(Reading time: 25 - 49 minutes)

லோ… லைனில் இருக்குறீயா?...” என்ற அர்னவின் சத்தத்தில் யோசனையிலிருந்து வெளிவந்தாள் ஜானவி…

“எக்ஸாம் போட்டிருக்காங்க… இப்பதான் நியூஸ் பார்த்தேன்..”

“சரி… வழக்கம்போல அப்ளை பண்ணு…”

“ம்ம்ம்…. சரி… நான் அதுக்காகத்தான் போன் பண்ணினேன்…”

“புரியலை… நீ சொல்லுறது…”

“உங்களுக்கு ஐடியா இருக்கா?... எக்ஸாம் எழுத?..”

“எது?....”

அவளின் கேள்வியில் சற்றே அதிர்ந்தவன் வாய்விட்டு சிரித்துவிட்டான்…

“எதுக்கு சிரிக்குறீங்க?...”

“எல்லாம் நீ சொன்னீயே அதுக்குத்தான்,…” என்றவனுக்கு மேலும் சிரிப்பு வந்தது…

“நான் சீரியஸாவே கேட்குறேன்… எக்ஸாம் எழுதிப் பார்க்குறீங்களா?...”

“யாரு?... நானா?!!!....”

அவன் குரல் அதிர்ந்து ஒலித்தது…

“ஆமா நீங்க தான்…”

“விளையாடுறீயா?... நான்???…. எக்ஸாம்!!!!… ஹ்ம்ஹூம்… படிக்கும்போதே எக்ஸாம்க்கும் எனக்கும் ரொம்ப தூரம்… இதுல இப்ப எக்ஸாம் எல்லாம் சான்ஸே இல்லை…”

“ஒருதடவை ட்ரை பண்ணி பார்க்கலாம் தான நீங்க…”

“அதுக்கு வேற ஆளைப் பாரு தாயே.. என்னை விட்டுடு…”

“எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்குறீங்க?... ஒரு தடவை எழுதி தான் பாருங்களேன்…”

“பிடிவாதம் நீதான் பிடிக்குற… என்னால முடியாது… இந்த பேச்சை இதோட விடு…”

“என்ன முடியாது?... அதெல்லாம் முடியும்… எனக்கு தெரிஞ்சதை நான் உங்களுக்கு சொல்லித்தரேன்…”

“……………”

“இது ரொம்ப ஈசியான எக்ஸாம் மத்த எக்ஸாமோட கம்பேர் பண்ணும்போது… குரூப் 2 அப்படின்னாலும் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்… பட் இது டென்த் ஸ்டேண்டர்டு லெவல் தான்.. அதனால ஈசியா தான் இருக்கும்….”

“டென்த் ஆ?... அதுல இருக்குற கேள்வியா கேட்பாங்க?...”

“ஆமா.. டென்த் வரை இருக்குற புக்ஸ் படிச்சா போதும்… ஐ மீன் சிக்ஸ்த் டூ டென்த்…”

“வாட்!!!! அவ்வளவுமா?...”

“ஈசியாதான் இருக்கும்… ப்ளீஸ் ட்ரை பண்ணி பாருங்களேன்…  ஒருவேளை உங்களுக்கு இந்த அட்டெம்ப்ட்டிலேயே கிடைச்சிட்டா நல்லது தான…”

அவளின் பதிலில், விட்ட தனது சிரிப்பை அவன் மேலும் தொடர்ந்தான்…

“இப்போ எதுக்கு மறுபடியும் சிரிக்குறீங்க?...”

“பின்ன நீ சொல்லுறது உனக்கே காமெடியா இல்லையா?... முதல் அட்டெம்ப்ட்டிலேயே நான் பாஸ் பண்ணுவேன்???.. அட போ மா…. சும்மா கிண்டல் பண்ணிகிட்டு..”

“கார்த்தி நான் விளையாடலை… நிஜமா தான் சொல்லுறேன்… நீங்க ஃபர்ஸ்ட் ட்ரை பண்ணிப் பாருங்க…”

“ஆமா நான் மட்டும் தான் எக்ஸாம் எழுதுறேன் பாரு.. உடனே பாஸ் பண்ணுறதுக்கு?...”

“கோடி பேர் எழுதினாலும் நமக்குன்னு ஒரு இடம் கடவுள் முடிவு பண்ணிட்டா அதை மாத்த யாராலயும் முடியாது… அதை முதலில் புரிஞ்சிக்கோங்க…”

“சரி… அப்போ என் கேள்விக்கு பதில் சொல்லு…”

“என்ன கேள்வி ?...”

“நீயும் எனக்கு தெரிஞ்சு நாலைஞ்சு வருஷமா எழுதுற.. ஆனா ஏன் உனக்கு வேலை கிடைக்கலை?...”

அவன் கேட்டதும் சில நொடிகள் அமைதியாய் இருந்தவள், பின், அவனிடம்,

“ஹ்ம்ம்… எனக்குன்னு ஒரு இடம் கடவுள் இன்னும் முடிவு பண்ணலை… அவ்வளவுதான்…” என்றாள்…

“இதெல்லாம் ஒரு பதிலா?...”

“நிஜமா தான்… எல்லாமே கிடைக்குற அளவுக்கு நான் அதிர்ஷ்டம் பண்ணலை..” என்றவள், அந்த எல்லாமே என்பதில் அழுத்தம் கொடுத்து சொல்ல, அவன் அமைதியானான்…

ஏனெனில் அவனுக்கு தெரியும்… அந்த எல்லாமே என அவள் குறிப்பிட்டது தன்னையும் சேர்த்துத்தான் என….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.