(Reading time: 15 - 30 minutes)

ண்ணா இவங்க ஆரம்பிச்சா பாசமலர் படத்தை நிறுத்தமாட்டாங்க வாங்க கிளம்பலாம் -சாக்ட்சி..

நால்வரும் சற்று தூரத்திலிருந்த அந்த பெரிய ஹோட்டலை அடைந்தனர்..பேச்சும் சிரிப்புமாய் நேரம் கழிய அதே சந்தோஷத்தோடு நால்வரும் வெளியே வந்தனர்..காரை எடுப்பதற்காக ராமும் பரணியும் செல்ல எத்தனிக்க எங்கிருந்தோ வேகமாய் வந்த ஒருவன் மகியின் செயினை அறுத்து கொண்டு ஓட கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த நிகழ்வில் பெண்கள் இருவருமே அதிர்ச்சியில் உறைந்து நிற்க..பரணி காரையெடுத்து அவனை பிடிப்பதற்காக ஓட அதற்குள் ராம் திருடனின் பின் ஓட ஆரம்பித்திருந்தான்..மகியோ பயத்தின் உச்சியிலிருந்தாள்..இழுத்த வேகத்தில் கழுத்தில் ஒரு துளி ரத்தம் எட்டிபார்த்தது..சாக்ட்சி அவளை ஓரமாய் அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தாள்..1/2 மணி நேரம் கழித்து பரணியும் ராமும் வர தன்னவளின் நலத்தை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து கிளம்பினர்..மகியின் மௌனம் ஏனோ ஒருவித பயத்தை கொடுத்தது ராமிற்கு..இருந்தும் பரணி முன்னால் எதுவும் காட்டிகொள்ளவில்லை..பரணியும் சாக்ட்சியும் அமர்நாத் பவன் அருகில் இறங்கிக் கொள்ள சிறிது தூரத்தில் ராம் காரை நிறுத்தினான்..

குட்டிமா ஆர் யு ஓ.கே??கழுத்துல பெய்ன் எதுவும் இருக்காடா??

அவனை நேர்பார்வை பார்த்தவள் பொங்கி வந்த அழுகையோடு  இறுக கட்டிக் கொண்டாள்..ராமிற்கோ என்ன செய்வதென்று புரீயவில்லை..மகி இங்க பாரு..குட்டிமா என்னடா??ஹேய் என்னடீ??அவளை தன்னிடமிருந்து பிரித்து உலுக்கினான்..எதுக்கெடுத்தாலும் அழறத நிறுத்து மொதல்ல என்னாச்சு சொன்னாதான தெரியும்..

நீங்க ஏன் இப்படி பண்ணீங்க??

நானா நா என்னடீ பண்ணேன்..சத்தியமாய் தெரியவில்லை அவனுக்கு..

எதுக்கு அவனை பிடிக்க போனீங்க செயின் போனா பரவால்ல உங்கள எதாவது பண்ணிருந்த.தான்னா..அவன் கையில வெப்பன் எதாவது இருந்திருந்தா??அழுகையின் நடுவே தேம்பி தேம்பி கூறிமுடித்தாள்..

ராமிற்கோ மனதில் மழைச்சாரல்..என்னை பற்றி யோசிக்கிறாள்..என் காதல் விதியை வென்றுவிடும்..பழைய நினைவுகள் இல்லையெனினும் இந்த நொடி அவளுக்கு தெரிந்த ராமை அவளது கணவன் என்ற கட்டாயத்தினாலன்றி ஒரு நண்பனான என்னை அவளுக்கு பிடிக்கிறது..இது போதும் என் மகி எனக்கு கிடைத்து விடுவாள் என்ற நம்பிக்கை முழுவதுமாக வந்துவிட்டது என தனக்குள் பூரித்து கொண்டிருக்க மகியோ அழுகையை விடுவதாயில்லை..

மகி பாருடா அதான் ஒண்ணும் ஆகலல..கண்ணதுடை மொதல்ல..அது உன்னோட ப்வேவெரட் செயின்ல அதனாலதான் போனேன்..இப்போ பாரு அது உனக்கே திரும்ப வந்துடுச்சு என அவளிடம் நீட்ட கண்ணீரையும் தாண்டி கண்களில் ஒரு மின்னல் அவளிடம்..ராம்…

ஏன்டா இவ்ளோ எமோஷனல் ஆகுற??நா என்ன பத்திரமா பாத்துப்பேன்டா அப்போதான உன்ன நல்லா பாத்துக்க முடியும்..அதனால எனக்கு ஒண்ணும் ஆகாது கவலபடாத..சரியா எங்க சிரி பாக்கலாம்..ப்ளீஸ் எனக்காக..இவ்வளவு பேசியும் அவள் முகத்தில் தெளிவில்லை..

மகி நீ இப்படி இருக்கவே மாட்டியே..எவ்ளோ போல்டான பொண்ணு தெரியுமா நீ..இந்த சின்ன விஷயத்துக்கு இவ்ளோ பயப்படுறியே..அவளை தோள்மீது சாய்த்தவாறு ஆறுதல் கூறினான்,..

இல்ல ராம் ஏன்னு தெரில சில நேரங்கள்ல இப்படிதான் இருப்பேன்..அது என்னையும் அறியாமல் எனக்குள் வரும் பயம்..எப்போவுமே நம்ம மனசுக்கு க்ளோஸ்ஸா இருக்குறவங்கள பத்தி நினைக்கும் போது கெட்டதுதான் முன்னாடி வந்து நிக்குமாம்..அது அவங்க நல்லாயிருக்கனுமேநு நாம பயப்படுற பயம் நம்மள எதிர்மறையாதான் யோசிக்க வைக்கும்நு சொல்லுவாங்க..அதுமாறி தான் நானும்..அப்பாவோட டெத் நா எக்ஸ்பெக்ட் பண்ணாத நேரத்துல நடந்ததுனாலயோ என்னவோ எங்கம்மா ஆபீஸ் போயிட்டு வர ஒரு பத்து நிமிஷம் லேட் ஆனாலும் மனசுல சிந்தனை எங்கெங்கயோ போய்டும்..அதுமாறி தான் இப்பவும்..நீங்க வர்றதுக்குள்ள என் உயிர் என் கைல இல்ல..ஒண்ணும் ஆகாதுநு மண்டைக்கு உரச்சாலும் மனசு அத ஏத்துக்கல..

கேட்டுக் கொண்டிருந்தவனோ தன்னவளின் கைகளை ஆதரவாய் பற்றினான்..சில நிமிட மௌனம் அவர்களை ஏதோ ஒரு உலகத்திற்கு கொண்டு செல்ல அருகில் சென்ற வண்டி ஹாரன்லில் நடப்புலகிற்கு மீண்டு வந்தனர்…சட்டென மகி விலகி அமர மென்னகையுடன் காரை கிளப்பினான் ராம்..

மறுநாள் வழக்கம் போல் சாக்ட்சி மகி வீட்டிற்கு வந்திருந்தாள்..ஹாய் அண்ணி..எப்படி இருக்கீங்க..நெக் பெய்ன்லா இல்லல..

வாடா..அதெல்லாம் ஒண்ணுமில்லை நல்லாயிருக்கேன்..நீ வா என்ன சாப்டுற??

ஒண்ணும் வேண்டாம் அண்ணி…நீங்க என்ன ரொம்ப பரபரப்பா இருக்கீங்க??

அதுவா இன்னைக்கு கிருஷ்ண ஜெயந்திடா..எனக்கு ரொம்ப பிடிச்ச கடவுள் கிருஷ்ணர்..அதான் இன்னைக்கு அவருக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சு பூஜை பண்ணலாம்நு இருக்கேன்..ஈவ்னிங் வந்துரு சரியா பரணி அண்ணாக்கும் சொல்லிருக்கேன் வரேன்னு சொல்லிருக்காரு..

ஓ..சூப்பர் அண்ணி குடுங்க நானும் எதாவது ஹெல்ப் பண்றேன்..

இல்லடா ஓரளவு முடிச்சுட்டேன் நீ உக்காரு..

வாவ் ஸ்மெல்லே செமயா இருக்கு அண்ணி..இதுக்காகவாவது நா கண்டிப்பா வருவேன்..ஆனா அண்ணி எனக்கொரு டவுட்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.