(Reading time: 21 - 42 minutes)

"ல்லை முரளி நம்ம டிலே பண்ணுனா பாவம் ஹோமேல மேடம் கஷ்டப்படுவாங்க. நம்ம ஆல் ரெடி டிசைட் பண்ணுன மாதிரியே செஞ்சிருவோம். நான் இங்க பார்த்துப்பேன். " -மது

"ஆர் யு ஸுயர் " -முரளி

"எஸ் முரளி அண்ட் தேங்க் யு வெரி மச்" -மது

"இது எப்போ இருந்து மா " -முரளி

"இல்லை எனக்கு நம்பிக்கை கொடுத்ததுக்கு.. இப்போ மட்டும் இல்லை எப்போவுமே "- மது

முரளி பதில் சொல்லும் முன் மருத்துவரின் அறையில் இருந்து சிவசண்முகம் வெளியே வர அவர் பின்னே வந்த மதியை கண்டு இருவருக்குமே அதிர்ச்சி தான். முதலில் சுதாரித்த முரளி அவன் அருகே சென்று ஏதோ பேசியவாறு இருவரும் வராண்டா நோக்கி செல்ல, தன் தந்தையின் அருகே சென்ற மது, "அப்பா டாக்டர் என்ன சொன்னார். அம்மாக்கு ஒன்னும் சீரியஸ் ப்ரோப்லம் இல்லைல " என்று பதற்றத்துடன் கேட்ட மகளிடம் "இல்லைம்மா மைல்டு அட்டாக் தான் அதிர்ச்சியான விஷயம் ஏதோ நடந்ததால் ஏற்பட்டிருக்கு.இன்னும் ஒரு நாலு மணி நேரத்துல கான்ஷியஸ் வந்துரும்.. எந்த மோசமான விஷயமும் அவங்க மனச பாதிக்காம மனசு சந்தோசப்படுத்தற மாதிரி நடந்துக்க சொன்னாரு. மெடிகேஷன் எல்லாம் பாலோ பண்ண சொன்னாரும்மா" என்றவரிடம் "சரிப்பா. கவலைப்படாதீங்க அம்மாக்கு ஒன்னும் ஆகாது. நம்ம யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணலப்பா. அம்மாக்கு எப்படிப்பா திடிர்னு இப்படி ?" என்று கேட்ட மகளிடம் விஷயத்தை எந்த அளவுக்கு சொல்வது என்று புரியாமல் குழம்பியவரை காப்பதற்காகவே அங்கே வந்தனர் மதியும் முரளியும். முரளியுடன் பேசிக்கொண்டிருந்தாலும் மதியின் பார்வை முழுதும் மதுவிடமே இருந்தது.  மதுவின் தாய்க்கு ஏற்பட்ட இந்த அட்டாக்கிற்கு காரணம் என்னவென்று அவனுக்கு தெரிந்திருந்ததாலேயே மதுவின் தந்தையின் குழப்பத்தில் இருந்து காப்பதற்காகவே அங்கே வந்தான்.

அவன் அருகே வந்ததும் மது வேறெதுவும் கேட்காமல் அமைதியாகி விட மதுவின் தந்தை மதியிடம் மருத்துவர் பேசியதை குறித்து பேசிக்கொண்டிருக்க, மதுவின் அருகே வந்த முரளி,"மது அப்போ நான் இன்னைக்கு ஈவினிங் பிளைட்ல கெளம்பறேம்மா. ஏதாவது தேவைன்னா மதி இருக்காரு. அவரு பார்த்துக்கறேன்னு சொல்லிட்டாரு. அந்த தைரியத்துல தான் நான் கிளம்பறேன். வேறெதுவும் தேவைன்னா கால் பண்ணு. ஸ்கூல் பத்தி நீ கவலைப்படவேண்டாம் நானும் பைரவியும் பார்த்துக்கறோம்." என்று சொல்ல சரி என்று தலையை ஆட்டிவைத்தாள்.

அதற்க்கு பின் வீட்டிலிருந்து சித்தப்பா சித்தி என்று அனைவரும் மாறி மாறி வந்து சென்றனர். ரகுவும் கால் பண்ணி தன பெரியம்மாவின் உடல் நிலை குறித்து மணிக்கொரு தரம் கேட்டு கொண்டான்.

ஆனால் எல்லோரும் எவ்வளவோ கூறியும் மது வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டாள். அந்த மூன்று நாட்களும் மதி முடிந்த மட்டும் மதுவுடன் மருத்துவமனையிலேயே கழித்தான். சிவசண்முகமும் அதிக ரத்த அழுத்தத்தால் அவதியுறவே மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் இரவில் வீட்டிற்கு செல்ல மதுவும் மதியும் மதுவின் இரு சித்தப்பாக்களில் ஒருவருமான இரவு மருத்துவமனையில் தங்கியிருந்தனர்.

மது மங்களத்தின் அருகிலேயே இருந்து இரண்டு மணிக்கொரு முறை கொடுக்கவேண்டிய மருந்துகளை விழித்திருந்து கொடுக்க அங்கே அருகே இருந்த அறையில் இருந்த மதியோ மணிக்கொருதரம் வந்து அவர்களை பார்த்து செல்வதும் இடையில் அவளுக்கு குடிக்க டி, ஹார்லிக்ஸ் என்று ஏதேனும் வாங்கி வந்து தருவதுமாக இருந்தான். மதுவிற்கு கஷ்டமாக இருந்தது. அவன் இரவு முழுதும் உறங்காமல் இருப்பதுடன் காலையில் ஏழு மணிக்கு அங்கிருந்து செல்பவன் வீட்டிற்கு சென்று கிளம்பி ஆஃபீசுக்கும் செல்வது அறிந்து அதில் அவன் உடல் நிலை வேறு பாதிக்குமே என்று கவலை கொண்டாள். மதுவின் தந்தையும் எவ்வளோ கூறி பார்த்தார். ஆனால் அவன் அழகாக மறுத்துவிட்டான். அவளுக்கு தெளிவாக புரிந்தது அவள் சொல்லாமல் வேறு யார் சொன்னாலும் அவன் கேட்க மாட்டான் என்று.

இரவில் மங்கலத்திற்கு மருந்து கொடுத்துவிட்டு நர்ஸ் வந்து ஒருமுறை பரிசோதித்து விட்டு செல்லவும் வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் அமரவும் சரியாக கையில் சுட சுட காப்பியுடன் உள்ளே நுழைந்தான் மதி. எப்போதும் போல அவளை பார்த்து புன்னகைத்தவன் அருகில் இருந்த டேபிளில் காபியை வைத்து விட்டு கிளம்ப, கதவருகே சென்றவனை நிறுத்தியது காதில் விழுந்த அவளின் அழைப்பு.

"ஒரு நிமிஷம் " -மது

மெல்ல திரும்பி அவளை பார்த்தான். அவன் உள்ளே நுழைந்ததில் இருந்தே அவனிடம் எப்படியும் பேசிவிட வேண்டும் என நினைத்தவளுக்கு அவனை எப்படி கூப்பிடுவது என்று தடுமாற்றமாக இருந்தது.ஒருவழியாக ஒரு நிமிஷம் என்று கூப்பிட்டு வைத்தாள். அவனும் திரும்பி அவளையே பார்க்க, அவளுக்கு வார்த்தை தொண்டையில் சிக்கி கொண்டு வெளியே வருவேனா என்றது. ஒரு வழியாக எச்சிலை விழுங்கி மெல்ல குரலை வெளியே வரவழைத்தாள்.

"நீங்க வீட்டுக்கு போங்களேன். நானும் சித்தப்பாவும் இருக்கோம். நாங்க பார்த்துக்கறோம்." -மது

.......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.