(Reading time: 17 - 34 minutes)

"நிஜமாவாண்ணா சொல்றீங்க... அதுக்கு அப்பா என்ன சொன்னாரு...??" என்று நர்மதா ஆச்சர்யத்தோடு கேட்டாள்...

"அப்பா ஓகே சொல்லிட்டாரு... யமுனா சம்மதம் சொன்னதும், கல்யாணம் தான்.." என்றதும்...

இளங்கோ எப்படியும் யமுனாவை திருமணம் செய்துக் கொள்வான்... அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துவிடும் என்று நர்மதா சந்தோஷப்பட்டாள்... யமுனாவோ... "நர்மதா டைம் ஆச்சு கிளம்பளாமா..??" என்று அவன் சொன்னது இவளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது போல் எழுந்தாள்.

"இருடி போலாம்.. என்று யமுனாவிடம் சொன்னவள்... இளங்கோவை பார்த்து,

"அண்ணா கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா.. சீக்கிரம் ஆப்போசிட் ஸைட்ல இருந்தும் சம்மதம் வரும் கவலைப்படாதீங்க என்றவள்...

"எனக்கு ஒரு தம்பி இருக்கான்... அது அண்ணனா இருக்கக் கூடாதான்னு நான் ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கேன்... இப்போ அப்படியெல்லாம் நினைக்க தோணாது... நானும் உங்களை என் கூட பிறந்த அண்ணனா தான் நினைக்கிறேன்..." நர்மதா பேசிக் கொண்டிருக்கும் போதே...

"நர்மதா... உன்னோட பாசமலர் படத்தை ஓட்டி முடிச்சாச்சுன்னா... நாம கிளம்பளாமா..??" என்று யமுனா அவசரப்படுத்தினாள்...

"போடி... எனக்கு அண்ணன், தம்பி எல்லோரும் இருக்காங்க... உனக்கு அப்படி யாருமில்லையேன்னு  பொறாமைப்படாத.." என்று நர்மதா கேளியாக சொன்னதும், யமுனா முகம் சட்டென்று வாடிவிட்டது... அதை இளங்கோவும் கவனித்தான்.

"சரி நான் வெளியே வெய்ட் பண்றேன்... நீ உன்னோட மிச்சமீதி பாசமலர் படத்தை ஓட்டிட்டு வா.." என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டாள்.

அவள் வெளியே சென்றதும் இளங்கோவோ... " என்ன நர்மதா... யமுனாக்கிட்ட அப்படி பேசிட்ட..?? நீ அப்படி பேசினதும் அவ முகமே வாடிப்போச்சு.." என்றான்.

"அது கிண்டலா பேசறதா நினைச்சு... அப்படி பேசிட்டேன்... நான் பேசறதுக்கெல்லாம் அவ ஃபீல் பண்ணமாட்டாண்ணா.. அப்படியேன்னாலும் ஒரு கேட்பரீஸ் டெய்ரி மில்க் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்திட்றேன்..."

"இருந்தாலும், இன்னும் அவ ஓகே சொல்லல... அதுக்குள்ள, நீ நாத்தனார் வேலையெல்லாம் காட்டாதம்மா.." என்று கேலியாக கூறினான்.

"அண்ணா இதெல்லாம் உங்களுக்கு ஓவரா தெரியல... அவ ஓகே சொல்ல, என்னோட ஹெல்ப்பும் கொஞ்சம் வேணும்... ஞாபகம் வச்சீக்கங்க.. சரி அவ வெய்ட் பண்றா.. நான் கிளம்பறேன்.. அப்புறம் நான் சொன்னதை கவனீச்சீங்களா..??"

"என்னதும்மா..??"

"அதான்.. மேடம் ஐ சமாதானப்படுத்த டெய்ரிமில்க் சாக்லேட் வாங்கிக் கொடுக்கனும்.. அதுவும் ஃப்ரூட் அன் நட் தான் மேடமோட பேவரிட்.. பின்னாடி யூஸ்ஃபுல்லா இருக்கும், ஞாபகம் வச்சீக்கிங்க... சரி வரேன்.." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

கொஞ்சம் காஸ்ட்லியா தான் சமாதானப்படுத்த வேண்டியிருக்கும் போலயே.. என்று நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

நர்மதா வெளியே வந்தபோது எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி யமுனா நின்றுக் கொண்டிருந்தாள்.. நர்மதா அவள் அருகில் வந்தாள்..

"என்னடி கோபமா..??"

"எதுக்கு..??"

"அதான் நான் அப்படி பேசினதுக்கு.. ஸாரிடி ஏதோ விளையாட்டா வாய்ல அப்படி வந்துடுச்சு.."

"ஹேய்.. எதுக்கு ஸாரியெல்லாம் சொல்ற.. நான் அதை பெருசா எடுத்துக்கல.. போதுமா..??"

"எனக்கு தெரியும் டீ.. இருந்தாலும் உன்னோட முகம் வாடிப் போச்சாமே.. இளங்கோ அண்ணா தான் பார்த்துட்டு சொன்னாரு... உன்னோட முகம் வாடிப்போறத கூட அவரால தாங்கிக்க முடியல.. அப்பா என்ன காதல்...

ஹேய்... அவர் அவங்க அப்பாக்கிட்ட கூட சொல்லிட்டாராம்.. கேட்டல்ல..?? எப்போ தான் சம்மதம் சொல்லப்போற..??" நர்மதா கேட்டதும்,

"சரி டைம் ஆச்சு போலாமா..??" என்றப்படியே யமுனா நடந்தாள்.

"அதானே பதில் சொல்லிட்டாலும்... ஏன் டீ இப்படி இருக்க..??" நர்மதாவும் நடந்தப்படியே கேட்டாள்.

"அதை நான் கேக்கனும்..." என்று யமுனா சொன்னதும், நர்மதா புரியாத பார்வை பார்த்தாள்.

"நானும் வந்ததிலிருந்து, உன்னோட பாசமலர்க்கிட்ட உன்னோட கல்யாண விஷயத்தை பத்தி சொல்லுவன்னு எதிர்பார்த்தேன்.. ஏன் சொல்லல..??"

"அதுவா... இன்னிக்கு தான பேசி முடிச்சாங்க... மெதுவா சொல்லிக்கலாம்னு நினைச்சேன்.. அதுக்கு என்னடி இப்போ..?"

"இன்னிக்கு தான் பேசி முடிச்சாங்களா..?? கல்யாண தேதியே முடிவுப் பண்ணிட்டாங்க.. அதுவும் 25 நாளில்.. ஏதாவது சின்னப் பொருள் வாங்கினாக் கூட... உங்கண்ணாக்கு அதை போட்டோ பிடிச்சு.. வாட்ஸ்அப்ல அனுப்பி நல்லா இருக்கான்னு கேக்கறவ நீ... இன்னிக்கு உன்னோட லைஃப்ல நடக்கற் முக்கியமான விஷயத்தை சொல்லலன்னா என்ன அர்த்தம்..??"

"......"

"இங்கப்பாரு நர்மதா... கோவில்ல சொன்னதை தான் இப்பவும் சொல்றேன்... அந்த ரிஷப் விஷயத்துல நடந்ததை மறந்திடு... இந்த கல்யாணத்தை விருப்பத்தோட ஏத்துக்க... அப்போதான் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்... புரியுதா..??"

"ம்ம் புரியுது.. புரியுது... நான் நீ சொன்னப்படியே நடந்துக்கிறேன்... இளங்கோ அண்ணாக்கிட்டேயும் சீக்கிரம் சொல்றேன்.. போதுமா..?? டைம் ஆச்சு.. டைம் ஆச்சுன்னு அவசரப்பட்டல்ல.. போலாமா..??" என்று அந்த பதிப்பகத்தை விட்டு வெளியே வந்தும், பேசியபடியே நடந்தவர்கள்... அந்த வழியே ஒரு ஆட்டோ வந்ததும்.. அதில் ஏறிக் கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.