ஒரு ஆச்சரிய பார்வையை செலுத்தியவள்,உண்மைதான் சாக்ட்சி..நா ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததுல இருந்தே அவரு ஒழுங்கா சாப்பிடறதேயில்லை..ஒண்ணு வேலைனு அவசரமா கிளம்பிடுவாரு இல்ல ஏதாவது மனசு சரியில்லநு சொல்லிடுவாரு..அதான் பூஜைய ஒரு காரணமா வச்சு உங்களையும் கூப்பிட்டா கொஞ்சமாவது சகஜமா இருப்பாரேனு தான்…
அண்ணாவுக்காக இவ்ளோ யோசிக்குறீங்கனா அவரோட காதலை புரிஞ்சுகிட்டீங்களா?? ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது அவள் குரலில்..
அவரோட காதல் குழந்தைக்கு கூட புரியுமே சாக்ட்சி நிஜமா என்ன இப்படி லவ் பண்ண எங்கம்மாவாலகூட முடியாது..அவரு பண்ற சின்ன சின்ன விஷயத்துலயும் என் மீதான காதல் வெளிப்படும்டா அப்புறம் எப்படி நா புரிஞ்சுக்காம இருப்பேன்..
அண்ணி என அவளை கட்டி கொண்டாள்..அப்போ சீக்கிரமாவே என்னோட அண்ணா அண்ணிய பழையமாறி பாக்க போறேனா ஜாலி என மகியின் கழுத்தை கட்டிகொண்டு ஆடினாள்..
அவள் கைகளை மெதுவாக பிரித்தவள் இல்ல சாக்ட்சி அப்படிலா எதுவுமில்லை..
ஏன் அண்ணி அதான் எல்லாம் சரி ஆய்டுச்சே அப்பறம் என்ன??
அது..எப்படி உனக்கு சொல்றதுநு தெரில..அவரு பாவம்டா..என் மேல உயிரையே வச்சுருக்காரு..இப்போ நாங்க என்னதான் ஒரு ப்ரெண்டா பேசிகிட்டாலும் அந்யோண்யமாயில்லடா அவரையும் அறியாம ஒரு தவிப்பு,பயம் அவர்கிட்ட இருக்கும்..அதாவது காதலிச்சு கல்யாணம் பண்ணி வாழ்ந்தவகிட்டயே இப்போ ஏதோ புது மனுஷனா பழகுறது எவ்வளவு கஷ்டம்..அதேமாதிரி எனக்கு பழைய நியாபகங்களே இல்லாம அவரோட காதலை ஏத்துகிட்டு வாழ ஆரம்பிச்சாலும் அது இரட்டை வாழ்க்கையாதான் இருக்கும்..என்னால இனி அவருக்கு எந்த கஷ்டமும் இருக்ககூடாதுநு நெனைக்குறேன்..அதனால என்னோட இந்த காதலை அவர்ட்ட சொல்லாமயிருக்குறதுதான் நல்லதுநு படுது..
ஒருவேளை உங்களுக்கு பழைய நினைவுகள் வராமயே போய்டுச்சுனா???
ம்ம்ம் அதுக்கு காலமும் கடவுளும் தான் பதில் சொல்லனும்..என சிரித்தபடி அவளை கடந்து சென்றாள்..
காலம் என்ன பதில் கூறப்போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்..
ஹாய் ப்ரெண்ட்ஸ்,.இந்த எபிஸோடும் மகி ராம்க்காக தான்..ராமோட மூவ்லா சீக்ரெட்டா இருக்கணும்ல அதனால இவங்க ரொமாண்ஸ்ஸ என்ஜாய் பண்ணுங்க
தொடரும்
{kunena_discuss:952}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.