா?... அப்படின்னா?..”

“அப்படின்னா……” என இழுத்தவள், “எங்கயாவது நான் வேற ஊருக்கு போயிட்டா, இல்ல முக்கியமான வேலையா மாட்டிகிட்ட்டா…. அதான்…” எனவும்,

“ஓ… அப்படி ஒரு மண்ணும் அவசரமில்லை… நீ வந்தப்பிறகே நான் பண்ணிப்பேன்… அதுமில்லாம இந்த ஒருதடவை தான் எக்ஸாம் எழுதுவேன்… அப்புறம் அவ்வளவுதான்…” என்றான் அவனும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.