(Reading time: 15 - 30 minutes)

ன்ன சாக்ட்சி சொல்லு??

இல்ல கிருஷ்ணருக்கு பிடிச்ச ஐட்டம்ஸ விட உங்க  ராமருக்கு பிடிச்சதுதான் நிறையயிருக்கு போல..

ஹே அப்படிலாம் ஒண்ணுமில்லை..என அழகாய் சிரிக்க..

ம்ம்ம் ஓ.கே ஓ.கே..நடத்துங்க நா எதையும் பாக்கலப்பா..

மாலை ராம் வீட்டிற்கு வர வாயிலில் மாவிலை தோரணம் தொங்க வாசல் படிகளில் சின்ன கண்ணணின் பிஞ்சு பாதங்கள் அவனை வழிநடத்தின..என்னடா இது நம்ம வீடுதானா..மகி என்னலாமோ பண்ணிருக்கா போல..என்றவாறு காலிங் பெல்லை அழுத்திவிட்டு கதவு திறக்க காத்திருந்தான்…கதவு திறக்க உள்ளிருந்து இரண்டு மூன்று வாண்டுகள் வெளியே ஓட என்னடா நடக்குது இங்க என உள்நுழைய ஹேய் எங்க ஓடுறீங்க நில்லுங்க..ஆன்ட்டி சொன்னா கேக்கனும் என்று தலையில் பூவை வைத்தவாறே வேகமாய் வெளியே வந்தவள் ராமின் மேல் முட்டி நின்றாள்..மயில் கழுத்து நிற புடவையில் ஒயிலாய் மயில் போலவே தன்முன் நின்றவளை பார்த்தவனோ வேறென்னங்க மயங்கி விழாத குறைதான்..லேசாய் அசடு வழிந்தவள் என்னங்க சீக்கிரமாவே வந்துட்டீங்க..

ம்ம்ம் வேலை முடிஞ்சுதுடா ஆமா என்ன வீடே புதுசாயிருக்கு..பட் நைஸ்..அம்மாவும் இப்படிதான் பண்ணுவாங்க ரொம்ப வருஷமாச்சு..இதெல்லாம் பாத்து சரி நா ப்ரெஷ் ஆய்ட்டு வந்துறேன்..என அவளை தாண்டி அறையினுள் நுழைந்தவன் திரும்பி,அஸ்யுஷ்வல் யு ஆர் கார்ஜியஸ் குட்டிமா என சொல்லத்தவறவில்லை..

பரணியும் சாக்ட்சியும் வந்துவிட பூஜையை ஆரம்பித்தாள் மகி..கிருஷ்ணருக்கு பிடித்த அவல் பாயாசம்,வேர்க்கடலை உருண்டை,கார சீடை,இனிப்பு சீடை,முறுக்கு என அனைத்தையும் கிருஷ்ணருக்கு நெய்வேத்தியம் செய்து ஆரத்தி எடுத்து முடித்தாள்..அனைவரும் மனமாற அந்த மாயக்கண்ணனை வேண்டிக் கொள்ள அந்நாளின் நாயகனான அந்த சின்ன கண்ணன் தன் செவ்விதழை விரித்து தன் முன் இருப்பவர்களுக்கு தன்னுடைய மாய புன்னகையை பரிசளித்தான்..கண்மூடி நின்றவர்களின் கவனத்தை கலைத்தது மகியின் அழகான குரலில் வெளிப்பட்ட பாடல்…

கண்ணனுக்கு என்ன வேண்டும்

கண்ணனுக்கு என்ன வேண்டும்
தினமும் உதிக்கும் பொன்மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல்மலரோ
உன்னை எண்ணி ஏங்கித்தவிக்கும்

உள்ளம் என்னும் மலரோ
சொல்லு கண்ணா சொல்லு கண்ணா
(
கண்ணனுக்கு என்ன வேண்டும்)
நதி வழி ஓர் ஓடம் போவது போலே
விதி வழி என் உள்ளம் உன் புகழ் பாடும்
தூரிகைகள் தீட்டாத ஓவியம் நீயே
பாரில் உனைப் பாடாத காலங்கள் வீணே
உன்னைப் போற்ற மண்ணின் மீது
உள்ளம் உண்டு கோடி கோடி
உந்தன் உள்ளம் என்னவென்று சொல்லு கண்ணா

கண்மூடி பாடிக் கொண்டிருந்தவளின் கண்களிலிருந்து இருதுளி நீர் வெளிபட மூவருக்குமே அவளது மனநிலைமை புரிந்துதான் இருந்தது..ராம் லேசாய் மகியின் தோளை அழுத்த சூழ்நிலை உணர்ந்து கண்களை துடைத்தபடி அனைவருக்கும் தீபாராதனை தட்டை நீட்ட மூவரும் வணங்கிவிட்டு ஹால் சோபாவில் அமர்ந்தனர்..

மகி சூப்பர் போ..லைவ்ல பர்ஸ்ட் டைம் இப்படி செலப்ரேட் பண்றேன்..மனசே லேசானமாறியிருக்குடா..-பரணி..

ஆமா அண்ணி..நானும் தனியா இருந்ததால இதெல்லாம் பாத்ததேயில்ல..மேரேஜ்க்கு அப்பறம் உங்கள்ட்ட தான் கத்துக்கனும்.

அதுக்கென்ன சாக்ட்சி சொல்லி குடுத்துட்டா போச்சு..சரி நீங்க பேசிட்டுயிருங்க நா பலகாரம் எடுத்துட்டு வரேன்..

அவள் பின்னே சென்ற சாக்ட்சியும் உதவி செய்ய ஆண்கள் இருவருக்கும் கொடுத்துவிட்டு இரவு உணவிற்கு அனைத்தையும் டேபிளில் வைத்து கொண்டிருந்தனர் பெண்கள் இருவரும்..

அண்ணி உங்ககிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே??

என்னடா ஏன் இப்படி கேக்குற??என்கிட்ட நீ தாராளமா ப்ரீயா பேசலாம்..சொல்லு…

இல்ல அது...வந்து…

என்னடா? ?

நீங்க இன்னைக்கு பண்றது எல்லாத்துக்கும் கிருஷ்ண ஜெயந்தி ஒரு காரணமா இருந்தாலும் அண்ணா நேத்து அந்த திருடன பிடிக்க போனப்போ நீங்க ரொம்பவே பயந்துட்டீங்க அதுனால தான இன்னைக்கு இந்த பூஜையெல்லாம்..என்னதான் கிருஷ்ணருக்கு பிடிச்ச பலகாரமெல்லாம் பண்ணிருந்தாலும் அது அண்ணாக்கும் பிடிச்சதாதான் பண்ணிருக்கீங்க தான..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.