(Reading time: 9 - 18 minutes)

புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவைகூடுது...

என்று பாடி முடிக்க அவளின் வாய்ஸ் மிகவும் இனிமையாக, அதே சமயம் அந்த பாவமும் மொழி புரியாவிட்டாலும் எல்லாரயும் ரசித்து கை தட்ட வைத்தது.

பின் ராகுல் மேடை ஏற, மிலிடரி campus குள்ளேயே archestra இருப்பதால் அங்கிருந்த keyboard வாசித்தான்.

அவன் வாசித்தது புன்னகை மன்னன் படத்தில் வரும் கமல், ரேவதி தீம் டான்ஸ்.. அந்த மெல்லிசைக்கு அங்கிருந்த அனைவருமே இருந்த இடத்தை விட்டு ரெண்டு ஸ்டெப்ஸ் ஆவது போட்டனர்.

இப்போது சுறா மேடை ஏற, அர்ஜுன் stun ஆகி விட்டான். இத்தனை நாள் அவளின் வெளி அழகை கண்ணால் மட்டுமே கண்டவன், அவளின் குணமும், துருதுருப்பையுமே மட்டுமே மனதில் வைத்து காதலித்துக் கொண்டு இருந்தவன், இன்று அழகான லாவெண்டர் வண்ண அனார்கலி சுடிதாரில், அலை அலையான கூந்தலை ப்ரீ ஹேர் விட்டு, காதில் அழகான பெரிய ஜிமிக்ககள் ஆட, கைகளில் ஒற்றை பெரிய வளையல் அணிந்து, நெற்றியில் சற்று நிதானமான அளவில் திலகம் இட்டு இருந்தாள். உதடுக்கு மிதமான அளவில் லிப்ஸ்டிக் போட்டு இருக்க அவளின் பால் போன்ற மேனி நிறத்திற்கு அந்த உதடுகள் மாதுளம் முத்து என மின்னியது. ஐந்தரை அடி உயர பார்பி டால் போன்று அழகாக இருந்தாள். அர்ஜுனின் பார்வை முழுக்க, முழுக்க அவளை விட்டு நகரவே இல்லை.

(ஷப்பா .. ரொம்ப நாளா சுறா என்னை whats up இல் கழுவி ஊத்திக் கொண்டு இருந்தாள். ஒரு heroin என்னை , என் அழகை வர்ணிக்கவே இல்லை.. நீ எல்லாம் என்ன writer? உனக்கு போய் நானும் heroin ஆ இருக்கேனே.. ஒழுங்கு மரியாதையா என்னை சீக்கிரம் வர்ணனை செய்.. இல்லாட்டா நான் வேற யாருக்காவது heroin ஆ ஜம்ப் ஆய்டுவேன் என்று.. இன்னிக்கு முடிச்சுட்டேன்.. சுறா நீ எனக்கு கொடுத்தத விட அதிகமாவே கூவிட்டேன்.. இப்போ ஓகே வா )

சுறா மேடை ஏறவுமே, அவள் டான்ஸ் ஆடுவாள் என்று எண்ணியிருந்தான் அர்ஜுன். ஆனால் அவளோ

“ஹாய்.. நான் இன்னிக்கு கதை சொல்ல போறேன்” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து ,

“ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் .. அதோட பேர் once மோர் .. அதோட பேர் என்ன ? “ என்று audience ஐ கேட்க, எல்லோரும் “once மோர்” என அவள் மீண்டும் “ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் .. அதோட பேர் once மோர்.. பேர் என்ன ?” என்று மீண்டும் கேட்க, கூட்டத்தில் ஒரே கூச்சல்

“ஹோய் .. சுபத்ரா.. .நீ போட்ட மொக்கை போதும்.. வேற எதாவது பண்ணு..” என்று கலாட்டா செய்ய , பின் usb மூலம் பாட்டு போட சொன்னாள்.

 “கண்ணாமூச்சி ஏனடா.. “  என்ற பாடலுக்கு அழகான நடனம் ஆடினாள்.

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா (2)
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும் (2)
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

அவளின் பாவத்தில் அர்ஜுன் தன்னை தொலைத்தான்.

பிறகு அர்ஜுன் மேடை ஏறியவன், இந்த முறை அவன் கிடார் வாசிக்கவில்லை. வாசித்து இருந்தால் ஒருவேளை சுபத்ரா அவனை தெரிந்து கொண்டு இருப்பலாவ் என்னவோ... நிறைய நார்த் இந்தியன் இருக்கிறார்கள் என்பதால் அவனுக்கு மிகவும் பிடித்த

எக் லடுக்கி கோ தேகா தொ ஏசா லகா “ 

என்ற ஹிந்தி பாடலை பாடினான். அவனின் மனம் முழுதும் அவனின் குட்டிம்மாவே.. அவளை நேரில் பார்த்து வேறு பாடியதாலோ என்னவோ பாடல் வழக்கத்தை விடவும் மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.