(Reading time: 19 - 38 minutes)

புரியுது ராம் பட் வேற வழியில்லை..ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போறாங்க பரணி இங்க வராரு இதெல்லாம் நமக்கு தப்பா தெரியாம இருக்கலாம் பட் என்ன வச்சு சாக்ட்சிய நிறைய பேருக்கு தெரியும்ப்பா..அப்படி யாராவது அவள எங்கேயாவது பாத்து தப்பா ஒரு வார்த்தை சொன்னாலும் என்னால தாங்க முடியாது அதனால தான் சொல்றேன்..புரிஞ்சுப்பநு நம்புறேன்..

அதற்கு மேல் எதிர்த்து பேசவில்லை ராம்..சரி சார் நா பரணிட்ட பேசிட்டு சொல்றேன்..

அடுத்து பரணியை அழைக்க இன்னும் மொபைல் நாட் ரீச்சபில்லேயே இருந்தது..என்ன செய்யலாம் என்ற யோசைனையில் ராம் அமர்ந்திருக்க வீட்டின் அழைப்பு மணி ஓசை கேட்டது..மகி சென்று யாரென்று பார்க்க பரணி நின்றிருந்தான்…வாங்கண்ணா உள்ளே வாங்க..

சாரிடா இந்த டைம்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..

அண்ணா என்ன பேசுறீங்க உக்காருங்க என்ன சாப்டுறீங்க..

இல்லடா ஒண்ணும் வேண்டாம்..

முகத்தை பாத்தாலே எவ்ளோ டயர்ட்டா இருக்கீங்கநு தெரியுது நா போய் தோசை எடுத்துட்டு வரேன் நீங்க பேசிட்டு இருங்க..

வா மச்சான் கால் பண்ணேன் நாட் ரீச்சபிள்னு வந்துது..போன வேலை முடிஞ்சுதா??

முடிஞ்சுது ராம் எல்லாமே அஸ் பெர் த ப்ளான் நடக்குது..ஒண்ணும் ப்ராப்ளமால்லை…

சூப்பர்டா..அப்பறம் அமர்நாத் சார் பேசினாரு..உன் என்கேஜ்மெண்ட் விஷயமா..

என்ன ராம் சொல்ற??புரிஞ்சுதான் பேசுறியா..

டேய் புரிஞ்சுக்கோடா..அவ்ளோ பெரிய மனுஷன் ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணும் போது எதிர்த்து பேச முடிலடா..கல்யாணத்தை எப்போ வேணா வச்சுக்கலாம்நு சொல்லிட்டாரு அப்பறம் என்ன??

நீ என்ன சொன்னாலும் ஒத்துக்க முடியாது ராம்..அப்பா அம்மா தன்வி அக்காலா இல்லாம எப்படி??இப்போ இருக்குற நிலைமைக்கு அவங்கள வர சொல்லவும் முடியாது சோ வாய்ப்பேயில்ல மச்சி அவர்ட்ட சொல்லிடு..

என்ன பரணி சின்ன குழந்தை மாறி அடம்பிடிக்குற??

அண்ணா..நானும் எல்லாத்தையும் கேட்டுட்டுதான் இருந்தேன்..ஏன் முடியாதுநு சொல்றீங்க..நீங்க யாரை பத்தியும் நினைக்க வேண்டாம் உங்க சாக்ட்சிய பத்தி நினைச்சு பாருங்க அவ எவ்ளோ சந்தோஷப்படுவா..பாவம்ண்ணா அவ வாழ்க்கைல அவளுக்கு கிடைக்கப்போற முதல் சந்தோஷம் அத ஏன் வேண்டாம்நு சொல்றீங்க..யோசிச்சு முடிவெடுங்கண்ணா..

மகியின் பேச்சு அவனை சிந்திக்க வைத்தது..ராம் மகியை நன்றியாய் நோக்கினான்..சரி ராம் பண்ண சொல்லு பட் ரொம்ப க்ரண்டா வேண்டாம்..

சரி மச்சி நா சொல்லிட்றேன்..

றுநாள் அமர்நாத்தை அழைத்து விஷயதௌதை கூறினான்..

ரொம்ப தேங்க்ஸ் ராம்..சரி ஜோசியர்ட்ட ஏற்கனவே பேசிருந்தேன் நாளைக்கு நாள் நல்லாயிருக்குநு சொல்லிருக்காரு வெனியூ டிடெய்லா நா உனக்கு கொஞ்ச நேரத்துல கன்பார்ம் பண்றேன்..

என்ன நாளைக்கே வா??அதுக்குள்ள எப்படி சார்??

ஒண்ணும் கவலபடாத ராம் நா பாத்துக்குறேன்..ட்ரெஸ் கட்லாக்கோட கடைல இருந்து ஆள் அனுப்புறேன் மாப்பிளைக்கு தேவையானத சூஸ் பண்ண சொல்லு..மத்தபடி உனக்கு ஒரு கவலையும் வேண்டாம்..

அதன்பிறகு நேரம் ரெக்கை கட்டி பறக்க அனைவருக்கும் மறுநாளை பற்றிய உற்சாகம் பற்றி கொண்டது..

அங்கு மணமகளோ முகம் கொள்ளா பூரிப்போடு தயாராகி கொண்டிருந்தாள்..அதர்வாவுக்கு பரணி மேல் கோபமிருந்தாலும் தான் தூக்கி வளர்த்த குழந்தையான சாக்ட்சியை திருமண கோலத்தில் பார்த்த போது மனம் நிறைந்துதான் போனது..இருப்பினும் எதையும் வெளிக்காட்டாமல் சிடு சிடு முகத்துடனே அலைந்து கொண்டிருந்தான்..ராம் அவன் அப்பா அம்மாவிடம் மேலோட்டமாக விஷயத்தை கூற அவர்களும் புரிந்து கொண்டு போனிலேயே தங்கள் வாழ்த்துக்களை கூறினர்..முகூர்த்த நேரம் நெருங்க ராம் மகி பரணி மூவரும் நிச்சயம் நடைபெறயிருக்கும் ஹோட்டலை அடைந்தனர்..ஓரளவிற்கு ஆடம்பரமாகவே இருந்தாலும் அமர்நாத்தின் லெவலிற்கு இது மிகவும் குறைவுதான் என்று தோன்றியது எனவே ஒன்றும் கூறாமல் உள்ளே நடந்தான் பரணி..

அழகான பார்ட்டி ஹால் முழுவதும் மலர்களால் அற்புதமாய் அலங்கரிக்கப்பட்டிருக்க நடுவே மணமக்களுக்கான இருக்கைகள் கம்பீரமாய் வீற்றிருந்தது..ஓரளவு நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே அழைப்பு என்பதால் அளவான கூட்டத்துடனேயே ஆரம்பித்தது..மகியை சாக்ட்சி அழைப்பதாய் ஒருவர் வந்து கூற ராமே அறை வாசல் வரை சென்று அவளை விட்டு வந்தான்..புரோகிதர் மணமக்களை மேடைக்கு அழைக்க பரணி சாக்ட்சிக்காக காத்திருந்தான்..

திடீரென்று அரங்கமே அமைதியாக ராமும் பரணியும் என்னவென்று புரியாமல் பார்க்க அழகான பாடல் ஸ்பீக்கரில் ஒலிக்க ஆரம்பிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.