(Reading time: 14 - 27 minutes)

மூங்கில் குழலானதே – 15 - புவனேஸ்வரி

Moongil kuzhalanathe

ன்னிப்பு! ஒரே வார்த்தையில் வலியை போக்கிவிடும் மந்திரமா அது? “சாரி” என்று இப்போதெல்லாம் கேட்கப்படும் வார்த்தையில் அர்த்தம் இருக்கிறதா?

ஒரு வாதத்தை முடிப்பதற்கும், சண்டை வராமல் இருப்பதற்காகவும் “சாரி” என்று சொல்வது எப்படி சரியாகும்? வார்த்தையாலும், செயலினாலும் ஒரு மனதை காயப்படுத்திவிட்டு, ஒரே வார்த்தையில் அதை சரி செய்துவிட முடியுமா?

அர்த்தமில்லாமல் கேட்கப்படும் மன்னிப்புகளினால், மனமுவந்து கேட்கும் மன்னிப்பும் நிராகரிக்கப்படுகிறதோ? சிந்திக்கிறேன் சகிதீபன்!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்த நந்திதாவின் குரல் கொஞ்சமாய் கீழிருப்பவர்களுக்கும் கேட்டது. அவள் என்ன பேசுகிறாள் என்பது தெளிவாய் கேட்காமல் போனாலும், ஏதோ கோபமாய் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது அனைவருக்கும். அதைக் கண்டு கொண்ட சாரதா அவசரமாய் மாடிப்படியில் ஏறிட அவரைத் தடுத்தார் அருண் தாத்தா.

“ சாரதா, எங்கம்மா போற?”

“ மாமா நந்திதா  சத்தம் போடுற மாதிரி இருக்கே !”

“ ஆமாம்மா .. ஆனால் கவலைப்படாதே உன் மருமகள் தனியாய் பேசிக்கிட்டு இல்லை.. கூட சகியும் இருக்கான்” என்று கூலாக கூறினார் அருண் தாத்தா. அவரது கேலியை ரசிக்கும் மனநிலையில் இல்லாத சாரதாவோ,

“ஏதோ சண்டை போடுற மாதிரி இருக்கு மாமா.. நான் போயி பார்க்குறேன்..” என்றார்.

“ அம்மாடி, நந்திதா நமக்கு மருமகள் ஆகுறதுக்கு முன்னாடியே சகிக்கு ப்ரண்டு. அவங்க ப்ரண்ட்ஸ்குள்ள் ஆயிரம் இருக்கும் .. நீ கவலைப்படாமல் போம்மா.. சின்னவ இப்போதானே வந்தாள் ? அவ கிட்ட போய் பேசு” என்று சாரதாவை விஷ்வானிகாவிடம் பேச சொன்னார். சாரதாவும், ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து சென்று விட்டார்.

“ சொல்லுடா .. சொல்லு! ஏன் என்கிட்ட மறைச்ச .. உன் அண்ணாவுக்கு கல்யாணம் ஆச்சுன்னு ஏன் என்கிட்ட நீ சொல்லல? என்று தன் சட்டையை பிடித்துக் கொண்டு கேட்ட நந்திதாவை பாவமாய் பார்த்தான் சகிதீபன். அவளது கோபத்தின் அளவை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், அவளைப்போல அவனால் ஆவேசமாக முடியவில்லை. காரணம் அவனைப் பொறுத்தவரை அதற்கு பெயர் திருமணமே இல்லை!

“ நந்து, ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ, உன்கிட்ட உண்மையை மறைக்கணும்னு நினைச்சிருந்தால், நான் நந்தினியைப் பத்தி உன் கிட்ட சொல்லி இருக்கவே மாட்டேனே!”

“ சோ? என்ன சொல்ல வர்ற? கொஞ்சம் உண்மைய சொன்னதுனால நீ சொல்லாமல் போனது சரின்னு ஆகிடுமா?” என்று பதிலுக்கு கேட்டாள் நந்திதா. சட்டென மூண்ட எரிச்சலில்,

“என்ன சும்மா கல்யாணம் கல்யாணம்னு சொல்லுற? அந்த தாலிக்கு அவ மதிப்பு கொடுத்தாளா ? அவளால் தானே என் அண்ணன் இப்படி மாறி போயிருக்கான்? இது உன் கண்ணுக்கு தெரியலையா?” என்று கேட்டான் சகிதீபன் ஆற்றாமையுடன்.

“ நந்தினி யாரோ ஒருத்தி .. அவளுடைய உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் நான் மதிப்பு கொடுக்கனும்னு அவசியமே இல்லை.. ஆனா உன் அண்ணா என் புருஷன் தானே? அவருடைய உணர்வுகள் எனக்கு முக்கியம்தானே? அவர் அந்த தாலிக்கு மதிப்பு கொடுத்தார் தானே? அப்போ நான் மட்டும் எப்படி அதை மதிக்காமல் இருக்க முடியுமா?” என்று நந்திதா கேட்கவும் அவளை முறைத்தான் சகிதீபன்.

“ உன் மண்டையில ஏதாவது அடி பட்டுருச்சா நந்து? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே நீ அபி அண்ணாவுக்கு குடை கொடுத்தப்போ அவர் உன்னை காதலாக பார்த்தாரு? அதை உன்னால பொய்ன்னு சொல்ல முடியுமா? எவளோ ஒருத்திக்கு கட்டின தாலியை அவரு பெரிய விஷயமாக நினைச்சிருந்தால், உன் மேல அவர் எப்படி பாசம் காட்டிட முடியும்?”

“..”

“இதுவரைக்கும் உன் விஷயத்துல நான் எப்பவும் உன் பக்கம் தான் நின்னுருக்கேன்.. அபி அண்ணாவுக்கு நான் சப்போர்ட் பண்ணி நீ பார்த்துக்கீயா? உன் புருஷன் ஏன் இவ்வளவு மக்காய் இருக்கான்னும் உன் கிட்டயே சொல்லி இருக்கேன்! ஆனா இந்த விஷயத்துல நான் அபிக்கு சப்போர்ட் பண்ணுறேன்னா, அது ஏன்னு புரிஞ்சுக்கோ நந்து!”

“..”

“யெஸ்.. நீ சொல்லுற மாதிரி அன்னைக்கு அவர் அந்த தாலிக்கு மதிப்பு கொடுத்தார் தான்.. அப்படி தாலிக்கு மதிப்பு கொடுக்குற ஒரு மனுஷன் உன்னை மதிக்காமல் போயிடுவாரா?”

“..”

“எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்த காலம்னு ஒன்னு இருக்கு. அந்த கடந்த காலம், நிகழ்காலத்தை பாதிக்க கூடாது.. நீ ஒன்னும் எதுவுமே தெரியாமல் அபி அண்ணாவை காதலிக்கல..கல்யாணம் நடந்த அந்த ஒரு நாள்  விஷயத்தை தவிர எல்லாமே உன்கிட்ட நானும் அருண் தாத்தாவும் சொல்லியிருந்தோம்.. எவளோ ஒருத்தியை நினைச்சு உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே ! இது சாதாரண விஷயம்னு நான் சொல்லல.. ஆனா, நீ உன் வாழ்க்கையை இந்த விஷயத்துக்காக பணயம் வைக்காதேன்னு சொல்லுறேன்” என்றான் சகிதீபன். அவனை பார்த்து பெரிதாய் புன்னகைத்தாள் நந்திதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.