(Reading time: 24 - 47 minutes)

வளது பேக்கில் 500ரூபாய்தான் இருந்தாலும்…..கார்டில் இந்த 800 பே பண்ண முடியும்தான்…….ஆனால் அது அந்த அட்டென்டர் முன்னால ஒரு வைஃபோட வேலையா தோணுமா என்ற நினைவில் விவன் காட்டிய சேரில் போய் உட்கார்ந்து கொண்டாள்….. அவன் இதற்காகத்தான் இவளை விலக்கி அனுப்பி இருப்பான் என்பதும் இவளுக்கு புரிகிறது…

இப்போது பர்ஸை தன் பேண்ட்ஸ் பாக்கெட்டில் சொருகியபடியே வந்து இவள் அருகில் அமர்பவனை ஏறிட்டுப் பார்க்கிறாள்….

“எவ்ளவு நாள் இப்டி ட்ராமாபோட்டு எல்லோரையும் ஏமாத்த?” ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்னு அட்டென்டரை நம்ப வைத்ததை சுட்டிக் காட்டி குத்தினாள்.

“முதல்ல இப்ப டாக்டர பார்த்துட்டு வந்துட்டு அப்றமா இதெல்லாம் பேசி முடிக்கலாம்” என அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டான் அவன்…

அடுத்து தன் மொபைலை எடுத்து அவன் குடையத் தொடங்க…..இவளுக்கு சுற்றும் முற்றும் பார்ப்பதை தவிர வேறு வேலையில்லை…. விழி சுழற்றினாள்….

சுற்றிலும் பல்வேறு பருவங்களில் தாய்மை ரூபங்கள்…..ஏனோ பார்க்க பார்க்க இன்னும் பக் பக் என்கிறது.

அவசரமாய் அதை அவாய்ட் செய்தால்….. அடுத்து என்ன நினைக்க வேண்டும் எதை நினைக்க கூடாது என்ற குழப்பம் மீண்டுமாய் இவளை பிடித்து பீடிக்கிறது…

அதிலிருந்து தப்பிக்க அருகிலிருந்தவன் புறமாய் திரும்பிப் பார்த்தால்…..அவன் கையிலிருந்த மொபைலின் போட்டோக்களில் கலந்திருந்தான்…. இந்த சூழலில் இவனால் இப்படி இத்தனை இயல்பாய் எப்படி இருக்க முடிகிறதாம்?

அவன் முகத்தை முதல் முறையாக ஆழ்ந்து பார்த்தாள்….. சிறுவயதிலேயே எப்போதும் அவன் முன் முடி சற்று கலைவதும்…அவன் அதை கலைக்கிறானா சரி செய்கிறானா என வித்யாச படுத்த முடியாதவாறு கலைத்து சரிசெய்வதுமான நிகழ்வின் முக்கிய பங்குதாராகிய அவன் முன் முடி இப்போதும் கூட சற்றே சற்று கலைந்து கிடப்பதும்….

புன்னகை என சொல்லிவிட முடியாத அளவிற்கு ஒரு மைக்ரோ புன்னகை முகம் முழுவதும் விரவிக் கிடப்பதும்…..ஆண்களுக்கு கூட பெரிய கண்கள் இருக்குமோ…சற்று பெரியக் கண்கள் தான் அவனுக்கு……அதில் அந்த புன்னகை சென்று  கலந்து கிடப்பதும்…..

அவன் பழக இலகுவானவன் என்ற ஒரு எண்ணத்தைக் கொடுக்க…..அளவெடுத்து ஆங்கிள் பார்த்து செதுக்கியது போன்ற அவன் மூக்கும்…..இறுகிய தாடையும்…..  என்னதான் ஃப்ரெண்ட்லி பேர்சன் என்றாலும் எதிலும் கோடு கிழித்து எல்லைப் குறித்து அதை தாண்டாமல் இருப்பவன் போலும் என உணரச் செய்ய…….

சிரிப்பை சுமக்க படைக்கப்பட்ட இதழ்கள் சும்மா கிடப்பதும்….அதை தவிர அனைத்திலும் அந்த புன்னகை அசைவாடியதும் போன்ற ஒரு இயல்நிலை முரண் இவளை ஏதோ வகையில் தாக்குகிறது….

இந்த முரண்தான் இவளை சீரழித்து விட்டதோ….? அதற்கு மேல் தன் எண்ணக் குதிரை ஓடாதவாறு தடையிட்டு நிறுத்தினாள்…..இதெல்லாம் இப்ப நினைக்கிறதால நடக்கப் போற நல்லது என்ன….? முதல்ல டாக்டர பார்த்துக்கலாம்.

அவனைப் பார்ப்பதையும் தவிர்த்து  தலை குனிந்து தன் நெற்றியை  இடக்கையால் இவள் தாங்க….

இப்போது இவள் புறமாக திரும்பியவன்…. “தப்பா நினைக்கலைனா….இத வேணும்னா பாரு….. என் சிஸ்ட்டரோட மேரேஜ்…..இன்னைக்கு மார்னிங் தான் நடந்துது…. “ தன் மொபைலை இவள் புறமாக நீட்டினான்…

அதிர்ந்து தான் போனாள் ப்ரியா….ஏன் இந்த சூழலிலும் அவனால் ஃபோட்டோ பார்க்க முடிகிறது என ஒரு கணம் புரிந்தாலும்….. மறுபக்கம் கல்யாண வீட்டைவிட்டுட்டு இவன் இங்க வந்துட்டா….?? என்ற கேள்வியும் வாடகை இன்றி வந்து நிற்கிறது….

‘இவனுக்கென்ன….இவன் தங்கையத்தான அங்க தலைய உருட்டுவாங்க உன் அண்ணன்காரன எங்கன்னு…..’  இவள் எதையும் கேட்கும் முன்னமும்…. அவனே சொல்ல தொடங்கினான்.

“ஏர்லி மார்னிங் மேரேஜ்….. மதியத்துக்குள்ள எல்லா செருமனியும் முடிஞ்சு மாப்ள வீடு போர்ரூர்லதான்……அங்க போய்ட்டாங்க….நீ வந்தியே அதுக்கு கொஞ்சம் முன்னாலதான் நான் அங்க இருந்து வீட்டுக்கு வந்தேன்….இது அவளுக்காக வாங்கின வீடுதான்…..மத்தபடி நான் இருக்றது ஓஎம்ஆர் பக்கம்…..”  துள்ளலாய் தங்கையைப் பற்றி ஆரம்பித்தது போல் பட்டது அவன் பேச்சு முறை….

அந்த பாண்டிய சேனாதிபதிக்கும் தங்கைய பிடிக்கும் என ஏனோ நியாபகம் வருகிறது இவளுக்கு….

இதே நேரம் இங்கு வந்து நின்றான் சிற்பி…”சாரி ப்ரியா இவருக்கு ஃபோன் செய்தேன்…. ஹாஸ்பிட்டல் வந்துறுக்கீங்கன்னு சொன்னார்…… தனியா எப்டி சமாளிப்பீங்களோன்னு….” தான் வந்ததை ப்ரியா தொந்தரவாக உணர்வாளோ என்ற தயக்கம் அவன் குரலில்….

 “உங்களுக்கு ஃபோன் செய்தோம் நானும் ராகாவும்…நீங்க அட்டென் செய்யலை…..” இவளுக்கு என்னமோ எதோ என பதறிப் போய் அவன் வந்திருக்க வேண்டும்……ஆனால் இவள் வந்திருப்பது எதற்காக என சிற்பிக்கும் புரியும்தானே……ஆக இப்படி ஒரு தடுமாற்றமும்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.