(Reading time: 25 - 49 minutes)

ண்டர்வியூ வேற கிடையாது இந்த எக்ஸாம்க்கு… பாஸ் பண்ணிட்டா, ஜஸ்ட் சர்டிஃபிகேட்ஸ் வெரிஃபிகேஷன் மட்டும் தான்…”

“இது நல்லா இருக்கே…. செம்ம… சூப்பர்…”

“சரி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?....”

“ஹ்ம்ம்… யோசிச்சிட்டு சொல்லுறேன்…”

“தேங்க்ஸ்…. “

“எதுக்கு தேங்க்ஸ் சொல்லுற?...”

“நீங்க எக்ஸாம் எழுதப்போறீங்கள்ள அதுக்குத்தான்…”

“ஹே… நான் இன்னும் ஓகே சொல்லலை…”

“உங்களுக்கு எழுத விருப்பம் இருக்கப்போய்த்தான் இவ்வளவு நேரம் நான் பேசுறதை சிரிச்சிட்டேன்னாலும் கேட்டீங்க… இல்லன்னா எப்பவோ கட் பண்ணிட்டு போயிருப்பீங்க வேலை இருக்குன்னு சொல்லிட்டு….”

அவளின் வார்த்தை அனைத்தும் உண்மை என அறிந்து கொண்டவனுக்கு, அவள் தன்னை புரிந்து வைத்திருக்கிறாள் நன்றாகவே என தோன்றியது…

அவன் இதழ்களிலும் புன்னகை தவழ ஆரம்பிக்க,

“ஓ.. அப்படீங்களா மேடம்?... ஒருவேளை நான் எக்ஸாம் எழுத மாட்டேன்னு சொன்னா? என்ன பண்ணுவீங்க?...”

“ஒன்னும் பண்ணமாட்டேன்… இது உங்க லைஃப்… வாசந்தி அம்மாவை விட உங்க லைஃப் நல்லாயிருக்கணும்னு யாரும் நினைக்க முடியாது… ஆனா எனக்கும் உங்க மேல அக்கறை இருக்கு…. நீங்க நல்லா இருக்கணும்ன்ற எண்ணமும் இருக்கு நிறைய…. இது உங்க லைஃபை மாத்தும்ணு ஏனோ எனக்குள்ள தோணுது… அதனால தான் சொன்னேன் எக்ஸாம் எழுத சொல்லி…. முதல் முயற்சியிலேயே பாஸ் பண்ணிடுவீங்கன்னு எல்லாம் நான் கற்பனை பண்ணிக்கலை.. பட் கண்டிப்பா அடுத்தடுதத எக்ஸாம்ல நீங்க பாஸ் பண்ணுவீங்கன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு…. ஏன் எதுக்குன்னு சொல்லத் தெரியலை… ஆனா அதுதான் உண்மை…”

அவளின் பதிலில் எதுவும் பேசத்தோன்றாதவனாய் அவன் இருக்க, அவள் மேலும் தொடர்ந்தாள்…

“இது உங்க லைஃப்… நான் இதுக்குமேல சொல்லுறதுக்கு எதுவுமே இல்லை… இனி உங்க விருப்பம்… நான் வறுபுறுத்தலை…” என்றவள்

“சரி வச்சிடுறேன்… அப்புறம் பேசுறேன்… சார் வந்துடுவாங்க….” என போனை கட் செய்துவிட்டு போனதும், அவன் அவள் பற்றிய சிந்தனையில் மூழ்கினான்….

சில மணி நேரங்களுக்குப் பிறகு,

“என்ன ஜானு?... சாப்பிடாம என்ன யோசிச்சிட்டிருக்குற?...”

“ஒன்னுமில்லை ஜன்ன்னி… அவர் கிட்ட பேசிட்டேன்… பட் கடைசியில சட்டுன்னு போனை வச்சிட்டேன்… அது தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு… அவருக்கு நான் அப்படி பண்ணினது ஒருமாதிரி ஆகியிருக்குமோன்னு தோணுது….”

“லூசாடி நீ… வருத்தப்படுறதுக்கு காரணம் தேடி கண்டுபிடிச்சிட்டே இருப்பியா என்ன?...”

“அப்படியெல்லாம் இல்லடி… என்னமோ அப்படி நான் போனை வச்சிருக்கக்கூடாதுன்னு மனசு சொல்லிட்டே இருக்கு…”

“உன்னை என் தம்பி லூசுன்னு திட்டுறது தப்பே இல்லை ஜானு…” என ஜனனி சொன்னதும்

“அது உண்மைதான…” என முணுமுணுத்தாள் ஜானவி…

அந்த நேரம் சரியாக,

கண்ணால கண்ணால என் மேல தீயை எரிஞ்சுப்புட்ட

சொல்லாத சொல்லால உள் நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சுப்புட்ட…”

என ஜானவியின் செல்போன் மெதுவாக பாட,

டிபன்பாக்ஸை கீழே வைத்துவிட்டு, யாரது எனப் பார்த்தவளுக்கு முகமெங்கும் புன்னகைப் பூக்கள்…

ஜானவியின் புன்னகையை வைத்தே, அவளது போனில் யாரென்று ஜனனி கண்டுபிடித்துவிட, ஜானவி ஜனனியைப் பார்த்தாள்…

“பேசு….” என ஜனனி செய்கை காட்ட,

“சொல்லுங்க கார்த்தி….” என ஜானவியும் அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தாள்…

“சாப்பிட்டியா?... என்ன பண்ணுற?...”

அவனின் கனிவான விசாரிப்பில் பூரித்து போனாள் அவள்..

“சாப்பிட்டிருக்கேன் கார்த்தி… நீங்க சாப்பிட்டீங்களா?...”

“இனிதான்… சரி நீ சாப்பிடு…. நான் அப்புறம் கூப்பிடுறன்…”

“இல்ல இல்ல… நீங்க சொல்லுங்க… பரவாயில்லை…”

“ஒன்னும் அவசரமில்லை… எக்ஸாம் பத்தி கேட்க தான் போன் பண்ணினேன்… நீ சாப்பிடு… நான் ஈவ்னிங்க் கூப்பிடுறேன்….”

எக்ஸாம் பற்றி என அவன் சொன்னதில் அவளுக்கும் சற்றே உவகையாக இருந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.