(Reading time: 22 - 44 minutes)

னக்கு கஷ்டமாயிருக்குநு நா சொன்னேனா??

அதற்குமேல் பேசாமல் வாயை மூடிகொண்டாள்..என்னாச்சு இவருக்கு ஏன் இப்படி எரிஞ்சு விழுறாருநு தெரிலயே..எதாவது வொர்க் டென்ஷனாயிருக்குமா இல்ல நேத்து நாம நடந்துகிட்டதுக்காக இப்படி இருக்காரா??அப்படி பாத்தா இவரு பதிலுக்கு பண்ணிணதுக்கு நா தான் கோப படடணும் என நடந்ததை நினைத்தவளுக்கு கன்னங்கள் தானகவே சூடேறியது..அவளையே பார்த்து கொண்டிருந்தவனுக்கும் அவளின் சிந்தனை புரிய லேசாய் உதடோரத்தில் புன்னகை அரும்பியது.. சமையல் முடியும் வரை அதை எடுக்கிறேன் இதை எடுக்கிறேன்னு அவளை உரசியபடியே பாடாய் படுத்தி கொண்டிருந்தான்..இப்படியே ராமின் சீண்டல்களோடு அன்றைய பொழுது கழிய இரவு இருவரும் ஹாலில் அமர்ந்து டீவி பார்ப்பதாய் கூறி அவரவர் உலகத்தில் சிந்தனையில் இருக்க அதை கலைப்பதாய் ஒலித்தது மகியின் மொபைல்..விஜி தான் அழைத்திருந்தார்..

அம்மா.,

மகி எப்படிடா இருக்க??

ஏனோ அவளிருந்த மனநிலைக்கு அவரது குரல் ஆறுதலாயிருந்தது..நா நல்லாயிருக்கேன்ம்மா..நீங்க எப்படி இருக்கீங்க..

எனக்கென்னடா நல்லாயிருக்கேன்..மாப்பிள்ளை தான் ரெண்டு நாளுக்கு ஒருதடவை போன் பண்ணி விசாரிச்சுப்பாரே..இந்தகாலத்துல எத்தனை பேருக்கும்மா மருமகன் மகனா அமையுர அதிர்ஷடம் கிடைக்கும்..உண்மையிலேயே நாம ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கோம் மகிம்மா.,

தன் எதிரிலிருந்தவனிடமிருந்து விழியகற்றாமல் பதிலளித்து கொண்டிருந்தாள் மகி..

சரி நாளைக்கு பக்கத்துல கோவிலுக்கு போய் மறக்காம அர்ச்சனை பண்ணிடு மகி..

நாளைக்கு என்ன விசேஷம்மா??

அது சரி உன் பிறந்தநாளையே மறந்துட்டியா??

சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தவளுக்கு அப்போது தான் தேதியை பார்க்க வேண்டுமென்றே தோன்றியது..மனதில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு குடி கொண்டது..அவருக்கு என் பிறந்தநாள் நியாபகம் இருக்குமா விஷ் பண்ணுவாறா??ஆமா நேத்து நா பேசின பேச்சுக்கு இப்போ எனக்கு பிறந்தநாள் கொண்டாடுறதுதான் அவருக்கு முக்கியம் பாரு..என்றெண்ணியபடியே தனதறைக்கு நடந்தாள்..

ஹேய் நில்லு எங்க போற??

தூக்கம் வருதுங்க அதான் ரூம்க்கு போறேன்..

இனி இதுதான் நம்ம ரூம் அங்க போய் படுத்துக்கோ..

நம்ம ரூம்மா??அப்போ நீங்களும் அங்கதான் படுத்துப்பீங்களா??

பின்ன நா வேற எங்க போறது..மகாராணிக்காக நா வேணா ஹால்ல படுத்துக்கவா??

அய்யோ அப்படிலாம் சொல்லலங்க..

அப்பறம் என்ன நா ஒண்ணும் உன்னை கடிச்சு முழுங்கிடமாட்டேன்..போ போய் படு…

பதிலேதும் கூறாமல் உள்ளே வந்தவளுக்கு முந்தைய நாளின் நினைவு அதுவாகவே கண்முன் தோன்ற வயிற்றிலிருந்து ஏதோ உருளுவதை போலிருந்தது இருப்பினும் வேற வழியின்றி கட்டிலின் ஓரமாய் திரும்பி படுத்தாள்..சிறிது நேரத்திலேயே ராமும் வந்து படுத்து உறங்கியும் விட்டான்..மணி இரவு 11:45 ஐ காட்டியது..மகி,ராம் தன் பிறந்தநாளை மறந்துவிட்டானே ஒரு விஷ் கூட பண்ணாம தூங்கிட்டாரே என வருந்த கண்கள் அதுவாகவே குளமாகின..

11:55 லேசாய் திரும்பி ராமை பார்க்க நன்றாய் உறங்கி கொண்டிருந்தான்..எனக்கு என்னதான் வேணும் அவரை விட்டு போறேன்னும் சொல்றேன்..இப்போ அவரு விஷ் பண்ணலயேநு கவலபட்றேன்..ஒண்ணும் புரியலஎன்றவாறு கண்களை இறுக மூடி தூக்கத்தை வரவழைக்க முயன்றாள்..

12 மணி கண்மூடி கிடந்தவளை இடையோடு கை கோர்த்து அணைத்து  கன்னத்தில் இதழ் பதித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிமா என்றான் அவளின் ராம்..சட்டென எழுந்து அமர்ந்தவள் ராமை ஆச்சரியம் கலந்த ஆனந்தத்தோடு பார்க்க. மறுபடியும் அவள் நெற்றியில் இதழ் பதித்து தன்மீது சாய்த்து கொண்டான்..உரிமையாய் சாய்ந்தவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது..

ஏண்டி சந்தோஷமாயிருந்தாலும் அழற வருத்தமாயிருந்தாலும் அழற..என்னாச்சு உனக்கு??

அழுகையை கட்டுப்படுத்தியவள் இல்லங்க என் பர்த்டேவ மறந்துட்டீங்கநு நினைச்சேன்..

ம்ம்ம் நீ நினைக்குறதெல்லாம் நா பண்ணமாட்டேன்..என் குட்டிமா பர்த்டேவ மறப்பேனா??ஒரு நிமிஷம் இரு இதோ வந்துட்றேன் என எழுந்து சென்றவன் கையில் ஒரு பையோடு வந்தான்..அதிலிருந்து எதையோ வெளியிலெடுத்து அவள்புறம் திரும்பியவன்அவள் முன்னே நீட்ட அதை பார்த்தவளின் கண்களோ ஆனந்தத்தில் விரிந்தது..அழகிய வெள்ளை நிற ரோஜாக்களை கொண்ட பொக்கே..நடுவில் ஐந்து சிவப்புநிற ரோஜாக்கள் இருக்க அவற்றை சூழ்ந்த வண்ணம் வெள்ளை நிறம் அமைந்திருந்தது..மகிக்கு வெள்ளை ரோஜா என்றால் கொள்ளை இஷ்டம்..அது ஏனோ அதை பார்க்கும் போதெல்லாம் அவள் மனதில் ஒரு இனம்புரியா அமைதி பரவும்..இன்றும் அதை பார்க்கும் போது அளவில்லா சந்தோஷம் அவளிடம்..வாஞ்சையோடு அதை கைகளில் வாங்கி கொண்டவள் காதலோடு தன்னவனை பார்த்தாள்..

என்ன பிடிச்சுருக்கா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.