(Reading time: 19 - 38 minutes)

ரவால்லையே நியாபகம் மறந்து போனாலும் புருஷனோட கண்ணசைவுல புரிஞ்சுகிட்டு போறா ம்ம்ம் தெய்வீக காதல் தான்..

மிஸ்டர் விநாயக் தேவையில்லாத பேச்சு வேண்டாம்..இன்னொரு தடவை அவளோட பேசுறத பாத்தேன் அவ்ளோதான் என உறுமிவிட்டு சென்றான்..சாப்பிட்டு முடித்து வீட்டுக்கு செல்லும் வரை எதுவுமே பேசவில்லை மகியிடம்.,வீட்டினுள் நுழைந்த அடுத்த நொடி,

ராம்…

கொஞ்சமாவது அறிவிருக்கா மகி உனக்கு அவன் ஒரு ஆளுனு அவன்ட்ட நின்னு பேசிட்டுயிருக்க..-கத்தினான்..

என்னங்க வயசுல பெரியவரு அவரே வந்து பேசும் போது நா என்ன பண்றது..ஏன் அவர் என்ன தப்பு பண்ணாரு??என்று பாவமாய் கேட்டவளை பார்த்து சற்று இறங்கி வந்தான்..

இங்க பாரு மகிம்மா சில விஷயங்கள பத்தி பேசாம இருக்குறதுதான் நல்லது..புரிஞ்சுக்கோ உன் நல்லதுக்காக மட்டும்தான் எல்லாத்தையுமே பண்ணுவேன்..இனி பரணி சாக்ட்சிய தவிர யார்ட்ட பேசினாலும் லிமிட்டோடயே பேசு..புரியுதா??

குனிந்தபடியே சேலை நுனியை வேகமாய் பிய்த்து கொண்டிருந்தாள்…கோபமாம்,

அவளை பார்த்தவனுக்கோ சிரிப்பு தான் வந்தது..மகி..

………

குட்டிமா….

லேசாய் ஒரு கோப பார்வை அவளிடம்,…

இங்க வாடீ…

அவளுக்குத் தெரியும் அவனின் அந்த டீயின் அர்த்தம்..அளவு கடந்த காதல்,கோபம்,பாசம் இவை வெளிபடும் போது மட்டுமே அவன் அப்படி அழைப்பான்,..குனிந்தபடியே அருகில் சென்றாள்…சற்று இடைவெளிவிட்டு நின்றாள்..அவன் கையை நீட்டி அழைக்க அவனுக்கு ஒழுங்குகாட்டிவிட்டு திரும்பி நின்று கொண்டாள்..

ஹே பொண்டாட்டி ரொம்ப பண்ணாத..தப்பு உன்னோடது..

சட்டென திரும்பியவள்,பழசெல்லாம் மறந்தது என் தப்பா??

சட்டென சுதாரித்தவன்,அம்மா தாயே தெரியாம திட்டிட்டேன்..தயவு செஞ்சு உன் புராணத்தை ஆரம்பிச்சுடாத..போ போய் தூங்கு என்ன விட்டுரும்மா..நா பாவம்…

அவள் பேச வந்ததையும் மீறி சிரித்துவிட்டாள்..சாரிப்பா இனி நா யார்ட்டையும் பேச மாட்டேன் போதுமா..

உன்னலா என்ன பண்ணலாம் என்பது போல் ராம் பார்க்க அழகாய் சிரித்தவாறே தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்..புடவை மாற்றி வேலையை முடித்து வரும் போது ராம் பால்கனியில் நின்று கொண்டிருந்தான்..அவள் வரும் ஓசை கேட்டு திரும்பியவன் அவள் தந்த பாலை வாங்கி கொள்ள அவன் கைகளை பற்றி தோளில் சாய்ந்தவாறு நின்றாள்..

ராமும் அவளை சீண்டவில்லை ஏனோ அந்த நொடி ரம்மியமாய் இருப்பதாய் தோன்றியது..அவளை மெதுவாய் நகர்த்தி அருகில் சுவரில் சாய்ந்த வாறு அமர்ந்தான்..இரவின் நிசப்தம்,அவ்வப்போது கேட்கும் சில பறவைகளின் சத்தம் சுகமாய் வருடும் தென்றல்,அருகில் தன்னவள் தன்னிலை மறந்து உரிமையாய் தன் தோளில்..பாலை பருகியவாறே அவன் அமைதியாயிருக்க..அவளே வாய் திறந்தாள்..

ராம்ப்பா…

ம்ம்ம்ம்…

ஏன் எதுவுமே பேச மாட்றீங்க??

இப்படி இருக்க பிடிச்சுருக்கு அதான்..ரொம்ப நாள் ஆச்சு மகி மனசு இவ்ளோ அமைதியாயிருந்து..

ம்ம்ம்..

என்னாச்சு குட்டிமா என்ன பேசனும் சொல்லு??

ஆச்சரியமாய் ஒரு பார்வை அவளிடம்..இப்படியா ஒவ்வொரு செயலுக்கும் ஒருவனால் அர்த்தம் படிக்க முடியும்??என்ன விதமான உணர்வு..என்னமாதிரியான அன்பு..

மகி??

ஆங்ங்ங் ஒண்ணுமில்ல ராம்..முக்கியாமா ஒண்ணுமில்ல..சும்மா உங்க தோள்ல சாய்ஞ்சுக்கணும் போலயிருந்தது..நாம லவ்வ பத்தி சொல்ரீங்களா??

அழகாய் ஒரு குறுஞ்சிரிப்பு அவனிடத்தில்..ம்ம் சொல்லிட்டா போச்சு..

நிஜமா அது ஒரு அற்புதமான காலம் மகி..அது லவ் பண்றவங்களால மட்டுமே உணர முடிஞ்ச ஒரு விஷயம்..நமக்கு அந்த பொண்ண பிடிச்சுருக்கும்நு தெரியும் அவளுக்கும் நம்மள பிடிச்சுருக்குநு தெரியும் இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கம்,பயம், நேரடியா கேக்கமுடியாத சூழ்நிலை அழகான காதல் நட்பாகவே போயிட்டுருக்குற நேரம் ஒரு அழகிய நரகம் அது..நம்மளும் அப்படிதான்டா உன் கண்ணே ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் எனக்கு ஆனாலும் ஒரு தயக்கம் என்கிட்ட இருக்கும்..கடைசிவர ப்ரெண்டாவே இருந்துடலாம்நு கூட நினைச்சுருக்கேன்..உன்கிட்ட அதிகமா பேசகூடாது இன்னும் என்னென்னவோ ஆனா எதுவுமே நடந்ததில்ல..நாம ரெண்டு பேரும் சேர்ந்துதான் டின்னர் சாப்ட போவோம்..நிறைய பேசுவோம்..ஆனா சத்தியமா பேசி முடிச்சு என்ன பேசினோம்னு யாராவது கேட்டா எனக்கு ஒண்ணும் தெரிஞ்சுருக்காது..நா உன் கண்ண மட்டும் தான் பாத்துட்டு இருப்பேன்..அது எப்படிதான் உன் வாய் பேச ஆரம்பிக்கும் போது அதுவும் துடிக்குமோ தெரில..என்றவாறே அந்த நினைவில் சிரித்தான்..அவளும் அவனை ஏறிட்டு பார்த்துவிட்டு குனிந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.