(Reading time: 7 - 14 minutes)

ந்த நிலையிலும் அவன் சொன்னதன் பொருள் உணர்ந்து ரோசம் வந்தாலும் குழந்தைக்கு ஊசி என்ற உடன்

பேதை மனது தவித்துப்போனது ..அவளிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே .. கண்ணனுக்கு ஊசிபோட்டவன் ...

கன்னன்கொஞ்சம் தூங்கணும் அவனை தொட்டிலில் போடுங்க என கூறினான் ..

கண்ணனை தூங்கவைத்தவள் அவன் காய்ச்சல் கொஞ்சம் குறையும் வரையிலுமே அவனை விட்டு அகலவில்லை ...

பின் நகர்ந்தவள் தோட்டத்தை நோக்கி சென்றால் ... அங்கு தோட்டம் என்பது நிறைய மாமரம் மற்றும் பாதாம் மரங்களைக்கொண்டது .... மாலைநேரத்தில் காதை அடைக்கும் குருவி சத்தம்  இவளுக்கு பிடித்தமான ஒன்று அதே போல் ...மதியநேரத்தில் சூரிய வெளிச்சம் இருக்கும் வெப்பம் இருக்காது .. மரங்களுக்கு நடுவில் ஒரு பைப் உண்டு ... மதிய வெயில் நேரத்தில் ஜில்லென்ற அந்த நீரும் அதன் ருசியும் அபாரமாக இருக்கும் .... ஆங்காங்கே பல சிமெண்ட் பெஞ்சுக்களும் உண்டு அதில் ஒன்றில் சென்று அமர்ந்தவள் மேலே நோக்க ... கோத்துக்கொத்தாய் கைத மாங்காய்கள் இவளை பார்த்து சிரித்தன ...

சோகமே உருவாய் அங்கு அமர்ந்து இருந்தவளை கண்ட குருவிற்க்கு அவளிடம் சென்று பேச வேண்டும் என்ற உந்துதலினால் ...அவள் அருகே சிறிது இடைவெளி விட்டு அமர்ந்தான் ... 

நிமிர்ந்து பார்த்த ரஞ்சியும் ஒன்றும் கூறாமல் எதையோ மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் ...

மௌனமே அங்கு மொழியானது ..

சினேகத்தை விட தேடிக்கெள்ள வேண்டிய சிறப்புடையது வேறு என்ன இருக்கிறது. நல்லவர்களுடைய சினேகம் சந்திரனை போல் நாளுக்கு நாள் வளரும்.மேலும் நயமான ஒரு நுலை படிக்க படிக்க அதன் சிறப்பு அதிகமாக புலப்படுவது போல நல்ல குணம் உள்ளவர்களுடைய நட்பு பழக பழக இன்பம் அதிகரிக்கும். ஒருவரோடு ஒருவர் நட்பு கொள்வது இன்பமானவற்றை பேசி சிரித்து மகிழ்வதற்கு மட்டுமல்ல.ஒருவர் ஒரு குற்றம் செய்தால் மற்றவர் அதை எடுத்துகாட்டி இடித்து திருத்தும் நட்பு தான் உண்மையான நட்பு.. ஒருவரை ஒருவர் கூடி பேசுவதால் உண்டாகிற உறவு நட்பாகாது. பின் எதனால் என்றால் ஒத்த உணர்ச்சி இருந்தால் அதுவே நட்பின் உரிமைகளை உண்டாக்கும். உணர்ச்சிகள் பொருந்தாமல் கூடி பேசுவதால் மட்டும் உண்டாகிற உறவு நட்பாகாது. அவனுக்கு தெரியாமலே அவனுக்குள்ள திறமைகளை வெளிகொணரும் கருவிதான் நட்பு. தாய்க்கு ஈடான உறவு ஒன்று இருக்கிறது என்றால் அதுவே உண்மையான நண்பனின் நட்பு

வார்த்தைகளுக்கு தேவை இன்றி அங்கே இனிதாய் ஒரு நட்பு அரங்கேறியது ...

நட்பு ஒரு வரம் 

அது நிரந்தரம் 

மகிழ்வின் மணம் தரும் 

நெகிழ்வின் நிறம் தரும் 

உயிர் உள்ளவரை உடன்வரும் 

அதன்பின்னும் நிழல் தரும்!!!

அதன் பின் கண்ணன் உடல் நிலை குறித்து சிலபல வார்த்தைகள் ... என ஆரம்பித்து ... ஆஸ்ரம முன்னேற்றத்திற்கான திட்டம் என அவர்கள் நட்பு பலம் பெற்று வளர்ந்தது ..அவன் உடனான நட்பு அவன் குடும்பத்துடன் இணைத்து ...

அவளின்  தனிமைக்கு காவலன் அவனானான் . 

சில சமயங்களில் பூக்களின் இதழ் அவன்... 

பல சமயங்களில் புயலின் உரு அவன்... 

காலத்தின் காயத்திற்கு மருந்தானான்... 

மயில் இறகாய் வருடி மனம் மாற்றினான்.. 

ஆண்களுக்கும் தாய்மை உணர்வுண்டு என்பதற்கு, 

என் தந்தைக்கு பிறகு அவனும் ஒரு எடுத்துக்காட்டு.. 

வாழ்க்கை தன் கசப்பான பக்கங்களை அவனுக்கு காட்டிய பொழுதும், 

என் புன்னகைக்காக சிரித்தவன்... 

என் கண்களுக்கும் கனவுகளுக்கும் நீயும் ஒரு தாய் தான்.. 

கருவறையின் கதகதப்பை கரம் பற்றி உணர வைத்த தாய்... 

நம் நட்பானது... 

வானம் மீது நிலவுக்கு இருக்கும் காதலை போன்றது.. 

மறைந்தாலும் பிரியாது வானத்தை விட்டு...

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:997}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.