(Reading time: 12 - 24 minutes)

11. பைராகி - சகி

bhairagi

ன்று கதிரவனின் கிரணங்கள் பிரகாசமானதாக தெரியவில்லை.

இறைவன் சூரிய நாராயணரும் சோர்வு கண்டிருந்தார்.

அதற்கு சாட்சி அவரை சுற்றி சூழ்ந்திருந்த கருமேகங்கள்!!

அப்படியென்றால்,ஒன்று புரிகிறது!!மழைக்காலம் ஆரம்பமானது!!இனி,சிறுவசிறுமியர்களின் கொண்டாட்டங்களுக்கு ஓய்விருக்காது!!விதை விதைக்க உகந்த காலம் இதுவே ஆகும்!!!

நன்மை ஒன்று வருமாயின் உடன் தீமையும் வருவது இயல்பல்லவா!!அதுதான் குளிர்காய்ச்சல்!!அது சரமாரியாக மழையின் வாசம் கொண்டாடியவர்கள் அனைவரையும் தாக்கியது.

இளவரசரையும் உட்பட!!!

தனிமையில் அந்தக் கோட்டையில் மிகவும் சோர்ந்திருந்தார்.அவருக்கு துணையாக இரு காவலாளிகளும்,சமையலுக்காக இரு பெண்களும் மட்டுமே இருந்தன...

அரண்மனைக்கும் விவரம் செல்லக் கூடாது என்பது அவரது ஆணையாக இருந்தது.

எனினும்,மனம் பதைத்த காவலர் ஒருவர் ஓலையில் விவரம் எழுதி,தேஜாவிடம் கொடுத்து அனுப்பினார்.

ஆனால்,இளவரசரின் பிரியத்திற்குரிய அது அவரது ஆணையை மீற தயக்கம் கொண்டது.

எனினும்,ஓலையை சுமந்தப்படி வேறொரு மார்க்கத்தில் பயணம் மேற்கொண்டது.

நந்தவனத்தில்...

மலர்களை பறித்துக்கொண்டிருந்த நங்கைகளின் நடுவே யாரையோ தேடியது.

"அங்கு காணுங்கள் ஆதித்யவர்மரின் அஸ்வம்!"-ஒரு சக பெண்ணின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் யாத்ரீகா!!

"தேஜா!"-என்று அதனருகே சென்றாள்.

"என்ன நேர்ந்தது?தனித்து வந்துள்ளாய்!இளவரசர் எங்கே?"-அது தன் முகத்தை திருப்பி ஓலையை சுட்டியது.

அதனை பிரித்து படித்தாள் அவள்.

"இளவரசருக்கு உடல்நலம் சீராக இல்லையா?"-பதறினாள் அவள்.

"என்ன நேர்ந்தது அவருக்கு?"-அது வானத்தை பார்த்தது.

"குளிர்காய்ச்சலா?அது வீரியம் மிகுந்ததாயிற்றே!என் செய்வேன்!நீ கோட்டைக்கு செல்!!நான் ஔஷதங்களை கொண்டு வருகிறேன்!"-தேஜா அவளை செல்லவிடாமல் தடுத்தான்.

"அறிவேன்!அந்த ஔஷதங்கள் வனத்தில் மட்டுமே கிட்டும் என்று!!இளவரசரின் உடல்நலம் சீராக வேறு உபாயமில்லை!!"-அவள் விரைந்து ஓடினாள்.

தேஜாவும் விரைந்தான்!!கோட்டையை நோக்கி!!

அந்த வனத்தைக் குறித்து தந்தையும்,தோழிகளும் கூற கேட்டிருக்கிறாள்!!இன்று நேரில் பார்க்க இன்னும் திகிலாக இருந்தது.

எங்கும் இருள்மயம்!!வெளிச்சமே உட்பட வழியில்லை!!மரங்கள் பசுமையாக அவற்றை தடுத்திருந்தன....

அச்சத்தோடு ஒவ்வொரு அடியாக முன்னேறினாள்.

எங்கோ விலங்குகள் மற்றும் பட்சிகளின் சப்தங்களும் கேட்டன...

அவளது இதயத்துடிப்பு உச்சத்தை தொட்டது.

எனினும் தேற்றிக்கொண்டு தேடி வந்த மருந்தினை தேடினாள்.

அதுக்குறித்து வைத்தியர் கூறியதையும் எண்ணினாள்.

'அந்த மருந்தின் பெயர் நாகவில்வம் மகளே!பார்ப்பதற்கு வில்வ இலையாக தோற்றமளிக்கும் அது ஒரு கொடியாகும்!நாகத்தினை போல வளைந்து காணப்படும்!!ஆயிரம் ராஜநாகத்தின் விஷத்தையும் அதன் ஒருத்துளி சாறு குணப்படுத்தும்!!அதுவே,இதற்கான உபாயம்!!"-அவர் கூறிய கொடியினை தேடினாள்.

எங்கும் தேடினாள் அது கிட்டவில்லை!!

மனம் ஒடிந்த சமயத்தில் ஒரு புறா ஒன்று ஒரு கிளையில் அமர்ந்தது!அதனை கண்டவள் திடுக்கிட்டாள்.

அந்த கிளையில் நாகத்தின் வடிவில் அந்தக் கொடி சுற்றி இருந்தது.

மனம் குதூகலிக்க விரைந்து சென்றாள்.

"இறைவா!"-என்று எண்ணி,அதன் இலைகளை பறித்தாள்.

வேண்டிய அளவிற்கு பறித்தவள்,அங்கிருந்து கிளம்ப திரும்புகையில் பின்னால் அது நின்றிருந்தது.

குரூரமான பார்வையோடு அந்த சிங்கம்!!கண்கள் சிவந்து போயிருந்தன அதற்கு!!சேகரித்த இலைகள் நிலம் விழுந்தன...

ஓரடி முன் வைத்து மேலும் முன்னேறியது அது!!ஓடவும் சிந்தனையின்றி உறைந்திருந்தாள் அவள்.அது ஒரே பாய்ச்சல் அவள் மீது பாய,"ஆ"என்று அலறினாள் யாத்ரீகா!எனினும்,அவளுக்கு ஒன்றும் நேரவில்லை.சில நொடிகளில் கண்கள் திறந்தவள்,அதிர்ந்துப் போனாள்.அந்த சிம்மத்தின் கழுத்தில் நீண்ட வாள் ஒன்று சொருகி இருந்தது.அந்த வாளை பற்றியப்படி அவளருகே நின்றிருந்தார் இளவரசர்.

உறைந்துப் போய் அவரை பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.