(Reading time: 9 - 18 minutes)

வன் பாடி இறங்கியதும் பிரிகடியர் “அர்ஜுன் எங்கியோ லாக் ஆகிட்ட மாதிரி இருக்கே.. வீட்டில் பொண்ணு பார்துட்டாங்களா” என்று வினவ,

“அதெல்லாம் இல்லை மேஜர்... இன்னிக்கு இந்த பாட்டை கேட்டேன் அதான் பாடினேன் “ என்று சமாளித்தான்.

ராகுலும், மிதுனும் சிரித்தனர்.

கடைசியாக வடநாட்டு வீரர்கள் அதிக அளவில் இருப்பதால் நிறைய ஹிந்தி பாடல்கள் போட்டு குத்தாட்டம் போட்டனர்.

“லுங்கி டான்ஸ”   “கஜுராஹோ “ “சிகனே சமேலி “ போன்ற பாடல்களை போட்டு ஒருவர் விடாமல் அனைவரையும் ஆட வைத்தனர்.

பின் அனைவரும் சாப்பிட சென்றனர்.. சுபத்ரா முதல் ஆளாக சென்றாள்.

பிரிகடியர் அவரின் சீனியர் ஆபீசெர்களோடு தனியாக சென்று விட, இப்போது அர்ஜுன் தலைமையிலான மூவர் குழு சுறா இருக்குமிடம் தேடி சென்றது.

ராகுல் “ஹலோ .. என்ன சுறா மேடம்.. வந்த வேலை ஆரம்பிச்சாச்சா ?”

“எஸ் கேப்டன்.. நமக்கு எது நடக்குதோ இல்லியோ, வயித்துக்கு வஞ்சனை செய்யக் கூடாது.. அதுதான் என்னோட முதல் கொள்கை..”

“அப்போ இரண்டாவது கொள்கை.. என்னம்மா..? வாய் மூடாமல் பேசவும் இதுதானா?” என்றான் அர்ஜுன்.

“கரெக்ட் கேப்டன்.. நான் என்னோட மத்த எல்லா உறுப்புகளை விட வாய்க்குத்தான் அதிகமா வேலை கொடுக்கணும்னு நினைப்பேன்.. ஒன்னு சாப்பிடனும் .. இல்லியா பேசணும்.. இதுவே எனது தாரக மந்திரம் “ என்று கூற ,  எல்லோரும் சிரித்தனர்.

அர்ஜுனிற்கு அவளிடம் தன காதலை சொல்ல மிகவும் ஆசையாய் இருந்தது.. ஆனால் இங்கே வைத்து சொன்னால் அது நன்றாக இருக்காது .. ட்ரைனிங் முடித்த பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டான்.

மிதுன் மெதுவாக சுபத்ராவிடம் பேச்சு கொடுத்தான்..

“சுறா.. உங்க parents, friends எல்லாரும் இன்னிக்கே சென்னை போயடுராங்களா?”

“ஆமாம்.. சார்.. அவங்க எனக்காக பாமிலி விட்டு இவ்ளோ தூரம் வந்ததே பெரிசு இல்லியா.. அதுனால் நைட்குள்ளே அவங்க போய் இறங்கற மாதிரி அப்பா டிக்கெட் போட்டுடாங்க.. “ என்றவள்,

“நீங்க எப்போ கிளம்பறீங்க சார்.. ஆபீசர் வீட்டுலேயே ஸ்டே பண்ணுவீங்களா? இல்லை உங்க friends ஓடவா..?”

“ஹேய்.. நீ வேற.. எங்க மாமா ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ஆக்கும். .இங்கே எல்லாம் தங்க மாட்டேன்.. வழக்கமா இவ்ளோ நேரம் கூட இருக்க மாட்டேன்.. இன்னிக்கு இந்த பார்ட்டி என்று எங்க மாமா இருக்க சொல்லிட்டார்.. மோர்னிங் வந்துட்டு .. டிக்கெட் கிடைக்கிறதை பொருத்து evening கிளம்பிடுவேன் அல்லது மறுநாள் கிளம்புவேன்.. “

பிறகு “சுபத்ரா.. நான் ஊருக்கு சென்று உங்கள் பெற்றோர் , friends எல்லாம் அப்போ அப்போ பார்க்கலாம் இல்லியா.. ? ஒன்றும் தவறாக நினைக்க மாட்டீர்களே?”

“ச்சே. ச்சே.. அது எல்லாம் மாட்டோம் சார்.. உண்மையா சொன்னால் அப்படி போய் பார்த்தீங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.. தேங்க்ஸ் சார்.. “

“ஹேய் நமக்குள்ளே எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்.. “ என்று கூற, ராகுலும், அர்ஜுனும் அவனை முறைத்தனர்.. அவர்கள் இருவரை பார்த்து மிதுன் கண்ணடித்தான்.

அந்த தீபாவளி இவர்கள் ஐந்து பேருக்குமே மறக்க முடியாத இனிமையான நாளாக அமைந்தது.

ஹாய் .. friends.. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

மழை பொழியும்

Episode 12

Episode 14

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.