யாத்ரா குனிந்து அவனது நெற்றியில் தன் இதழை பதித்தாள்.
விழிகள் மூடியப்படி,
"ஹலோ!எனக்கு ஏற்கனவே கேர்ள் ஃப்ரண்ட் இருக்கா மேடம்!"என்றான் அவன்.
அந்த வாக்கியத்தில் மறைந்திருந்த குறும்பானது அவளது முகத்தை சிவக்க வைத்தது.
"நீங்க தூங்க மாட்டீங்க நான் போறேன்!"
"நான் எழுந்தா தானே!"
"எழுந்திரிங்க!"
"முடியாது!"-அவள் அமைதியாக அவனை பார்த்தாள்.
"அப்படி பார்க்காதேம்மா!அப்பறம் நான் நானா இருக்க மாட்டேன்!"-என்று எழுந்தான் அவன்.
"நான் போன அப்பறம்,ஒழுங்கா தூங்கணும்!புரியுதா!"
"எஸ் மேடம்!"-அவள் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு எழுந்து சென்றாள்.அவள் சென்றதும்,எழுந்தவன் அந்த அறையில் இருந்த அலமாரி ஒன்றை திறந்தான்.
அதில் அது இருந்தது..
அன்று யாத்ரீகையிடமிருந்து இளவரசரிடம் வந்த,சிகை அலங்கார வஸ்து!!ஒரு புன்னகையோடு அதை கரம் ஏந்தியவனின் கண்கள் சில கண்ணீர்த்துளிகளையும் சிந்தவே செய்தன...
மறுநாள் காலை...
"ஏங்க..எழுந்திரிங்க!"-நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பினாள் யாத்ரா.
"ப்ச்..!என்னம்மா இவ்வளவு சீக்கிரம் எழுப்புற?"
"யாரோ வந்திருக்காங்க வாங்க!"
"யாரு?"
"செந்தில்நாதன்னு சொன்னார்!உங்களை பார்க்கணுமாம்!"-அவன் கண்களை கசக்கியப்படி எழுந்து அமர்ந்தான்.
"வெயிட் பண்ண சொல்லு!குளிச்சிட்டு வந்துடுறேன்!"
"சரிங்க..!"-என்று செந்தில்நாதன் அமர்ந்திருந்த இடம் நோக்கி விரைந்தாள்.
"கொஞ்சம் உட்காருங்க சார்!இதோ வந்துடுவார்!"
"சரிம்மா!"
"என்ன சாப்பிடுறீங்க?டீயா?காப்பியா?"
"இல்லம்மா..தப்பா எடுத்துக்க வேணாம்!பொதுவா நான் யார் வீட்டிலும் எதுவும் சாப்பிட மாட்டேன்!"
"ஓ..கொஞ்சம் தண்ணியாவது குடிங்க சார்!வீட்டுக்கு வந்தவர் எதுவும் சாப்பிடாம போனா எப்படி!"
"சரிம்மா!தண்ணி மட்டும் கொடு!"
"சரிங்க சார்!"-என்றவள்,அவரோடு வந்திருந்த இருவரிடம்,
"அண்ணா!நீங்க என்ன சாப்பிடுறீங்க?"என்று வினவினாள்.
"எங்களுக்கும் தண்ணி மட்டும் போதும்மா!"-என்று விடை அளித்தனர் இருவரும்!
ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
செந்தில்நாதனின் மனம் துணுக்குற்றது.
"இவ்வளவு நல்ல குணம் படைத்தவளையா நாசமாக்க துடிக்கிறான் நான் பெற்ற ராட்சசன்!"என்று எண்ணினார்.
சில நிமிடங்களில் வந்தவள்,மூவரின் வேண்டுதல்களையும் பூர்த்தி செய்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் ஆதித்யா வந்து சேர்ந்தான்.அவன் வந்ததும்,இவள் உள்ளே சென்றுவிட்டாள்.
"வாங்க சார்!வணக்கம்!"
"வணக்கம் தம்பி!"
"நான் உங்களுக்கு எதாவது உதவி செய்யணுமா?என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க?"
"தம்பி என் பையன் இந்தக் கோட்டை மேலே ஆசைப்படுறான்!"
"ஓ..அது விஷயமா!"
"ம்.."
"பாருங்க சார்!இது என் அப்பா ஆசை ஆசையா வாங்கின கோட்டை!இது நாலு செங்கல் இல்லை...ஏதோ காரணத்தால அவரோட ஆசையும் இதில் இருக்கு சார்!அந்த ஒரே காரணத்துக்காக தான் நான் இதை விற்க மாட்டேன்னு செல்றேன்!"
"இல்லை தம்பி.."
"புரிஞ்சிக்கோங்க சார்!என்னோட கனவுகளை எல்லாம் நிறைவேற்றின அவருக்காக நான் எதுமே செய்ததில்லை.என்னால முடிந்தது அவரோட நினைவுகளை பத்திரப்படுத்துறது மட்டும் தான்!என்னை மன்னிச்சிடுங்க சார்!என்னால முடியாது!"-மிக பொறுமையாக தனது நிலையை அவன் எடுத்துரைத்தான்.
அவனது பேச்சே அவனது குணத்தையும்,பண்பையும் அவருக்கு விளக்கி இருக்க வேண்டும்!
"சரிங்க தம்பி!நான் வரேன்!"
"தப்பா எடுத்துக்காதீங்க!"