ஜோசப்பிற்கு அதை கவனிக்க நேரமில்லை.
தனது கணினியில் தன் தேடலை தொடங்கினான்.
"வீடியோஸ்!"-என்ற போல்டரில் நுழைந்தான்.
அடுக்கடுக்கான தராதரமில்லாத பல படங்கள்!!
இறுதியாக இருந்தது அது!!
"ப்ளீஸ்..என்னை விட்டுவிடுங்க!நான் படிக்கணும்.நான் வேற ஒருத்தரை விரும்புறேன்!இன்னும் கொஞ்ச நாளில் அவருக்கும்,எனக்கும் கல்யாணம் ஆக போகுது!"-கெஞ்சினாள் சுப்ரியா.
"ஏ..அப்படி என்னடி என்கிட்ட குறையை பார்த்த?கோடிக்கணக்கான சொத்து வைத்திருக்கேன்.நீ என்னடான்னா,மாசம் ஆயிரக்கணக்குல சம்பளம் வாங்குற ஒருத்தன் கூட தான் வாழணும்னு சொல்ற?"-வக்கிர எண்ணம் கொண்ட அந்த மிருகம் சுப்ரியாவின் அழுகுரலை தானே பதிவு செய்துக் கொண்டிருந்தது.
"கடைசி வாய்ப்பு தரேன்!என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு!உன்னை விட்டுவிடுறேன்!"
"நான் செத்தாலும் அது நடக்காது.நான் காதலித்தவர் கூட தான் கடைசி வரை வாழுவேன்!"
"அப்போ உன் சாவுக்கூட சாதாரணமா அமையாது!"-அதில் அடுத்தடுத்து வந்த கொடூரங்களை காண இயலாமல் கண்களை இறுக மூடினான் ஜோசப்.உயிரே ஒடுங்கியது அவனுக்கு!!
இறுதியாக,சுப்ரியா உயிர் பிரியும் சமயம் அந்த கைப்பேசியை தட்டிவிட,அதுவரை நிழலாய் தெரிந்த உருவத்தின் முகம் வெளிச்சத்திற்கு வந்தது.மனித உருக்கொண்ட மிருகம் அது!!!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
தனிமையில் சாலையில் உலவிக்கொண்டிருந்தாள் நிர்பயா.
மனம் முழுதும் ஆயிரம் கேள்விகள்!!
ஆயிரமாயிரம் உணர்வுகள்.
"இறைவா!அவரிடம் கிட்டிய இந்த பொறுப்பு சீராக நிறைவேற்றப்பட வேண்டும்.அவர் பெயரில் எந்த கலங்கமும் வரக்கூடாது!"-மனம் முழுதும் ஜோசப்பை குறித்த எண்ணங்கள்!!அப்போது அவள் முகத்தில் பளீரென்று வீசிய காரின் வெளிச்சம் அவள் சிந்தனையை கலைத்தது.அதிலிருந்து இறங்கினாள் ஸ்வேதா,அவளை தொடர்ந்து கார்த்திக்கும் இறங்கினான்.
அவளை பார்த்தப்படி வந்தவளின் முகத்தில் ஏளனம்!!
நிர்பயா அவளை கண்டுக்கொள்வதாய் இல்லை.பேசாமல் திரும்பியவளை தடுத்தது அவள் குரல்.
"ஹலோ!கலெக்டர் மேடம்!"
"............."
"பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு போல?எப்படி இருக்கீங்க?"
".............."
"ரொம்ப இளைத்துட்டீங்க?அண்ணனை பார்க்க முடியலைன்னு ஏக்கமா?"-என்று கார்த்திக்கை சுட்டினாள் அவள்.அவனோ அவள் முகத்தையே பார்த்தப்படி நின்றிருந்தான்.
"ம்..பழைய விஷயத்தை எல்லாம் மறந்துட்டீங்க போல?"
".............."
"வாயை திறந்து பேசு!"
"..............."
"ஏ...உன்னை தான்!"-என்று அவள் முன் விரல் சொடுக்கினாள் ஸ்வேதா.
"அண்ணா என்னடா?உன் ஏஞ்சல் வாயை திறக்க மாட்றா?"-அவனிடமும் ஏளனம்.
"சரி விடு..!மறுபடியும் உன்னை பார்த்ததுல சந்தோஷம்!"
".............."
"ஆனா நீ ரொம்ப அழுத்தக்காரிடி!உன்னை எல்லாம் எவ்வளவு கொடுமை படுத்தினாலும் என் ஆத்திரம் அடங்காது!"
"உனக்கு என்ன வேணும்?"
"ம்...பழைய விஷயம் எல்லாம் ஞாபகம் வந்துடுச்சா?"-நிர்பயாவால் அதற்கு மேலும் காக்க முடியவில்லை ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தாள்.அவளது அதிரடி நடவடிக்கை இருவரையும் தடுமாற வைத்தது.
"ஏ...உனக்கு என்ன தைரியம் இருந்தா என் தங்கச்சியை?"-கார்த்திக் கை ஓங்க அவனது கரத்தை இறுக பற்றினாள் நிர்பயா.
"என்ன நினைத்துக்கொண்டிருக்க?இவ பழைய மாதிரி தான் மாறலைன்னா?ஒருத்தனையும் சும்மா விட மாட்டேன்.ஜாக்கிரதை!"-என்றவள் அவன் கைகளை உதறினாள்.
"ஒரு விஷயத்தை நல்ல தெரிந்துக்கோங்க!நான் உங்க பழிச்சொற்களுக்கு பயந்து ஒடுங்கி ஔியுறவள் இல்லை.இன்னிக்கு அதனால தான் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறேன்.செய்த பாவங்களுக்கான தண்டனை ரொம்ப சீக்கிரமே உங்களை தேடி வரும்!"-கனலை கக்கிவிட்டு வீறுக்கொண்டு நடந்தாள்.அந்த நிமிடம் அவளை பழித்தவர்களின் சிரம் அவமானத்தால் குனியவே செய்தது!!!
தொடரும்
{kunena_discuss:1030}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.