(Reading time: 18 - 36 minutes)

03. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ஜூலை மாதம் பூக்கும் கொன்றை பூக்களும் இளவெயில் பட்டு பிரதிபலிக்கும் கட்டிடத்தின் கண்ணாடி சுவர்களும் அந்த காலேஜ் கேம்பஸ்ஸை பொன்னிறமாக்கி ஜொளிக்க வைத்தன.  அந்த பிரம்மாண்டமான பெரிய கேம்பஸ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணத்தைத் தூண்டியது.  தன் மனம் கவர்ந்தவளுடன் நடந்த ஜெய்யிற்கோ இன்னும் நான்கு ஆண்டுகளை தன்னவளுடன் கழிக்கப்போகும் சொர்க்கமது என்ற நினைப்பே கற்கண்டாய் இனித்தது. 

முதலாமாண்டு மாணவர்கள் அங்குமிங்கும் பார்வையை சுழற்றியவாறு எதிர்பார்ப்பு, தயக்கம், மிரட்சி, மகிழ்ச்சி, அச்சமென எத்தனையோ பாவங்களை சுமந்து நடந்தனர்.  அவர்களுக்கு உதவுவதற்காக அங்காங்கே வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகை ஒன்றின் துணையோடு அறை எண் மற்றும் டிரெக்ஷென் விவரங்களை தெரிந்துகொண்டு அவள் நடக்க, ஜெய் அவளை பின்தொடர்ந்தான்.

அவள் அறையினுள் சென்றதும், அங்கேயே நின்று மைத்ரீ சரியான நேரத்துக்கு காலேஜை அடைந்தாளா என ஃபோனில் உறுதி செய்துகொண்டு வகுப்பறைக்குச் சென்றான் ஜெய்.  உள்ளே நுழைந்தவனுக்கு முதல் வரிசைகளில் எல்லா இடங்களும் நிறம்பியிருந்ததைப் பார்க்க ஒரே ஆச்சரியமாகவும் அதே சமயம் வருத்தமாகவும் இருந்தது.  ஆசிரியரின் கண் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாமல் எல்லாப் பாடங்களிலும் கவனத்தை செலுத்தி கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்பதாலேயே பெரும்பாலானோர் முதல் சில வரிசைகளில் உட்கார தயங்குவார்கள்.  ஒரு சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்காக முதல் வரிசைகளில் அமர்வதை விரும்புவார்கள்.  அவர்களில் ஜெய்யும் அடக்கம்.  ஆனால் இங்கு சூழ்நிலை எதிர்மறையாய் இருக்கவும் வேறு வழியின்றி கடைசி வரிசையை நோக்கி நடந்தவனின் கண்கள் அவளைத் தேட தவறவில்லை.

லேட்டா வந்தது தப்பா போச்சு.  மைதியால தான் எல்லாமே சொதப்பிறுச்சு.  அவளை சுத்த விட்ட நேரத்துக்கு காலேஜ் வந்திருந்தா ஃபர்ஸ்ட் ரோல உட்கார்ந்திருக்கலாம் என ஜெய் முடிக்கும் முன்னரே அவனது மனம் குறுக்கிட்டது அப்பா சாமி! உன் நடிப்புக்கு முன்னாடி நடிகர் திலகம் சிவாஜி கணேசனே தோத்துட்டார்.  அவளோட தான் வருவேன்னு வந்த பஸ்ஸையெல்லாம் விட்டுட்டு லேட்டா வந்ததுமில்லாம மைதிய குறை சொல்லுற? என மைத்ரீக்காக பேசியது.  மனது உண்மையை சொல்லவும் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியை மறைத்தவனாக இப்போ உட்கார இடம் தான் முக்கியம்.  சும்மா என்னை சீண்டாத என்று மனதிற்கு பதிலளித்தான்.

பின் வரிசையில் அவள் தனியாக உட்கார்ந்திருப்பதும் அந்த வரிசைக்குப் பின்னால் இரண்டு வரிசைகள் காலியாக இருப்பதும் ஜெய்யின் கண்ணில் படுகிறது.  இவளுக்கும் முன்னாடி இடம் கிடைக்கலை போலும் தனியா உட்கார்ந்திருக்கா.  அவளோட உட்காரலாம்… ஆனா என்ன நினைப்பாளோ? அந்த பஸ்க்காரன் மாதிரியே உனக்கும் சுடசுட கன்னம் பழுக்க அறை கிடைக்கும் என்றது வேறு யாருமில்லை ஜெய்யின் மனம் தான்.

தன் மனதின் பதில் உரைக்க அந்த எண்ணத்தை கைவிட்டவனாக அவளுக்கும் பின்னாடி ரோல உட்கார்ந்தாலே போதும்.  அப்போ கூட அவளுக்கு பக்கமாதான் இருக்கும்.  நீயெல்லாம் திருந்தவே மாட்ட என்று அவனது மனமே மானசீகமாக தலையில் அடித்து கொண்டது.

ஜெய் அவள் அமர்ந்திருந்த வரிசையை கடக்கும்போது தன் இடது பக்கம் சரிந்து அவனுக்கு உட்கார இடம் கொடுத்தாள்.  அவளின் இந்த செயலில் ஜெய்யின் காதலுக்கு இறக்கை முளைத்து பறக்க ஆரம்பித்தது.  இது நான் நினைக்காத ட்விஸ்ட்டா இருக்கே? இதுக்கு பின்னாடி ஏதாவது ஆப்பு வச்சிருப்பாளோ?  இவளை சைட் அடிச்சது பார்த்திட்டு பெரிசா ப்ளான் பண்றா…உட்காரத ஜெய் என்றது மனம்.  அவனோ அந்த பெஞ்சை நெருங்க வேணா ஜெய்… நான் சொல்லுறத கேளு உன்னால நானும் கஷ்டபடனும்… வேணா ஜெய்… என்று மனம் போட்ட கூப்பாடு அவனை எட்டவில்லை என்பது போல் அவளருகில் அமர்ந்து விட்டிருந்தான் ஜெய்.

அதே சமயம் காலேஜ் பிரின்ஸிபால், கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட் ஹெட், லெக்சரர்கள் ஒரு குழுவாக வகுப்பறைக்கு வந்தனர்.  தனக்கு இடம் கொடுத்ததற்காக அவளிடம் நன்றி கூட சொல்ல விடாமல் இவர்கள் வந்தது ஜெய்யிற்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது.  அவர்கள் எப்போது அங்கிருந்து செல்வார்களென்று காத்திருந்தான்.  அவர்களும் ஒரு இன்ட்ரோ செஷ்ஷனை முடித்துவிட்டு சீனியர்கள் வந்து கேம்பஸ் ட்ரிப் அழைத்து செல்லுவார்கள் என்றும் நாளையிலுருந்து எல்லா வகுப்பும் தொடங்கும் என்றும் சொல்லிவிட்டு அகன்றனர்.

அவள் உட்கார இடம் கொடுத்தால் தன்னுள் எழுந்த அத்தனை ஆனந்தத்தையும் அடக்கியபடி அவளிடம் திரும்பியவன், “தேங்க்ஸ்” என்றான் ஒரு புன்சிரிப்போடு.

“வெல்கம்.  ஐ ம் சரயூ” என்று மலர்ந்த முகத்தோடு நட்புடன் தன் கையை நீட்டினாள் அவள்.

அவளின் கையைக் குளுக்க கிடைத்த வாய்ப்பை எண்ணி படபடத்த மனதை அடக்கியவாறு “ஐ ம் சஞ்சய்” என்றபடி கையைக் குளுக்கினான்.

“பின்னாடி பெஞ்ச்சில் உட்கார பிடிக்காதா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.