(Reading time: 22 - 44 minutes)

ம்ம் என அழகாய் தலையசைக்க அவளை போன்றே தலையாட்டி அவனும் சிரித்தான்..அடுத்ததாக ஒரு பையோடு அவளருகில் அமர்ந்தவன்..குட்டிமா உன்னமாறி எனக்கு சர்ப்ரைஸ்லா பண்ணதெரியாது..எனக்கு பிடிச்சதா வாங்கிட்டு வந்துருக்கேன் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ போக போக சர்ப்ரைஸ் பண்ண பழகிக்குறேன்..ஓகே வா??இந்தா வாங்கிக்கோ என நீட்ட ஆர்வமாய் அதை வாங்கி பிரித்தாள் மகி..அது அழகிய வேலைப்பாடோடு கூடிய வெண்பட்டு..வெள்ளை நிற பட்டில் கோல்டன் நிற வேலைபாடுகள் ஜொலிக்க இரு புறமும் பிங்க் மற்றும் பச்சை பார்ட்டரோடு அழகாயிருந்தது..பிடிச்சுருக்கா குட்டிமா??அவள் கண்களை பார்த்து மயிலிறகால் வருடுவது போன்ற குரலில் அவன் கேட்க வாயிலிருந்து வார்த்தை தான் வருமோ பெண்ணவளுக்கு..சட்டென அவன் மார்பில் முகம் புதைத்து சாய்ந்து கொண்டாள்..

காதலோடு தன்னவளை சேர்த்தணைத்து அவளின் முகம் பார்க்க குனிந்தவனுக்கு முகத்தை காட்டாமல் மேலும் அவனுள் புதைந்தாள்..சில நிமிடங்கள் அப்படியே கரைய மெதுவாய் தலை நிமிர்த்தி அவளவனை பார்த்தாள்..அதற்காகவே காத்திருந்தது போல் அவள் கண்ணிமைகளில் இதழ் பதித்தான் ராம்..வெட்கத்தில் முகம் குங்குமமாய் சிவக்க அவனிடமிருந்து பிரிந்து எழ எத்தனிக்க இன்னும் வேகமாய் அவளை இழுத்து தன் மீது போட்டு கொண்டான்..

அவ்ளோ சீக்கிரரம் உன்ன விட்டுருவேனா என்பது போல் பார்த்து அவன் கண்சிமிட்ட..அவனுக்கு குறையாத காதலோடு நோக்கினாள் மகி..இந்த கண்ணுல தாண்டீ விழுந்துட்டேன்..கண்கள் பேசனும்னு சொல்லுவாங்க ஆனா உன்னை பாத்தப்பறம் தான் அது என்னனு தெரிஞ்சுக்கிட்டேன்..உனக்கு தெரியுமா நாம லவ் பண்ண ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி ஒரு தடவை அப்போ நாம பேசகூட ஆரம்பிக்கல நீ ஜாய்ன் பண்ண புதுசு..ஆபீஸ்ல நவராத்திரி டைம்ல கொழு வைப்பாங்க அப்போ பசங்க நாங்க எல்லாரும் கொழு படிக்கட்டு அரேண்ஜ் பண்ண பொண்ணுங்க பொம்மைகளெல்லாம் எடுத்து வச்சுட்டு இருந்தாங்க..ஈவ்னிங் டைம்ல போடுறதுக்காக பக்கத்துலயே சாங்க்ஸ் டெஸ்ட் பண்ணிட்டு இருந்தாங்க..யாரோ உன்னையும் ஹெல்ப்க்கு கூப்பிட நீ உள்ள வந்த உனக்கு ஆபீஸ்ல திவ்யா தான் க்ளோஸ்..அவ உங்ககிட்ட உனக்கு தான் டான்ஸ் தெரியுமே இந்த பாட்டுக்கு ஆடேன்னு சொல்லிட்டு இருந்தா..நீ முடியவே முடியாதுநு பந்தா பண்ணிட்டு இருந்த சரி இந்த பாட்டுக்கு உக்காந்த மாறியே எக்ஸ்ப்ரெஷன் மட்டும் குடு போதும்நு சொல்லிட்டு இருந்தா..அதுகுள்ள எனக்கு கால் வரவே நா வெளிய போய் பேசிட்டு உள்ள நுழையுரேன்..சீரியஸா சொல்றேன் ஐ வாஸ் ஸ்ட்ண்ட்..எவ்ளோ அழகா எக்ஸ்ப்ரஷன் பண்ணிட்டு இருந்த தெரியுமா..மேபி அதான் எனக்குள்ள நீ வந்த பர்ஸ்ட் டைம்நு தோணுது..அதெல்லாம் மறக்க முடியாத டேஸ்டா..

அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தவள் தன்னவனை காதலோடு நெருங்கினாள்..என்னங்க..

ஹேய் இந்த ங்க வ மொதல்ல விடு ஏதோ வயசான பீலிங் வருது..நீ எப்பவும் கூப்பிடுற மாறி ராம்னு கூப்பிடு..

ராம்…நா ஒண்ணு கேக்கட்டுமா??

ஆரம்பிச்சுட்டியா..சரி சொல்லு பர்த்டே பேபிக்கு என்ன வேணும்..??

எனக்கு கடைசி வர குணமாகாமலே போய்ட்டாலும் இதே லவ்வோட இருப்பீங்கள??என்ன விட்டு போய்ற மாட்டீங்க தான..

குட்டிமா என் மேல படுத்துருக்கியே ஹார்ட் பீட் கேக்குதா??

என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் தலையசைத்தாள்..

மகி ஒரு ஆண் கல்யாணத்துக்கு அப்பறம் அவனோட மனைவிய மனசுல சுமக்க ஆரம்பிச்சுடுவான்..தன்னோட முதல் குழந்தையாவும் அடுத்த அம்மாவுமா தான் அவள நினைக்கனும்…ஆனா நா உன்னை என் உயிரா நினைக்குறேன்டா..அது எதுனாலநு தெரியாது ஆனா உள்ள துடிக்குற துடிப்பு நிக்குற வர நா உன்னோட தான்டா இருப்பேன்..என்னோட இந்த பிறவி உன்னால தான் முழுமையடையும்..எப்படி வந்த எப்போ வந்த எதுவுமே தெரில ஆனா உள்ள கேக்குற பீட் மகி மகின்னு தான் துடிச்சுட்டு இருக்கு..அதனால நீயே போனும்னு நினைச்சாலும் நா உன்ன விடமாட்டேன்..வேற ஆப்ஷனே இல்லடா உனக்கு ஐ அஅம் சாரி..என பாவமாய் முடிக்க அவனது கன்னத்தில் தன் காதலை நிறைவை முத்தமாய் பதித்தாள் அவனின் மகி..

முந்தைய நாளின் காதல் தேடலை இருவரும் இன்றும் தொடர நாகரீக நிம்மித்தமாய் அவங்களுக்கு பேக்ரௌண்ட் சாங் போட்டுவிட்டுட்டு நாம அங்கயிருந்து வெளியே வந்துருவோம்..

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி , 
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி , 
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி , 
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி , 

நான் என்ற சொல் இனி வேண்டம் , 
நீ என்பதே இனி நான் தான் , 
இனிமேலும் வாரம் கேட்க தேவையில்லை , 
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை , 
உயிரே வா ... 


நாடகம் முடிந்த பின்னும் , 
நடிப்பின்னும் தொடர்வது ஏனா , 
வேடம்   இனி மேலும் வரம் 
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே , 
உயிரே வா

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:952}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.