(Reading time: 15 - 29 minutes)

"தி எங்களுக்கு நீங்க மூணு பசங்க. ஆனாலும் ஒவ்வொருத்தரும் எங்களுக்கு ஒரு கண்ணை போல தான். நீ முக்கியம் உன் அண்ணன் முக்கியம் அப்படினு நெனைச்சது இல்லை. உன் அண்ணன்களை கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது எந்த அளவுக்கு சந்தோசமா இருந்தோமோ அதே மாதிரி உன் திருமண வாழ்க்கையும் இருக்கணும்னு நெனைக்கிறேன். ஆனா உன் திருமண வாழ்க்கை அப்படி அவர்களை போல இயல்பானதா இருக்காதே."

ஏதோ பேச முயன்றவனை கை உயர்த்தி நிறுத்தியவர் "நான் பேசிடறேன் மதி. நானும் உன் அப்பாவும் பெரிய புதுமைவாதிகள் இல்லை. நான் பெருசா படிச்சவளும் இல்லை. நீயும் மதுவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நாளைக்கே எனக்கு உன் பிள்ளையை தூக்கி கொஞ்சனும்னு ஆசை இருக்கும். அது இயல்பானது.நம்ம சொந்த பந்தம் நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க. அதை விடு மத்தவங்களை பத்தி கவலையில்லை. ஆனா உன் ரத்தத்தில் உருவாகும் பிள்ளையை சுமக்கிற பாக்கியம் அவளுக்கு இல்லையே. ஏதேதோ பெரிய பெரிய டாக்டருங்க வெளிநாடு போயி மருத்துவம் பண்றதுனு ஆயிரம் வசதிகள் இப்போ இருந்தாலும் கர்ப்பபை இல்லாத பெண்ணுக்கு இந்த வைத்தியம் எதுவும் வேலை செய்யாதே. "

அவரின் எதிர்மறையான பதிலை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் தன்தந்தையை நிமிர்ந்து பார்க்க அவர் முகம் எந்த உணர்வுகளையும் காட்டாமல் அபிராமி அம்மாளின் பேச்சில் கவனம் கொண்டிருந்தது.

"உனக்கு உன் வாரிசு கிடைக்காது. எனக்கு உன் பிள்ளையை கொஞ்ச முடியாது. வெளிய ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவாங்க. அதுக்கெல்லாம் பதில் சொல்லணும். இதெல்லாம் நீ யோசிச்சியா" -அபிராமி

"எல்லாம் யோசிச்சிட்டேம்மா. எனக்கு யார் என்ன பேசறாங்கனு கவலை இல்லை. நாலு நாள் பேசிட்டு போயிடுவாங்க. அதுக்கு அப்பறம் இந்த வாழ்க்கை வாழ போறது நான் தான். எனக்கு உங்க எல்லாருடைய சம்மதமும் வேணுமா. மது என்கூட முழுமனதோடு வாழணும்னா உங்க அன்பும் அரவணைப்பும் அவளுக்கு முக்கியம்மா." -மதி

"நாளைக்கே உனக்கே எனக்கொரு பிள்ளை இருந்தா நல்லா இருக்குமேன்னு ஒரு எண்ணம் தோன்றினா? " அபிராமி

"நிச்சயம் தோனாதும்மா. நானும் மதுவும் ஒன்னு இல்லைம்மா ஒன்பது குழந்தைகளை தத்தெடுத்துக்குவோம்." -மதி

"அதெல்லாம் உன் குழந்தைகள் ஆகாதேப்பா " -அபிராமி

"அம்மா நீங்களும் நாங்களும் நினைத்தால் அவங்க என் குழந்தைகளாவே வளருவாங்கம்மா" - மதி

மெல்ல எழுந்தவர் தன் கைகளை மதியிடம் இருந்து விடுவித்து கொண்டு சமையலறையை நோக்கி செல்ல, தங்கள் இருக்கையில் இருந்து எழுந்த அனைவரும் அவரின் முடிவு என்ன வென்று புரியாமல் அவர் செல்லும் திசையை பார்க்க, தாள மாட்டாமல் மதி "அம்மா " என்றழைக்க, திரும்பியவர் முகத்தில்  புன்னகை மலர "என் மருமகளை பார்க்க ஏற்பாடு பண்ணு சீக்கிரம் " என்றவரை ஓடி சென்று கட்டிக்கொண்டான் மதி.

"தேங்க்ஸ் மா தேங்க்ஸ். " என்று கட்டி கொண்டு அழ அவன் முகத்தை நிறுத்தி கண்களை துடைத்தவர் " பைத்தியக்காரா இத்தனை நாள் என் கூட இருந்த உனக்கு என்னை பற்றி தெரிஞ்சுது இவ்வளவு தானா. நான் படிச்சவ இல்லை பெரிய புதுமைப்பெண்ணும் இல்லை. ஆனா ஒரு அழகான திருமண வாழ்க்கைக்கு முக்கியம் ரெண்டு மனசு அந்த அழகான வாழ்க்கையின் அடையாளம் தான் குழந்தை, அந்த அடையாளத்துக்காக உன் திருமண வாழ்க்கையை நான் ஜீவனே இல்லாமல் ஆக்கிடுவேன்னு நினைச்சியா மதி. உன்னை கல்யாணம் பண்ணி அவளுக்கு இப்படியொரு நிலை வந்திருந்தா உனக்கு நான் வேற கல்யாணம் பண்ணி வெச்சிருப்பனா. தனக்குள்ள வேதனையை புதைச்சிட்டு உனக்காகவும் நம்ம குடும்பத்துக்காவதும் யோசிக்கிற ஒரு பொண்ணு மருமகளா வர இந்த குடும்பம் நிச்சயம் கொடுத்து வெச்சிருக்கணும்." என்றவர் நிமிர்ந்து தான் கணவரின் முகத்தை பார்க்க அவர் மெல்ல கண்களை மூடி தன் சம்மதம் சொன்னவர் மதியின் மறுபுறம் வந்து அவள் தோளோடு சேர்த்து "நாம் வாழும் வாழ்க்கை சந்தோசமா இருந்தா நமக்கு வேண்டும் வரம் வேற எதுவும் இல்லை. நீயும் மதுவும் ஒருவர் மேல் ஒருவர் வெச்சிருக்கிற காதல் aஅது உங்க வாழ்க்கையில் வசந்தத்தை கொடுக்கும்." என்று சொல்ல தன் தாய் தந்தை இருவர் கழுத்தையும் கட்டி க்கொண்டு "இந்த உலகத்துலையே பெஸ்ட் அம்மா அப்பா நீங்கதான் என்று இருவர் கன்னத்திலும் முத்தம் வைக்க "ஏய் என் பொண்டாட்டி கன்னத்தை எச்சி பண்ண உனக்கு யாரு பெர்மிசன் கொடுத்தது " என்று அவன் தந்தை கேட்க எல்லோரும் முழு மனதுடன் சிரித்தனர் நீண்ட நாட்களுக்கு பிறகு.

துவின் அறையில் பைரவியும் முரளியும் அமர்ந்திருக்க முரளி கொடுத்த அந்த கோப்பில் தன் கவனத்தை பதித்திருந்தாள் மது.

"மொத்தம் 150 குழந்தைகள் இல்லையா முரளி. "-மது

"ஆமாம் மது. இன்னைக்கு நீயும் பைரவியும் போயி பார்க்க முடியுமா " -முரளி

"ஒய் நாட் . நல்ல காரியங்களை தள்ளி போடவே கூடாது.பைரவி நம்ம ரெண்டு பெரும் லன்ச் முடிச்சிட்டு கிளம்பலாம் ஓகேயா ? " -மது

"ஓகே மது. எனக்கு ஸ்டாப் ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வந்துடறேன். " –பைரவி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.