(Reading time: 9 - 18 minutes)

"ண்ணா!நீங்க இன்னும் தூங்கலை?"-நெடு நேரமாய் அந்த கைப்பேசியை முறைத்துக் கொண்டிருந்தவனிடம் வினவினான் எட்வர்ட்.

"ம்...தூங்கணும்!நீ ஏன் முழிச்சிட்டு இருக்க?"

"அண்ணி உங்களுக்கு கால் பண்ணிருந்தாங்கண்ணா!உங்க போன் என் ரூம்ல இருந்தது!அப்பறம் போன் பண்றேன்னு சொல்லிட்டாங்க!"-என்று அவனது கைப்பேசியை அவனிடமே தந்தான் எட்வர்ட்.

"எதாவது முக்கியமான விஷயமா?"

"தெரியலைண்ணா!"

"சரி நான் பேசிட்டு வரேன்!"-தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான் ஜோசப்.

அவன் சென்றதும் எட்வர்ட்டின் பார்வை அந்த கைப்பேசியில் பதிந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"லோ!"

"சொல்லும்மா!போன் பண்ணிருந்த?"

"நீங்க தூங்கலையா?"

"இல்லை..தூக்கமே வரலை!"

"ரொம்ப ஸ்ட்ரெயின் எடுத்துக்காதீங்க!ரெஸ்ட் எடுங்க!"

"எங்கே?ஏற்கனவே இரண்டு இயரிங் முடிந்துவிட்டது.அடுத்த இயரிங் ஜட்ஜமண்ட்!இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு!என்ன பண்ண போறேன்னே புரியலை!"

"கவலைப்படாதீங்க!எல்லாம் நல்லப்படியா நடக்கும்!பயப்பட வேணாம்!"

"ம்...உன்கிட்ட கூட அதிகமா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலை!8 வருஷம் கழித்து பார்த்திருக்கோம்.ஆனா!"

"ப்ச்..என்ன நீங்க?இதுக்கெல்லாம் வருத்தப்படுறீங்க?இன்னும் ஒரு வாரம் தானே!கேஸ் முடிந்ததும் ஸ்பெண்ட் பண்ணிக்கலாம்!"

"எனக்கு ஜெயிப்பேன்னு நம்பிக்கையே இல்லை!"

"எனக்கு இருக்கு!"

"ம்??"

"எனக்கு இருக்கு!நானும் எவ்வளவோ ட்ரை பண்ணுறேன்.ஆனா,அக்யூஸ்ட் யாருன்னு யூகிக்க கூட முடியலை!எப்படி இருந்தாலும் நீங்க ஜெயிப்பீங்க!"

"லவ் யூ டி!"-அவளிடம் சிறு புன்னகை!!

"சீக்கிரம் போய் தூங்குங்க!டைம் ஆகுது!"

"சரி..!"-இணைப்பு துண்டிக்கப்பட்டது.

வளிடம் பேசிவிட்டு உள்ளே நுழைந்தான் ஜோசப்.எட்வர்ட் அந்த நொறுங்கிய கைப்பேசியில் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

"எட்?"

"ம்..!"

"என்ன பண்ணிட்டு இருக்க நீ?"

"போன் எப்போ உடைந்ததுண்ணா?"-அவனிடம் சில நொடிகள் மௌனம்.பின்,

"நேற்று தான்..!அதில வேற முக்கியமான டாகுமண்ட்ஸ் பி.டி.எப் எல்லாம் இருக்கு!மெமரி கார்ட் எங்கே விழுந்ததுன்னே தெரியலை..!"

"மெமரி கார்டுலையா ஸ்டோர் பண்ணி இருந்தீங்க?"

"ம்..ஆமாடா!"

"முக்கியமான டாகுமண்ட்டா?"

"ரொம்ப முக்கியம்!அது வேற ஆனாகி தொலையலை!"

"இருங்க நான் ட்ரை பண்ணி பாக்குறேன்!"-என்றவன் ஒரு நாற்கலியில் அமர்ந்தான்.அந்த கைப்பேசியோடு ஒரு ஒயரை சொருகி அதை கணினியோடு இணைத்தான்.

"No Removable disc!"என்று வந்தது.

பின் அதில் ஏதேதோ செய்தான்.ஒரு மணி நேரம் அதனோடு போராடினான்.

அடுத்த சில நிமிடங்களில்,

"Do you want to restore all the files?"என்று வினவியது கணினி.

அவன் ஆம் என்று ஆணையிட,சில நொடிகளில்,"processing done!Your folders has been restored."என்று வந்தது.

"ம்..முடிந்துவிட்டது!"-என்றான் சாதாரணமாக!!

ஜோசப்பால் நம்ப இயலவில்லை.மகிழ்ச்சியில் தன் அநுஜனை அணைத்துக் கொண்டான்.

"அண்ணா!போங்கண்ணா!எதுக்கெடுத்தாலும் கட்டிப்பிடிக்கிறீங்க!அண்ணியை பார்த்ததுல இருந்து என்னமோ ஆயிடுச்சு உங்களுக்கு!"-என்று புலம்பியப்படி வெளியேறினான் எட்வர்ட்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.