(Reading time: 22 - 44 minutes)

கியின் அக்ஸிடெண்ட்டிலிருந்து முந்தைய நாள் நடந்தது வரை அனைத்தையும் கூறினான்..ரொம்ப பயப்படுறா சிஸ்டர்..முன்னாடி அவ இப்படி இருந்ததேயில்ல..நேத்து…நேத்து நா நடந்துகிட்டது தப்புதான் பட் ஐ வாஸ் ஹெல்ப்லெஸ்..அவள வேற என்ன பேசியும் தடுத்துருக்க முடியும்நு தோணல அதான்…

ராம்..பர்ஸ்ட் ஆப் ஆல் நீங்க கில்டியா பீல் பண்றதுக்கு ஒண்ணுமேயில்லை..இன்பாக்ட் நீங்க அவங்களை இந்த அளவுக்கு விரும்புறீங்கநு எனக்கு ஆச்சரியமாயிருக்கு..நீங்க சொல்றத வச்சு பாக்கும்போது அவங்களுக்கு பயமே எங்க உங்களை விட்டு பிரிஞ்சுருவோமோநு தான்..

சிஸ்டர்…

ஆமா ராம்..அவங்க உங்க கூடவேயிருக்க நினைக்குறாங்க..எப்படியாவது பழசு நியாபகத்துக்கு வந்துராதாநு தன்னைதானே கஷ்டபடுத்துறாங்க அதே நேரத்துல நீங்க அவங்களுக்காக ஒதுங்கியிருக்குறத தட் மீன்ஸ் ஒரு ஹஸ்பண்ட்டா இல்லாம இருக்குறத பாத்து எங்க இது இப்படியே போய் ஒரு எக்ட்ரீம்ல நீங்க அவங்களை வெறுத்துடுவீங்களோநு நினைக்கலாம்..இதெல்லாத்தையும் தாண்டி அவங்களே உங்ககிட்ட நார்மலா இருக்கலாம்நு நினைக்குற டைம்ல நேத்து மாறி யாராவது அவங்க மனச தெரிஞ்சோ தெரியாமலோ காயப்படுத்திருக்கலாம்..இதெல்லாத்துக்கும் மேல அவங்க மனசளவுல தெளிவாயில்லை..தான் இத தான் நினைக்குறோம் இதுதான் எனக்கு வேணும்னு அவங்களால சொல்ல முடில..இதெல்லாம் சேர்ந்துதான் அவங்கள உங்க பக்கத்துல வரவிடாம தடுக்குமாயிருக்கும்..நேத்து நீங்க புருஷனா உங்க உரிமைய காட்டினதும் அவங்களுக்கு விருப்பம் இல்லனா எப்படியாவது உங்களை தடுத்துருப்பாங்க அதுலயே தெரிலயா அவங்க மனசுல என்ன இருக்குநு..

ம்ம்ம் புரியுது சிஸ்டர் பட் இப்போ வீட்டுக்கு போனா கூட எப்படி அவகிட்ட ரியாக்ட் பண்றதுநு தெரில..

பாத்தீங்களா இதான் பிரச்சனை நீங்க ஏன் அவங்களை ரெண்டு பர்ஸ்னாலிட்டியா பாக்குறீங்க..அவங்களுக்கு அக்ஸிடெண்டே நடக்கலநு நினைச்சுகோங்க கஷ்வலாயிருங்க..நார்மலா உங்க மகி கிட்ட எப்படி இருப்பீங்களோ அப்படியிருங்க ரொமான்ஸ்ஸோ,சண்டையோ உரிமையோட எக்ஸ்பெர்ஸ் பண்ணுங்க அவங்களை ஒரு பேஷண்ட் மாறி ட்ரீட் பண்றத நிறுத்துங்க மத்ததெல்லாம் தன்னால சரி ஆகும்..அவங்களும் கூடிய சீக்கரமே அவங்களோட வட்டதிலிருந்து வெளிய வந்துருவாங்க..

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்..இப்போ என்னோட தப்பு எனக்கு புரியுது..இனி அவளை நா தனியா விடாம பாத்துக்குறேன்..தேங்க் யு சோ மச்..

பரவால்லை ராம்..ஹவ் அ ஹாப்பி லைவ் டு கெதர் கூடிய சீக்கிரமே ஒரு ஜுனியரை ரெடி பண்ணுங்க எல்லா பிரச்சனையும் சால்வ் ஆய்டும்..என கை குலுக்கி அனுப்பி வைத்தாள்..வெளியே வந்ததும் தான் என்ன செய்ய வேண்டும் என திட்டமிட்டு கொண்டவன் முதல் வேலையாக சாக்ட்சியை மகியை பார்க்க செல்ல வேண்டாமென கூறினான்..பரணியிடம் நேத்து நடந்ததை பற்றி விசாரித்தான்..ம்ம் நா வரதுக்குள்ள கிளம்பிட்டியேடா..அந்த ரஷிதாவ நல்ல வாங்கு வாங்குநு வாங்கிட்டேன்..பசங்க தடுத்ததால தப்பிச்சா இல்லனா அறைஞ்சுருப்பேன்..என்ன புத்திடா இன்னுமும் அவ மாறவேயில்லை..

சரி விடு மச்சான்..சரி இன்னைக்கு கேஸ் டீடெய்ல்ஸ் நீயே பாத்துக்கோ நா நாளைக்கு வரேன்..

சரி ராம்..மகி எப்படியிருக்கா ஒண்ணும் பிரச்சனையில்லையே..

அதெல்லாம் ஒண்ணுமில்லைடா..இன்னைக்கு ஒரு நாள் அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாமேநு தான்..

சரி மச்சான் பாத்துக்கோ..

அதேநேரம் அங்கு மகி சாக்ட்சியை அழைத்திருந்தாள்..என்னடா இன்னும் வரலை கிளம்பிட்டியா??

அண்ணி அண்ணா தான் கால் பண்ணி வர வேண்டாம்நு சொன்னாரு..உங்ககிட்ட சொல்லலியா??

ஓ..ஆமாடா சொன்னாரு மறந்துட்டேன்..சரி நாளைக்கு பாப்போம்டா..போனை வைத்தவளுக்கு ஏதோ ஒரு இனம்புரியா படபடப்பு..கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டவள் அணிந்திருந்த சுடிதாரை மாற்றி புடவையை கட்டிக் கொண்டாள்..ராமிற்கு பிடித்ததாய் சமைக்க எண்ணி சமையலறைக்குள் நுழைய வாசல் அழைப்பு மணி அடித்தது..எதிர்பார்ப்போடு கதவருகே சென்றவள் அதை முகத்தில் காட்டாமல் கதவை திறக்க ராம் அதைவிட சீரியஸாய் முகத்தை வைத்து கொண்டு உள்ளே நுழைந்தான்..இருப்பினும் மகியை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை கவனிக்க தவறவில்லை..ராம் தனதறைக்கு செல்ல வேகமாய் கிச்சனுக்கு சென்று அவனுக்காக செய்து வைத்திருந்த உப்புமாவை கொண்டு வந்து நீட்டினாள்..என்னவென ஏறிட்டவனின் கண்களை பார்க்க முடியாமல் குனிந்தபடியே காலைலயே கிளம்பி போய்டீங்க ஒண்ணும் சாப்ட்டுறுக்க மாட்டீங்களே அதான்..கொஞ்ச நேரத்துல லஞ்ச் ரெடி பண்ணிருவேன்..இப்போதைக்கு…

தட்டை கையில் வாங்கி கொண்டவன்,நேத்து வர எங்கேயோ போறேன்னு சொல்லிட்டு இருந்த மேடம்க்கு இப்போ என்ன திடீர் அக்கறை??

மகிக்கோ கண்களில் நீர் கோர்த்திருந்தது..ஒன்றும் கூறாமல் அந்த ரூமைவிட்டு வெளியேறினாள்..சாப்பிட்டு முடித்தவன் மனது கேக்காமல் தட்டை எடுத்து போகும் சாக்கில் கிச்சனுக்கு செல்ல உணர்ச்சியற்ற முகத்தோடு வேலை பார்த்து கொண்டிருந்தாள் மகி..தானகவே சென்று அவள் கையிலிருந்த காய்கறியை வாங்கி நறுக்க ஆரம்பித்தான்..

அய்யோ அதெல்லாம் நா பாத்துக்குறேன்ங்க..நீங்க போங்க..

ஏன் என்கூட சேர்ந்து வேலை பாக்கமாட்டியா??

இல்ல அதுக்கில்லங்க உங்களுக்கு ஏன் சிரமம்நு தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.