(Reading time: 21 - 42 minutes)

"ல்லை நீங்க இருக்கறது பிடிக்காம சொல்லலை. அது வந்து என்னனா நீங்க நைட் இங்கே முழிச்சிட்டு காலையில ஆபீஸ் போகணும் .. உங்க உடம்புக்கு ஏதாவது வந்தா என்ன பண்றது ..." மது

....

என்ன இவரு கல்லுளி மங்கனாட்டம் எது சொன்னாலும் இப்படியே நிக்க்கிறாரு. நான் பேசறது புரியுதா இல்லையா. என்று மனதிற்குள் குழம்பியவள், ஒரு வேலை உனக்கென்ன இவ்வளவு அக்கறை அப்படினு நெனைச்சிட்டாரோ என்று மீண்டும் குழம்பி "உங்க வீட்டுல தப்பா நெனைக்க மாட்டாங்களா ? எங்க அம்மாக்காக நீங்க இங்க இருந்தா " என்று கேட்டு வைக்க, இத்தனை நேரம் அமைதியாக அவளையே பார்த்திருந்தவன் பார்வை இப்போது அவளை கூர்மையாக துளைத்தது. ஆனால் அந்த பார்வையின் பொருள் தான் அவளுக்கு புரியவில்லை.

கூர்மையான பார்வையால் அவளை துளைத்தவன் எதுவும் பதில் சொல்லாமல் அந்த அறையை விட்டு வெளியே செல்ல அப்போது தான் அவள் உணர்ந்தாள். இங்கு வந்ததில் இருந்து மதி தப்பி தவறி கூட அவளிடம் பேசிட வில்லை.அவளுக்கு வேண்டியதெல்லாம் பார்த்து பார்த்து செய்தான். ஆனால் அவளிடம் பேசவில்லை. அவளை தவிர்த்தான் என்றில்லை. ஆனால் பேசும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லையோ என்று ஒரு நிமிடம் யோசித்தவள் இல்லை நிச்சயம் நாங்கள் இருவரும் தனிமையில் இருந்தும் அவன் அவளிடம் பேச முயற்சிக்கவில்லையே. இதற்க்கு முன் சரணின் திருமணத்தில் சந்திக்கும் பொது தன்னிடம் நெருங்கியவன் அவனின் காதலை என்னிடம் வெளிப்படுத்தும் விதமாக பேசியதும் அவன் அவளை பார்வையால் வருடியதும் நினைவில் வந்தது. ஆனால் இப்ப்போது அவன் அதை போல எதுவும் முயற்சிக்கவில்லை.

அவளின் எண்ணம் இப்படி செல்கையிலேயே அவளின் மனது அவளை கேள்வி கேட்டது."நீ அப்போது என்ன எதிர்பார்க்கிறாய் மது. அவன் உன் பின்னோடு வந்து கெஞ்ச வேண்டும் என்றா ?" என்று கேட்க அவளுக்கு தலையை வலித்தது. அப்படியே தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள். அந்த நேரம் உள்ளே நுழைந்த நர்ஸ் " என்னம்மா என்ன ஆச்சு " என்று கேட்க "ஒன்னும் இல்லைங்க சிஸ்டர் லைட்டா தலையை வலிக்குது அதான்." என்று சொல்ல "அது சரி அங்க சார் என்னடான்னா இப்போதான் தலை வலிக்குதுன்னு சொல்லி டேப்லெட் வாங்கி போட்டாரு நீங்களுமா. ரெண்டுபேரும் கொஞ்சமாவது தூங்குனாதான. சொன்ன கேக்கறதே இல்லை " என்று சொல்லிவிட்டு ரெபோர்ட்ஸை சரி பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்ப, அவர் சொன்னவார்த்தைகளில் மதுவின் மனம் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல் மீண்டும் மதியின் உடல் நிலையை எண்ணி கவலை கொள்ள துவங்கியது தன்னுடைய தலைவலியை மறந்து.

அதன் பின்னும் இதோ இப்போது மங்களம் டிஸ்சார்க் ஆகி செல்லும் வரையுமே மதி அங்கு அவளுடன் தான் இருந்தான் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசாமலே.

கார் வீட்டை அடையவும் மதுவும் தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்து மங்களத்தை கைத்தாங்கலாக பிடித்து வெளியே கூட்டி வர அதற்கும் மோகனாவும் லலிதாவும் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தனர்.

"அப்படியே நில்லுங்க அக்கா" என்றவாறு இருவரும் ஆரத்தி சுற்ற, "என்னம்மா இது " என்று மங்களமும் புன்னகையுடன் கேட்டார்.

"இல்லைக்கா நம்ம வீட்டு மேல யாரோ கண்ணு பட்டிருச்சுக்கா அது எல்லாம் போகட்டும். உள்ளே போங்க" என்று இருவரும் ஆரத்தி கரைசலை வெளியே ஊற்ற செல்ல பாலசண்முகமும் சக்திசண்முகமும் அவர்களை உள்ளே அழைத்து சென்றனர்.

"அண்ணி உங்க ரூமை கீழ மாத்திட்டோம். மதி தம்பி நேத்தே இங்க வந்து பார்த்துட்டு கீழ ரூமை மாத்த சொன்னார். நாங்களும் அது தான் சரினு மாத்திட்டோம். உள்ள போங்கண்ணி. " என்று கூற மங்களம் மதியை திரும்பி பார்த்த பார்வையில் பாசமும் பெருமிதமும் ஒன்றாக தெரிந்தது. மதுவிற்க்கோ பேச மட்டும் மாட்டாராமா ஆனா எல்லார் மனசுளையும் இடம் பிடிச்சிடுவார் என்று அவன் தன்னிடம் இன்னும் பேசாமல் இருப்பதை எண்ணி சிணுங்கும் தன மனதை என்ன சொல்வதென்று புரியவில்லை.

மது தன தாயுடன் உள்ளே செல்ல மதியும் மதுவின் தந்தையிடமும் மற்றவர்களிடமும் எதையோ கூறியவன் உள்ளே வந்து மங்களத்திடம் விடை பெற்று செல்ல , மதுவிற்கு தன்னிடமும் சொல்ல மாட்டானா என்று மனம் ஏங்க அவனோ அவளை பார்க்காமலே சென்று விட்டான். ஓடி சென்று ஜன்னலின் திரைசீலையை விலக்கி பார்த்தாள் காரில் ஏறும் முன்னரேனும் பார்க்க மாட்டானா என்று ஆனால் அவன் பார்க்காமலே செல்ல அவள் முகம் வாடி போனது.

அன்று முழுதும் மங்களத்தின் அறையிலும் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தாலும் முகத்தில் ஒரு தெளிவில்லாமல் தான் சுற்றி கொண்டிருந்தாள். மங்களமும் வீட்டில் இருந்த மற்றவர்களும் இதையெல்லாம் கவனிக்காமல் இல்லை. ஆனால் யாரும் அவளை சமாதானப்படுத்தவோ ஏன் சோர்வாக இருக்கிறாய் என்று கேட்கவும் இல்லை. அவர்கள் யாரும் தன்னிடம் இப்படி கேட்கவில்லையே என்று உணரும் நிலையிலும் இல்லை. அதற்குள் ரகுவும் சரணும் திவ்யாவும் வந்து சேர்ந்தனர். சரணும் திவ்யாவும் ரொம்பவுமே வருத்தப்பட்டனர். பெரியம்மாவை விடவா எங்களுக்கு இந்த ட்ரிப் முக்கியம் என்று புலம்பியவர்களை ஒருவரை சமாதானப்படுத்தி எல்லோரும் ஒரு இயல்பான நிலைக்கு வர மாலை நெருங்கிவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.