(Reading time: 14 - 27 minutes)

ட்டென தனது க்ரெடிர்ர் கார்டை தம்பியிடம் நீட்டினான் அபிநந்தன், “ஏன்டா என்கிட்ட கேட்க மாட்டியா? என்னோடதை எடுத்துக்கோ” என்றான் அபி.

நம்மை போல நெஞ்சம் கொண்ட,

அண்ணன் தம்பி யாரும் இல்லை!

தன்னைப்போல என்னை என்னும்

நீயும் நான் ஓர் தாய் பிள்ளை!” என்று பாடினான் சகிதீபன்.  அண்ணனும் தம்பியும் பொழியும் பாசமழையை பார்த்துக் கொண்டே மற்றவர்கள் சிரிக்க,

“ சரி நான் கொஞ்சம் சோஷியல் செர்விஸ் பண்ணிட்டு வரேன்!” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் சகி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ன்னொருபுறம், தான் தங்கியிருக்கும் ஹாஸ்டலின் எதிரில் இருந்த டீ கடையை பாவமாய்  பார்த்தாள் மைத்ரேயி. இன்னும், ரூபாய் நோட்டின் செய்தி அவர்களுக்கு தெரியாது என்பது அவர்களது களிப்பான முகத்தை பார்க்கும்போதே தெரிந்தது.

சில்லறை மாற்ற வழிதேடி கொண்டிருந்த சிலர், டீ வாங்கி சாப்பிடுவது போல அந்த கடையில் மொய்த்துகொண்டு நின்றனர். அவளால் பொறுக்க முடியவில்லை ! அந்த டீக்கடைகாரரும் சராசரி மனிதன் தானே அவருக்கும் செலவுகள் இருக்காதா என்ன?

பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்த கடையை நோக்கி வந்திருந்தாள் அவள். சென்னைக்கு வந்து தங்கிய அந்த சில நாட்களில் அவருக்கு நன்கு பரிட்சயமாகி இருந்தார். அந்த உரிமையில் அவரிடம் பேச வந்தாள் மைத்ரேயி.

“ஐயா!” என்று மென்குரலில் அழைத்தாள் அவள்.

“ என்னம்மா இந்த நேரத்துல? ஏதாச்சும் பிரச்சனையா?” என்று அக்கறையாய் கேட்டார் அந்த பெரியவர்.

“ ஐயா.. உடனே கடையை மூடுங்க.. உங்களுக்கு இன்னும் செய்தி தெரியல நினைக்கிறேன்!”

“எ..என்னாச்சுமா?”

“ ஐயா இன்னும் ஒரு மாசத்துல  500 ருபாய், 1000 ருபாய் நோட்டு செல்லாதாம் .. விஷயம் தெரிஞ்சு சில்லரை மாத்தனும் தான் ஆளாலுக்கு சுத்திட்டு இருக்காங்க.. திடீர்னு இந்த நேரத்தில் உங்க கடையில கூட்டம் வரவும் இதுதான் காரணம்!” என்று மைத்ரேயி உண்மை சொல்லனும் அதிர்ச்சியாகினார் பெரியவர்.

“ச்ச.. என்ன மனுஷங்கம்மா இவங்க? எனக்கும் குடும்பம் இருக்குல? எனக்கும் செலவுகள் இருக்கும்ல? ஒரு பையன் கூட உண்மைய சொல்லாமல் கமுக்கமா இருக்காணுங்கம்மா! ச்ச சுயநலமான உலகம்” என்று கண் கலங்கினார் அவர்.

“ஐயா.. விடுங்க.. அதான் இப்போ தெரிஞ்சிடுச்சுல? ஏதாவது காரணம் சொல்லி கடையை மூடுங்க” என்றாள் மைத்ரேயி.

“ யாரு பெத்த பொண்ணோ நல்லா இருப்பம்மா நீ .. நல்லா இருப்ப!” என்று அவளை ஆசிர்வதித்தபடி கடைக்கு திரும்பியர் ஏதோ காரணத்தை சொல்லி கடையை மூடினார். தன் கையில் இருந்த 500 ருபாய் நோட்டுகளை மிரட்சியாய் பார்த்தார் அவர்.

“ இதை என்னம்மா பண்ணுறது?”

“ நான் வேணும்னா மாத்தி கொடுக்கவா?” என்று கேட்டாள் மைத்ரேயி. ஏனோ அவரைப் பார்க்கும்போது அவளுக்கு தன் தந்தையின் ஞாபகம் வந்தது. பெரியவரும் சரியென பணத்தை கொடுக்கவும், தன் பர்ஸை எடுத்துக் கொண்டு ஏ டி எம் மெஷின் இருக்கும் இட்த்திற்கு சென்றாள் மைத்ரேயி.

அதே இடத்தில் தான், அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு  இலவசமாக நீரும் பிஸ்கட்டும் கொடுத்துக் கொண்டிருந்தான் நம்ம சகிதீபன்!

தன்னால் சமாளிக்க முடிந்த கூட்டம் தான் என்று எண்ணி கொண்ட மைத்ரேயி, காதில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டாள்.

ஹாய் ப்ரண்ட்ஸ்! கொஞ்சம் நேரம் பற்றாகுறை என்பதினால் ..கதையை இங்க முடிக்கிறேன்.. இருப்பினும் உங்களுக்காக ஒரு குட்டி டீசர் கொடுக்குறேன்

“ இன்னும் உங்க பேரை நீங்க சொல்லவே இல்லையே! சொல்ல மாட்டீங்களா?” என்று சகிதீபன் கேட்க, புன்னகையுடன்,

“மைத்ரேயி!” என்றாள் அவள்.

“ மைத் ..ரே..யி” என்று சகிதீபன் மிருதுவாய் அவளின் பெயரை ஆராயவும், சிலிர்த்து போனாள் அவள்.

சில நொடிகளில் அவன் பக்கமாய் திரும்பியவன், “மாயா!” என்று அழைத்தான். கண்களில் மின்னலுடன் மைத்ரேயி அவனைப் பார்க்கவும்,

“ இனிமே நான் உங்களை மாயான்னு தான் கூப்பிடுவேன்!” என்றான் சகி.

“உங்க பேரு என்ன?”

“ சகிதீபன்!” . அவனைப்போல வெளியில் சொல்லாமல் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் அவள். எவ்வளவு இனிமையான பெயர்? என்று சிலிர்த்தவள், மனதிற்குள்,

“கீதன்!” என்று அவனுக்கு செல்லப்பெயர் வைத்தாள்.

“ எனக்கு நீங்க ஒரு நிக் நேம் வைச்சுட்ட மாதிரி தெரியுதே ! என்ன பேரு சொல்லுங்க!” என்று அவன் கேட்கவும்,

“நீங்களே கண்டுபிடிங்க!” என்று பீடிகை போட்டாள் கீதனின் மாயா!

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.