“என்னது காதல் கல்யாணமா.... அப்படி ஒண்ணும் எனக்குத் தெரியலையே... நீங்க எப்போ எங்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணினேள்”
“ஓ அதுதான் உனக்கு கோவமா செல்லக்குட்டி.... சொன்னால்தான் காதலா.....”
“இந்த சினிமா டைட்டில் எல்லாம் என்கிட்டே சொல்லாதீங்கோ...... நான் எப்படி பளிச்சுன்னு உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.... ஆனா நீங்க என்ன பண்ணினேள்.... எங்க ஆத்துல இருக்கறவா எல்லாரையும் கரெக்ட் பண்ணி நேரா கல்யாணத்துக்கே போயாச்சு.... ச்சே இந்தக்காலத்துல ஒரு ஒருத்தரும் எப்படி எல்லாம் ப்ரொப்போஸ் பண்றா.... ஒலிம்பிக் கிரௌண்டு, பாலத்துக்கு அடில தொங்கிண்டு, ஏரோப்ளேன்ல பறந்துண்டுன்னு.... இங்க ஒரு ரோஜாப்பூக்குக்கூட வழியக்காணும்.....”, ஸ்வேதா அலுத்துக்கொள்ள ஹரி அவளைப் பார்த்தபடியே நெருங்கி வந்தான்.
அவன் நெருங்க நெருங்க ஸ்வேதா தடுமாற்றத்துடன் பின்னால் நகர ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் சுவர் தடுக்க, அதற்கு மேல் நகர முடியாமல் அதில் சாய்ந்து நின்றாள். அவள் நின்றதும் அவளைப் பார்த்தபடியே வந்த ஹரி அவளின் இருபுறமும் சுவற்றில் கை வைத்து, “என்னால இந்த மாதிரி சினிமாத்தனமால்லாம் காதலை சொல்ல முடியாது. ஆனா இங்க என்னோட நெஞ்சு முழுக்க நீதான் இருக்க”, ஹரி பேச ஆரம்பிக்க ஸ்வேதா ஆ என்று வாயைப் பிளந்தபடியே அவனைப் பார்த்தாள்.
“நீ வந்து உனக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்ன உடனே நான் இது லவ் பண்ற வயசில்லை, ஒழுங்காப் படி அப்படின்னுதான் சொன்னேனேத் தவிர உன்னைப் பிடிக்கலைன்னு எப்போ சொன்னேன். நான் இந்த அளவுக்கு முன்னேறினது அப்பா, அம்மாக்காகனாலும் உனக்காகவும்தான்..... உன்னை மகாராணி மாதிரி காலம் முழுக்க எந்தக் குறையுமில்லாம வச்சுக்கணும்ன்னுதான்.... இல்லைன்னா எனக்கு அமெரிக்கா போற ஐடியா எல்லாம் கிடையாது.... உனக்காக மட்டும்தான் போனேன்...... சீக்கிரம் சம்பாதிச்சு ஓரளவு பணத்தை சேர்க்கணும் அப்படின்னுதான்......”, என்று கூறியபடியே ஒற்றைக்காலில் மண்டியிட்டு தன் பாக்கட்டில் இருந்து ஒரு மோதிரப்பெட்டியை எடுத்தான்.
ஸ்வேதாவின் கண்களைப் பார்த்தபடியே, “I love you from bottom of my heart. Will you marry me?”, என்று கேட்க, ஸ்வேதா கண்களில் கண்ணீர் பளபளக்க தன் அத்தனை பற்களையும் காட்டினாள்.
“இப்போ முடியாதுன்னு சொன்னா கல்யாணத்தை நிருத்திடுவேளா....”
“அது எப்படி..... இது இங்கிலீஷ்க்காரன் ப்ரொப்போஸல்..... அதுக்கு மடிஞ்சு வரலைன்னா... அடுத்து உடனே தமிழ்நாட்டுக்காரனாகிட வேண்டியதுதான்..... பொண்ணத் தூக்கிருவோம்ல....”, என்று கூற ஸ்வேதா கலகலத்து சிரித்ததாள்.
“சரி அப்படியே சிரிச்சுண்டே எனக்கு ஓகே சொல்லிடேன்..... எத்தனை நேரம் ஒத்தக் கால்ல நிக்கறது...... கால் வலிக்கறது”, வடிவேல் பாணியில் கூற......
“உங்களோட இந்த மொக்க டயலாக்காக இல்லாட்டாலும், சூப்பர் வைர மோதிரத்துக்காக ஓகே சொல்றேன்......”, என்று கூற ஹரி சிரித்தபடியே ஸ்வேதாவின் கையில் அந்த மோதிரத்தை அணிவித்தான்.
கௌஷிக் மிகச்சரியாக என்ட்ரி கொடுக்க, கௌரியின் விசிலுடன் ஹரியின் ப்ரோப்போஸல் ஸ்வேதாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு புடவையும் சரியில்லை என்றபடியே பெரியவர்கள் கோஷ்டியும் வந்து சேர்ந்தது. புதன் கிழமை எல்லாரும் நல்லி வாசலில் மீட் செய்யலாம் என்ற படியே ஹரிக்குடும்பம் கிளம்பினார்கள். நல்லியையும், நாதெள்ளாவையும் அந்தக் குன்றின் மேல் இருக்கும் குமரன் மாமிகளிடமிருந்து காப்பாராக......
தொடரும்
{kunena_discuss:964}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.