(Reading time: 21 - 42 minutes)

"ண்மைதாங்க. ஆனா நம்ம குழந்தைங்கன்னு வரும்போது எவ்வளவு உறுதியான மனசா இருந்தாலும் கொஞ்சம் அசஞ்சு தான் போகுது " -மங்களம்

"புரியுது அண்ணி. நான் இதை பேசணும்னு வரல. எங்க வீட்டுலையும் உங்க உடம்பு கொஞ்சம் குணமானதும் அப்பறம் பேசலாம்னு தான் சொன்னாங்க. ஆனா ஒரு அம்மாவா உங்க மனசு எனக்கு புரியுது. உங்களுக்கு இப்போ என்ன மருந்து தேவைனும் எனக்கு புரியும். அதனால தான் கேக்கறேன். " என்றவரை ஒரு வித ஆச்சர்யத்ததோடு  பார்த்தனர் அனைவரும். அதுவரை விரல்களை பிரித்து கோர்த்தபடி இருந்த மது அவர் என்ன சொல்ல போகிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தன்னுடைய விரல்களுக்கு ஓய்வு கொடுத்து நிறுத்தினாள்.

"அண்ணி அண்ணா என்னைக்கு என் பையனுக்கு உங்க பொண்ணை பார்த்தோமோ எப்போ என் பையன் உங்க பெண்ணை பிடிச்சிருக்குனு சொன்னானோ அப்பவே அவ எங்க வீட்டு பொண்ணாயிட்டா. அவளுக்கு ஒரு பிரச்சனைனா நாங்க வேண்டாம்னு விட்டுடுவோமா. நிச்சயமா இல்லை. அவ தான் எங்க வீட்டு மருமக. அதை யாராலும் மாத்த முடியாது. என்ன இதெல்லாம் கொஞ்சம் முன்னமே தெரிஞ்சிருந்தா அண்ணி இப்படி ஹாஸ்பிடல் வரைக்கும் போகவேண்டியது வந்துருக்காது. அண்ணா அண்ணி எனக்கும் என் குடும்பத்துக்கும் எல்லா விஷயமும் தெரியும் அதுக்கு அப்பறம் தான் நான் இந்த முடிவுல உறுதியா இருக்கேன். உங்களுக்கு இதுல சம்மதமா " என்று கேட்டவரை கண்களில் நீர் மின்ன முகம் முழுதும் நிறைந்தபுன்னகையோடு அணைத்து கொண்டார் மங்களம்.

"நீங்க என்னை அண்ணி அண்ணின்னு வெறும் வாய் வார்த்தையா கூப்பிடலைனு எனக்கு தெரியும் ஆனா உங்க குடும்பம்,  உங்க பையனுக்கு என் பொண்ணு மருமகளாக வருவது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. எனக்கு இப்போ செத்தாலும் சந்தோசமா சாவேன்." என்று அழுதவரை "அண்ணி நல்ல விஷயம் பேசும் பொது என்ன இப்படி பெரிய வார்த்தையெல்லாம் சொல்றிங்க. கண்ணை தொடைங்க. என்ன எல்லாரும் ஒன்னும் பேசாம இப்படி திரு திருனு முழிக்கிறிங்க " என்று கேட்டவரை பார்த்து, மதியின் அப்பாவோ " நீ போட்டது சாதாரண அணுகுண்டு இல்லம்மா பொக்ரான் குண்டு " என்று சிரிக்க எல்லோர் முகத்திலும் புன்னகை அரும்பியது. மதுவின் நிலையோ முற்றிலும் வேறாக இருந்தது. நடந்ததன் தாக்கம் அவளுக்குள் இறங்கவே அவளுக்கு வெகு நேரம் பிடித்தது. இதுநிஜமா இல்லை கனவா. ஒன்றும் புரியவில்லை. தன்னை பற்றிய உண்மை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது என்பதே அவளுக்கு பேரதிர்ச்சி.இதனால் தான் தன்னுடைய அம்மாவுக்கு உடல் நிலை சீர்குலைந்து என்பது அடுத்த அதிர்ச்சி. இதை எல்லாம் விட மிகப்பெரும் அதிர்ச்சி மதியின் வீட்டினருக்கும் இந்த உண்மை தெரிந்திருந்தும் அவர்கள் இந்த திருமணத்தை நடத்த விரும்புவது. யாருடைய முகத்தையும் நிமிர்ந்து பார்க்கும் தெம்பின்றி அமர்ந்திருத்தவளின் அருகே வந்தார் அபிராமி.

"மது " என்று அவள் தாடையை பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தினார்.

"என்னடா , இந்த விஷயத்துல உன்னுடைய தப்பு என்ன இருக்கு? நீ எதுக்குடா தலையை குனிஞ்சிருக்க.என்னுடைய அனுபவத்துல நெறைய சுயநலமான பெண்களை பார்த்திருக்கேன். கல்யாணம் ஆனதும் தன் கணவரின் பெற்றோரை மதிக்கமா இருக்கற பெண்கள், தன் மனைவியின் பெற்றோரை மதிக்காத ஆண்கள். தங்கள் இன்பம் மட்டுமே முக்கியம் என்று என்னும் மனிதர்கள். இவங்களுக்கு மத்தியில மதியின் மேல் உனக்கு அன்பு இருந்தும் அவனுக்காகவும் அவன் குடும்பத்துக்காகவும்னு யோசிச்சிருக்க. இந்த நல்லா மனசு எத்தனை பேருக்கு வரும்.பிறந்ததுல இருந்து நமக்காக கஷ்டப்படற பெற்றவர்களை முதியோர் இல்லத்துல தளர இந்த காலத்துல உனக்கு ஒரு பிரச்சனை வரும்போது அதுக்காக அவங்க கவலைப்பட கூடாதுனு எல்லா கஷ்டத்தையும் உன் மனசுல சுமக்கற. இந்த விபத்தினால் உன் உடலில் ஏற்பட்ட ஒரு சின்ன குறைக்காக இந்த பத்தரை மாற்று தங்கத்தை வேண்டாம்னு சொல்லிடுவோமா " என்றவரை கட்டி கொண்டு அழுதாள்.

யாரும் அவளை அழ வேண்டாம் என்று சொல்லவில்லை. அவள் கண்களில் வழிவது கண்ணீர் அல்ல. அவள் மனதில் தேக்கி வைத்திருந்த பாரங்கள் என்பதை எல்லோரும் உணர்ந்தே இருந்தனர். தன் மகளின் அருகே அமர்ந்து அவளின் முதுகை மெல்ல வருடி கொடுத்தார் மங்களம். அவளின் கைகளை பிடித்து அழுத்தி கொடுத்த்தாள் திவ்யா.எல்லோர் கண்களிலும் கண்ணீர் நிறைந்திருக்க எல்லோர் மனமும் நிறைந்திருந்தது. அந்த நேரம் சிவசண்முகத்தின் மனமோ இந்த அளவுக்கு இந்த பிரச்னைக்கு தீர்வை கொடுத்த முரளிக்கு மனமார நன்றி சொன்னது.

மதியின் குடும்பத்தினர் கிளம்பியபின் அங்கே நிலவிய அமைதி அந்த வீட்டில் மட்டுமல்ல எல்லோர் மனத்திலும் நிலவியது.யாருக்கும் இரவு உணவை உண்ணும் எண்ணம் இல்லை. பெரியவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க சிறியவர்கள் மதுவின் அறைக்குள் நுழைந்தனர்.

நீண்ட நாட்களுக்கு பின் மனதில் எந்த பாரமும் இன்றி தன் தங்கையிடம் பேசப்போகும் ஆர்வத்துடன் சரணும் ரகுவும் இருந்தனர்.

"ஹே வாலு " –ரகு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.