(Reading time: 15 - 29 minutes)

14. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி

Anal mele pani thuli

வண்ண வண்ண பூவினில் கையை வைத்தவன்

சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்

சின்ன சின்ன நெஞ்சினில் பாசம்வைத்தான்

நெஞ்சில்  வரும்  பாசத்தை  பேச  வைத்தான்

உள்ளம்  என்னும்  கோயில்  கட்டி  வைத்தவன்

கண்கள்  என்னும்  வாசலை  தந்து  வைத்தவன்

கண்ணில்  வரும்  பாதையை  காண  சொன்னான்

சுற்றி அமர்ந்திருந்த எல்லோருடைய முகத்திலும் ஒரு வித அதிர்ச்சி இருந்தது என்னவோ உண்மைதான். மதி தன திருமணத்தை தள்ளி போடுவதில் இப்படி ஒரு காரணம் இருக்க கூடும் என்று யாரும் எண்ணவில்லை அவனின் தாயைத்தவிர.

அவருக்கு முன்பிருந்தே மதியின் மேல் இருந்த சந்தேகம் தற்போது ஊர்ஜியப்பட்டு விட்டதில் சற்று மகிழ்ச்சியே அவருக்கு. சேரும் இடம் தெரியாமல் இருட்டில் நடப்பவருக்கு ஒரு தீக்குச்சியின் ஒளி கூட போதுமானதாக  இருக்கும். அப்படி தான் அவருக்கு இப்போது தோன்றியது.

மதிக்கு மதுவின் மேல் இருந்த காதல் ஏழு வருட வரலாறை கொண்டது என்பது அவருக்கும் சற்று ஆச்சர்யமான விஷயம் தான். மதி சொன்ன இந்த விஷயங்களில் மட்டும் எல்லோரும் உறைந்திருக்க மதியின் முகத்தை கண்டா அபிராமியம்மாளுக்கு இன்னும் ஏதோ ஒரு விஷயம் அதுவும் அவன் இப்போது கூறியதை விட பெரிய விஷயம் ஒன்று வெளி வரப்போவதாக தோன்றியது.

"ஏம்ப்பா அந்த பெண்ணுக்குத்தான் இந்த கல்யாணத்துல அவ்வளவு விருப்பம் இல்லைனு சொன்னாங்களே. அப்பறமும் இதை பத்தி பேசணுமா " என்று அவனின் தந்தை கேட்க,

"அவனுக்கு இன்னும் ஏதோ சொல்லணும்னு நெனைக்கிறேன். நீ சொல்லுப்பா" என்று மதியின் முகம் பார்த்தார் அவன் தாய்.

"அப்பா நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் சொல்றேன். இந்த உலகத்துல அவ காதலிக்கிற ஒரே ஆள் நான் தான். என்னை தவிர அவளால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. எந்த ஜென்மத்துலையும் முடியாது" என்றவனை குழப்பத்துடன் பார்த்தனர் அனைவரும். "அப்பறம் ஏன் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னான்னு நீங்க எல்லாரும் குழம்பறது எனக்கு புரியுதுப்பா. எனக்குமே ஆரம்பத்துல சரண் வந்து சொன்னப்போ ஒன்னும் புரியல. ஆனா அதுக்கு அப்பறம் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு அதனால தான் அவ இந்த கல்யாணம் நடக்க வேண்டாம்னு நெனைக்கிறானு புரிஞ்சுது. ஆனா அந்த கேள்விக்கான விடை இப்போ தான் எனக்கும் தெரிஞ்சுது. ஆனா எந்த சூழ்நிலையிலும் அவளை தவிர எனக்கு வேற ஒரு பெண் மனைவியை வர முடியாது. இது நான் உங்க யாரையும் வருத்தப்படுத்தணும்னு சொல்லல. " என்று தலை குனிந்து அமர்ந்தவனின் அருகில் சென்று அமர்ந்து அவன் கைகளை ஆதரவாக பற்றி கொண்டார் அபிராமி.

"மதி முதல்ல பிரச்னையை சொல்லு அப்போதானே அதுக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க முடியும் " என்று அவன் சகோதரன் சொல்ல, ஒரு நீண்ட நெடும் மூச்சை எடுத்து கொண்டு பேச தொடங்கினான் மதி.

"ரெண்டு வருஷம் முன்னாடி மதுவுக்கு ஒரு accident ஆச்சுப்பா. அதுல அவளுக்கு என்று முழு விவரமும் கூறி முடித்தவன் மெல்ல நிமிர்ந்து அமைதியாக இருக்கும் அனைவரின் முகத்தையும் பார்த்தான். ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு அந்த அறையில் அமைதி குடி கொண்டிருந்தது. மீண்டும் தான் கைகளை இருக்க கோர்த்து கொண்டு பேச தொடங்கினான்.

"அவளுக்கு என்ன பிரச்சனையா இருந்தாலும் அவளை நான் கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா அவதான் இதுக்கு தடையா இருக்கா. இந்த நிலையில் என்னை கல்யாணம் பண்றது எனக்கும் என் காதலுக்கும் இந்த குடும்பத்துக்கும் பண்ணும் துரோகம் னு நெனைக்கிறா. "

ஓர் நீண்ட அமைதி நிலவியது அந்த அறையில்.

"நீ என்னப்பா முடிவு பண்ணிருக்க " முதலில் அந்த மௌனத்தை களைத்து பேச  தொடங்கியவர் அவன் தந்தைதான்.

"அப்பா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவ தான் என் மனைவி. அதுல எனக்கு எந்த மாற்றமும் இல்லை. " -மதி

......

தன் அருகே இன்னமும் தான் விரல்களை ஆதுரமாக பிடித்திருந்த தன் தாயின் கரத்தில் தான் மற்றொரு கையை வைத்தவன் அவரின் முகம் பார்த்தான்.

"அம்மா அவளுக்கு ஏன் மேல அளவுக்கு அதிகமான காதல்மா. அந்த காதலால் தான் அவ இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கா. நான் அவளை திருமணம் செய்ய ரெடியா இருந்தாலும் அவ சம்மதிக்க மாட்டா. அவளுக்கு நான் மட்டும் போறாதுமா. நம்ம மொத்த குடும்பமும் அவளை ஏத்துக்கணும் " என்றவன் கண்களில் நீர் கோர்த்திருக்க, அதனை கண்டா தாயின் மனம் பரிதவித்து அந்த கண்ணீரை துடைத்தது.

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு பேச தொடங்கினார் அபிராமி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.