(Reading time: 19 - 38 minutes)

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

கதவை திறந்து கொண்டு இரு பெண்கள் ஆடிய படியே உள்ளே வர..
ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை
வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு

அவர்களை தொடர்ந்து அடுத்த இரண்டு ஜோடி பெண்கள் உள்ளே நுழைய

பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு...
உரிமைக்காக ஒத்த முடிச்சு
உரிமைக்காக ஒத்த முடிச்சு அடியே
உறவுக்காக ரெண்டாம் முடிச்சு
ஊருக்காக மூணாம் முடிச்சு
முடிச்சு...முடிச்சு முடிச்சு முடிச்சு
பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்

அதற்கடுத்து உள்நுழைந்த இரு பெண்களை பார்த்த ராமும் பரணியும் ஆச்சரியத்தில் கண்களை விரிக்க நுழைந்தது சாக்சாத் நம்ம மகியும் சாக்ட்சியும் தான்..மணமகனுக்கே உரிய புன்னகையோடு பரணி இருந்தால்,ராம் வேறு உலகத்துக்கே சென்றுவிட்டான்..தன்னவளின் அபிநயங்களும் அந்த சிரிப்பும் கிறங்கித்தான் போனான்..அருகிலிருந்தவர் மகியை பாராட்டி அவனுக்கு கை கொடுக்க அப்போதுதான் சுய நினைவிற்கே வந்தான்..பெண்கள் இருவரும் நாணம் கலந்த சிரிப்போடு மேடையேற அவர்களின் நாயகர்களோ கண்களால் பாராட்டு பத்திரம் வாசித்தனர்..நல்லபடியாய் நிச்சயதார்த்தம் தொடங்க திருமண தேதி இப்போதைக்கு இல்லை என்பதால் சம்ப்ரதாயத்துக்காக தட்டு மாற்றுவது மட்டுமே…ராமும் மகியுமே பரணியின் சார்பாக தட்டுமாற்ற அமர்நாத் அதை பெற்று கொண்டார்..அமர்நாத் பரணியின் கையில் அழகிய வைர கற்கள் பதித்த மோதிரத்தை அணிவிக்க ஏதோ சொல்ல வாயெடுத்தவனை சூழ்நிலை கருதி அடக்கினான் ராம்..மகி அவர்கள் வாங்கி வந்திருந்த மோதிரங்களை மணமக்களிடம் கொடுக்க இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர்..

இவ்வாறு அவரவருக்கான வேலைகளை பார்த்த வண்ணம் நேரம் கழிய..ஏதோ எடுப்பதற்காக பரணியின் அறைக்கு சென்ற மகியை பின்னிருந்து இழுத்து தன் மீது சாய்த்தான் ராம்..அந்த நொடி திடுக்கிட்டவள் தன்னவனின் கரம் என்பதை அறிந்து

விடுங்கப்பா யாராவது வந்தா அவ்ளோ தான்..

அதெல்லாம் முடியாது நா கேக்குறதுக்கு பதில் சொல்லிட்டு போ..

என்னவென அவனை திரும்பி பார்க்க..

என்ன திடீர்நு டான்ஸ்லா??யாரு அந்த வாலு போட்ட ப்ளான்னா??

இல்லப்பா அவ ப்ரெண்ட்ஸ்..இப்போ இந்த சர்ப்ரைஸ் டான்ஸ் தான் பேஷனாம்..சாக்ட்சி தனியா ஆடமாட்டேன்னு என்ன இழுத்து விட்டுட்டா..எப்படியிருந்தது.??

இதுக்கு பதில் இப்போவே சொல்லவா இல்ல வீடுக்கு போய்…என அடிக்குரலில் ராகமாய் கேட்க,பெண் மனது அந்நிச்சயாய் விழித்து கொள்ள..நீங்கசொல்லவே வேணாம் என அவனிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டாள்…

அவர்களிருவரும் வருவதை பார்த்த பரணியும் சாக்ட்சியும் தங்களுக்குள் சிரித்து கொள்ள,பரணி ராமிடம்..

இங்க யாரு புது ஜோடி யாருக்கு என்கேஜ்மெண்ட்னே புரிலடா..

அப்கோர்ஸ் உனக்குதான் மச்சான்..

ம்ம் சிலரை பாத்தா அது மறந்திடுதுடா..ம்ம் நீ நடத்து..-பரணி..

அனைவரும் உணவருந்த செல்ல ராமிற்காக காத்திருந்தாள் மகி..

ஹலோ மிஸஸ்.மகிஷா ராம்..என்ற குரலில் சட்டென பின் திரும்பியவள் அங்கு விநாயக் நிற்கவும் சிநேகமாய் புன்னகைத்தாள்..

ஹலோ அங்கிள்..

எப்படிமாயிருக்க..உடம்பு இப்போ பரவால்லையா??

ம்ம் நல்லாயிருக்கேன் அங்கிள்..நாம ஏற்கனவே பாத்திருக்கோமா??சாரி எனக்கு நியாபகமில்லை..இப்போ சாக்ட்சி சொல்லி தான் தெரியும்..

அட நா ஒண்ணும் அவ்ளோ முக்கீயமான ஆள்ளா இல்லம்மா..உன்ன பாத்துட்டு பேசாம போனா நல்லாயிருக்காதுநு தான் கூப்டேன்..

என அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே ராம் வந்துவிட மகி இங்க என்ன பண்ற??உன்ன சாப்டதான போக சொன்னேன்..கிளம்பு என அடிக்குராலில் உறுமினான்..அவனின் கோபத்தை உணர்ந்தவள் ஒன்றும் பேசாது அங்கிருந்து நகர்ந்து விட்டாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.