(Reading time: 19 - 38 minutes)

முதல்முதலா உன்ன பைக்ல கூட்டிட்டு போனேன் அன்னைக்கே நா காலி..அஞ்சு நிமிஷ ட்ராவல்தான் ஆனா உன்னோட அருகாமை என்ன என்னென்னவோ பண்ணிடுச்சு..என்னோவோ என் பொண்டாட்டிய ஊருக்கு அனுப்பி விடுறமாறி ஒரு ஃபீல்..இறங்கி நீ எதாவது பேசுனா என்னடா பண்றதுநு இருந்தது..ஒழுங்கா ரிப்ளை பண்ணிருப்பேனானு கூட தெரில..இந்த உலகத்துலயேயில்ல..ஆனா நீயும் இறங்கிட்டு சின்னதா ஒரு தலையசைப்போட கிளம்பிட்ட..ஒரு வேளை நீயும் என்ன மாறிதான் பீல் பண்றியோனு தோணிச்சு இருந்தாலும் தேவையில்லாம உன் மனச குழப்பகூடாதுநு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்..

இந்தமாறி எத்தனை எத்தனையோ இருக்குடா குட்டிமா என் மனசுல இன்னைக்கும் அழகான கவிதைகளாய் அத்தனையும் பத்திரமாயிருக்கு..இது எல்லாத்தையும் தாண்டி நம்ம கல்யாணம் அந்த மூணு நாட்களுமே நம்ம லைவ்வோட பொக்கிஷம்..உன்கிட்டயிருந்து என் கண்ண அங்கயிங்க நகர்த்தவே விடல நீ..காதலும் ஒரு கட்டத்துல மோகத்தில கலந்துதான் ஆகணுமோநு நினைச்சேன்..என்னோடவங்கிற நினைப்பே உன்கிட்ட நிறைய வம்பு பண்ண தூண்டியது உன்ன அப்பப்போ டீஸ் பண்ணிட்டேயிருந்தேன்..அத்தனைபேர் இருந்தும்கூட மகிநு ஒருத்தி என் பக்கத்துல வந்துட்டா வேற எந்த நினைப்புமே இல்லாம இருந்தேன்..யு ஜஸ்ட் ஹிப்னோடைஸ்ட் மீ….

கண்டிப்பா சொல்றேன் மகி எத்தனை குழந்தைங்க பெத்துகிட்டாலும் எல்லாமே உன்ன மாறியே தான் பொறக்கணும்..அழகா க்யூட்டா..என்ன குடும்பத்தை தாண்டி எதையுமே யோசிக்க வைக்க கூடாது..உங்களயே தான் சுத்தி சுத்தி வரணும்..என்று கூறி சிரிக்க..அவள் இன்னுமாய் அவனை இறுக்கி கொண்டாள் தன்னிடத்தில்..

ராம்…

ம்ம்ம்

நாம குழந்தை பெத்துக்கலாமா??

அதிர்ச்சியாய் ஒரு பார்வை அவனிடத்தில்..சற்று நிதானித்தவன்..என்ன குட்டிமா அவசரம் இப்போதான மேரேஜ் ஆயிருக்கு கொஞ்ச நாளாவது லைவ்வ என்ஜாய் பண்ணுவோம்..அப்புறம் இதபத்திலா யோசிக்கலாம்,.பிடி கொடுக்காமல் பேசினான்..

எனக்கு குணமாகட்டும்நு வெயிட் பண்றீங்களா ராம்..

ஹே லூசு அப்படிலாம் ஒண்ணுமில்லை..நிஜமாவே நமக்காத்தான் சொல்றேன்..

இல்ல நீங்க எதையோ மனசுலவச்சு தான் பேசுறீங்க..

ஒரு நிமிடம் தயங்கியவன்,உனக்குதான் டெலிவரின்னா பயமாச்சே மகி அதனாலதான் கொஞ்சம் நாளாகட்டும்நு சொன்னேன்..என்றான் தயக்கமாய்..அவன் கண்களேயே பார்த்தவள்..

ஏன் ராம் என்ன இவ்ளோ லவ் பண்றீங்க??உங்களுக்காகநு எதுவுமே யோசிக்க மாட்டீங்களா??

லேசாய் அவள் முன்தலையில் தட்டியவன்,யாரு சொன்னா எனக்காக யோசிக்கலநு..என் குட்டிமாக்கு பிடிக்காதத நா பண்ணா அவ கஷ்டபடுவா அவ கஷ்டபட்டா நா ரொம்ப கஷ்டபடுவேன் அதனாலதான்..சிம்பிள்..நானும் கொஞ்சம் செல்பிஷ் தான்ம்மா என்று கண்ணடிக்க..ஏதோ வேண்டா வெறுப்பாய் தலையசைத்தவள்..ஆதற்கு மேல் ஒன்றும் கூறவில்லை..

என்ன மகி கோபமா??

அதெல்லாம் ஒன்னுமில்லப்பா சரி எனக்கு தூக்கம் வருது வாங்க போலாம்..

ராமிற்கோ இவளை என்ன பண்றது என்பதாயிருந்தது..அப்போ என்னடானா முடியாதுனா இப்போ பெத்துகலாமானு கேக்குறா??ஆண்டவா ஏன்டா இப்படி படுத்துற என்ன..என நொந்து கொண்டான்..

றுநாள் ராம் வேலைக்கு கிளம்பும் வரையுமே அநாவசியமாய் ஒரு வார்த்தை பேசவில்லை மகி..கேட்க தோன்றினாலும் ஒன்றும் பேசாமல் விட்டுவிட்டான் ராம்..இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவன் கதவை தட்ட எந்த சத்தமும் இல்லை..மேலும் இரண்டு முறை முயன்றுவிட்டு தன்னிடமிருந்த சாவியை கொண்டு கதவை திறந்து உள்நுழைந்தான்..எந்த விளக்கும் எறியாமல் இருட்டாயிருக்க ஸ்விட்சை ஆன் செய்து நோட்டமிட இரவு உணவு டேபிளிலில் இருந்தது..அருகிலேயே அவனுடைய இரவு உடையும் வைக்கபட்டிருக்க..என்னாச்சு இவளுக்கு மறுபடியும் முருங்கைமரம் ஏறிட்டாளா..ஏதோ சரியில்லையே என்றவாறே அறை கதவை திறக்க உள் பக்கமாய் தாழிடப்பட்டிருந்தது..

குட்டிமா என்ன பண்ற.,.கதவ திற..

……….

மகி என்னாச்சு தூங்கிட்டியா??

………..

அவள் போனிற்கு அழைக்கலாம் என தன் மொபைலை எடுத்தபோது தான் மகியிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை கவனித்தான்..வண்டி ஓட்டி கொண்டிருந்ததில் கவனிக்கவில்லை என்னவென பார்க்க..

ராம் எனக்கு தலைவலி..நா தூங்க போறேன்..உங்ககிட்ட இருக்குற கீய வச்சு ஓபன் பண்ணிகோங்க நா சாப்டேன்..உங்களுக்கு எல்லாமே டேபிள் மேல வச்சுருக்கேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.