(Reading time: 22 - 44 minutes)

வனுக்கு ஒரு சின்ன வேலை இருக்காம்டா முடிச்சுட்டு நேரா வந்துறேன்னு சொல்லிருக்கான்..அதுவும் போக நம்ம மேரேஜ் சடன்னா பிக்ஸ் ஆனதால நிறைய பேர் வரல அதான் நாம சீக்கிரம் போறோம் மத்தபடி பார்ட்டிக்கு இன்னும் டைம் இருக்கு..

ஓ..சரி..

இவ்வாறாக அந்த ரெசாட்டை அடைந்திருந்தனர் இருவரும்..காரை பார்க் பண்ணிவிட்டு உள்ளே செல்ல அமைதியாய் இருந்தது அந்த இடம்..இங்கதான சொன்னாங்க இன்னும் யாரையும் காணோமே என்று எண்ணியபடியே அவர்களுக்கென ஒதுக்கியிருந்த காட்டேஜ் கதவை திறக்க..பலுன்,பாப்பர்ஸ்.பூக்கள் என அவர்கள் தலையில் விழ திடீரென நடந்ததில் பயந்து ராமின் கைகளை இறுக பற்றி கொண்டாள் மகி..

வெல்கம் வெல்கம் மிஸ்டர்&மிஸர்ஸ் ராம்…என அனைவரும் ஆர்பரிக்க நிலைமை அறிந்து சட்டென கையை விடுவித்தாள்..அத்தனை ஆர்பரிப்பிலும் ராம் மகியிடம்,குட்டிமா ஆர் யு ஓ.கே??பசங்க எப்பவும் இப்படிதான் எதாவது அதிரடியா பண்ணிடுவாங்க..நீ ஒண்ணும் நினைச்சுக்காத..என கூற தவறவில்லை..

அனைவருக்கும் மகியை அறிமுகப்படுத்தினான்..அங்கே ஆண்களே அதிகமாயிருக்க நான்கைந்து பெண்கள் மட்டுமே..அனைவருமே  மகியிடம் இயல்பாக பழகினர்..அறிமுகபடலம் முடிந்து ராம் மகியை நடுவில் அமர வைத்து மற்றவர்கள் சுற்றி அமர்ந்து கொண்டனர்..

ரியலி யு போத் ஆர் மேட் பார் ஈச்சதர்டா ராம்..கங்க்ராட்ஸ்..

சாரி சிஸ்டர் ராம் எங்க எல்லாருக்குமே ஒரு நல்ல ப்ரெண்ட்..அவன் தான் எங்க பேட்ச்ல கடைசியா கல்யாணம் பண்ணிப்பான்னு நினைச்சோம் பாத்தா அப்படியே ஆப்போஸிட்டா முதல்ல உங்க மேரேஜ் தான்..அதுவும் லவ் மேரேஜ்ன உடனே செம்ம ஷாக் அதனாலதான் இப்படி ஒரு வெல்கம் பார்ட்டி தப்பா எடுத்துக்காதீங்க..என விளக்கம் அளிக்க..அவளின் நிலையறிந்தவன் தானே பதிலளித்தான்..

டேய் போதும்டா ப்ளான் பண்ணி பழிவாங்கிட்டு அப்புறம் என்ன தப்பு ரைட்டுநு..-ராம்..

சிறிது நேரத்தில் மகியும் அனைவரிடமும் சகஜமாய் பேச ஆரம்பித்திருந்தாள்..இப்படியே விட்டுருவோம்நு நெனைக்காதீங்க..உங்க லவ் ஸ்டோரி பத்தி சொல்லுங்க..சிஸ்டர் இவனெல்லாம் எப்படி வழிக்கு கொண்டு வந்தீங்க ரொம்ப கஷ்டமாச்சே..விரைப்பால திரிஞ்சுருப்பான்..

மகியின் முகமோ வாடிவிட்டது அவளுக்கே தெரியாதே எப்படி காதலித்தார்கள் எவ்வாறு கல்யாணம் பண்ணிணார்களென்று..இப்படியே எங்காவது ஓடிவிட முடியாதா என்று அவளிருக்க ராமோ தன்னவளின் கையை ஆதரவாய் அழுந்திப்பிடித்தான்..உங்க எல்லா கேள்விக்கும் நானே பதில் சொல்றேன் என்னடா தெரியனும் உங்களுக்கு??

அதெப்படி நீ எதாவது மறைச்சு இல்ல மாத்தி சொல்லுவ நாங்க சிஸ்டர் சொல்றததான் நம்புவோம்..நீங்க சொல்லுங்க மகி என அங்கிருந்த பெண்களில் ஒருத்தி கூற..மகிக்கோ கண்களில் நீர் கோர்த்துவிட்டது அதை கட்டுபடுத்த கண்ணிமைகளை சிமிட்டியவாறு குனிந்து கொண்டாள்..வேறு வழியில்லை என்று தோன்ற ராம் அனைவரிடமும் உண்மையை கூறினான்..

அவளுக்கு ஒரு அக்ஸிடெண்ட்ல. பழசெல்லாம் மறந்துடுச்சு ஷீ இஸ் அண்டர் ட்ரீட்மெண்ட் நவ்..

ஒரு நொடி கணத்த மௌனம் அந்த அறையெங்கும்..யாருக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை..ராமே அந்த மௌனத்தை கலைத்தான்..டேய் என்ன அமைதியாய்டீங்க??சியரப் கைஸ்..ப்ளீஸ்..சிறிது நேரத்தில் அனைவரும் பழைய நிலைக்கு மாறியிருக்க மகி இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதை ராம் உணர்ந்தான்..அங்கிருந்து கிளம்பவும் முடியாது என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினான்..ஆண்களில் சிலர் ட்ரிங்க்ஸ் பருக ஆரம்பிக்க பெண்கள் அனைவரும் சற்று தள்ளி சென்று அமர்ந்தனர்..

அதிலிருந்த ரக்ஷிதா மகியின் காதுபடவே,ஹம்ம்ம் என்ன லவ் பண்ணி என்ன பண்றது,இப்படி எல்லாத்தையும் மறந்துட்டு உக்காந்துருக்கா..எல்லாம் அவங்க அவங்க ராசி..பாவம் ராம் போய் மாட்டிக்கிட்டான்..இதே என் ப்ரபோசல ஏத்துகிட்டு இருந்தான்னா இந்நேரம் ஜாலியா லைவ்வ என்ஜாய் பண்ணிருக்கலாம்..இதெல்லாம் அவனுக்கு தேவையா..விதி யாரைவிட்டது..

கேட்ட மகிக்கோ துக்கம் தொண்டையை அடைக்க அடக்கிவைத்திருந்த கண்ணீர் பெருகிவர அங்கிருந்து எழுந்து விறுவிறுவென சென்றுவிட்டாள்..அவள் செல்வதை கண்டு அவளை தொடார வந்தவனிடம் ரஷிதா பேசியதை ஒருத்தி கூற அவளை அனல்பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தான் ராம்..

காரினுள் அமர்ந்து கைக்குள் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள் மகி..

குட்டிமா..சாரிடா நா உன்ன கூட்டிட்டே வந்துருக்க கூடாது சாரிம்மா..என்ன பாரு மகி..

ப்ளீஸ் ராம் இங்கிருந்து போய்டலாம்..எனக்கு யாரையும் பாக்க வேண்டாம் இப்போ..போலாம் ராம் ப்ளீஸ்..என அழுது கொண்டேயிருக்க சற்றும் யோசிக்காமல் காரை கிளப்பினான் ராம்..வழியெங்கும் அழுகை நிற்கவேயில்லை..வீட்டிற்கு வந்து ராம் காரை பண்ணுவதற்குள் இறங்கி உள்ளே ஓடிவிட்டாள்..

ராம் காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்..அவளை தோள்பிடித்து அழுத்தி நிமிர்த்தினான் ராம்..இங்க பாரு மகி யாரோ ஏதோ சொன்னாங்கநு நீ ஏன் இப்படி உன் உடம்பை கெடுத்துக்குற…பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்க அதுக்காக..ரிலக்ஸ் மகி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.