(Reading time: 14 - 27 minutes)

ஹேய்.. என்ன வினி இது?” என்று அதிர்ந்தான் சகிதீபன்.

“இந்த ஒரு ஃபோட்டோ மட்டுமில்ல சகி… பாட்டி வீட்டில் தாத்தாவுடைய ஃபோட்டோ நிறையவே இருக்கு.. எல்லா போட்டோவிலும் இந்த மாதிரி பழைய பாட்டை எழுதி வெச்சு இருக்காங்க.. அந்த போட்டோஸ் எல்லாம் எனக்கு புரிய வெச்ச விஷயம் ஒன்னே ஒன்னுதான்! “

“..”

“சாம்பவி பாட்டி தாத்தாமேல உயிரையே வெச்சு இருக்காங்க!” என்றாள் சாம்பவி. குழப்பமான மனநிலையில் இருந்தான் சகிதீபன். இதுவரை சாம்பவி பாட்டியைப் பற்றி பேசும்போது அருண் தாத்தாவின் முகத்தில் தோன்றும் தடுமாற்றத்திற்கும், இதுவரை அவர்கள் நேரில் சந்திக்காமல் சாமர்த்தியமாய் ஒருவரை ஒருவர் தவிர்த்து இருப்பதற்கும் காரணம் புரிவது போல இருந்தது.

“ ஒருவேளை, இளம்வயசுல பாட்டி தாத்தாவை காதலிச்சு இருக்கலாம் வினி.. காதல் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு அத்தியாயம் தானே? எப்பவோ நடந்த விஷயத்தை இப்போ எதுக்கு கிளறனும்?” என்று கேட்டான் அவன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“ இப்போ காதல் எதுவும் இல்லன்னா, அவங்க ஒருத்தரை ஒருத்தர் ஏன் தவிர்க்கனும் சகி ? ஏன் தாத்தாவைப் பற்றி பேசினால் பாட்டியின் முகத்துல ஒரு தேஜஸ் தெரியுது? அந்த கையெழுத்தையும் பேனா இன்க் கலரையும் பாரு..!”

“..”

“பல வருஷத்துக்கு முன்னாடி எழுதின மாதிரி தெரியலையே சகி! சாம்பவி பாட்டி ஏன் கல்யாணமே பண்ணிக்காமல் தனியா இருக்காங்க ? தாத்தாவுக்கு பாட்டிமேல காதல் இல்லைன்னா, ஒன்னு அவங்களோடு சகஜமா இருக்கனும்.. அல்லது மொத்தமா ஒதுங்கிடனும்.. ஆனா அவர் அப்படி பண்ணலையே!”

“யூ ஆர் ரைட்.. இந்த அருண்குள்ள ஒரு அரவிந்த சாமி இருக்குறதா தான் எனக்கும் தோணுது!”

“நாம ஏதாச்சும் பண்ணனும் சகி! அதுக்கு முன்னாடி பாட்டியைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கனும்!” என்றாள் விஷ்வானிகா.

“ அப்பா, அம்மா கிட்ட சாம்பவி பாட்டியைப் பற்றி கேட்டு தெரிஞ்சுக்கலாம் வினி.. ஆனால் ஒரே நேரத்தில் கேட்டால் அருண் உஷார் ஆகிடுவார்.. சோ நீ முதலில் அம்மாக்கிட்ட சாம்பவி பாட்டியைப் பற்றி கேளு… நான் சமயம் பார்த்து அப்பாகிட்ட பேசுறேன்.. “ என்றான் சகிதீபன்.

“ம்ம் ஓகே!” என்று வினி புன்னகைக்கவும் அவளது கையைப் பிடித்து குலுக்கினான் அவன்.

“ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் நானும் நீயும் ஒரு விஷயத்தை சேர்ந்து பண்ணுறோம்” என்று அவன் உற்சாகமாய் சொல்லவும்,

“ இதில் நாம ஜெயிச்சா நீ, நான் கேட்குறதை எனக்கு தரணும்” என்றாள் விஷ்வானிகா சிரிப்புடன். அவள் என்ன கேட்பாளென அவனுக்குத்தெரியாதா? முகத்தில் தோன்றிய புன்னகை இப்போது சிரிப்பாய் மலர,

“ ஹா ஹா டீல்!” என்றான் சகிதீபன்.

இருவரும் விழிகளாலேயே பேசிக் கொண்ட நேரம்,

“ அபி, நந்து, சகி, வினி எல்லாரும் இங்க வாங்க!” என்று குரல் கொடுத்தார் சாரதா.

அவரது பதட்டமான குரலைக் கேட்டு அனைவரும் ஓடிவந்தனர்.

“ என்னம்மா? என்னாச்சு ?”

“என்ன அத்தை ?” என்று நால்வரும் பதற,

“செய்தியை பாருங்க!” என்று டீவியைக் காட்டினார் சாரதா.

நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு உந்துதலில், ஒரு சேனலில் சாரதா செய்தியைத் திறக்கவும், “ 500 மற்றும் 1000 ருபாய் நோட்டு செல்லாது!’ என்ற செய்தி ஒளிபரப்பாகியிருந்தது.

“ ஹும்கும்.. இவ்வளவு தானா அம்மா? இதுக்கு ஏன் இவ்வளோ பதட்டம்? நம்ம வீட்டுல கருப்பு பணம் ஏதாச்சும் இருக்கா என்ன?” என்று கேலியாய் கேட்டான் சகிதீபன்.

“அபி அண்ணா, வீட்டுல பணம் ஏதாவது பதுக்கி வெச்சு இருக்கீங்களா?” என்று அவன் கேட்கவும் அனைவருமே அவனை செல்லமாய் முறைத்தனர்.

“சரியான அரட்டை டா நீ.. ஒரு விஷயத்தையாவது ஒழுங்கா பேசி முடிக்க விடுறியா? அபி, நந்து, வினி உங்க கையில எவ்வளவு காசு இருக்குனு பாருங்க.. எவ்வளவு மாத்தனும்னு பாருங்க! “ என்றார் சாரதா. சகியோ யோசனையுடன் செய்தியைப் பார்த்தான்.

தற்பொழுது வங்கிகள் அருகிலும் ஏ டி எம் மெஷின் அருகிலும் பெருகியுள்ள கூட்டத்தை பார்த்தான் அவன். அனைவரும் தத்தம் கையில் இருந்த பணத்தை பற்றி கணக்கு கூறிட இடைப்புகுந்தான் சகிதீபன்.

“அம்மா ஒரு நிமிஷம் இருங்க.. “

“என்ன சகி?”

“அதான் ஒரு மாசம் டைம் இருக்குல? இப்போதைக்கு நம்மனால சமாளிக்க முடியும்னா யாரும் காசு மாத்த வேண்டாம்!” என்றான் அவன்.

“ஏன்டா?”

“ டீவியை பாருங்கம்மா.. நம்மள விட இப்போ நிறைய பேருக்கு அந்த பணம் தேவைப்படுது. நமக்கு ஒன்னும் அவசரம் இல்லையே!’என்றான் அவன். மேலும் தனது தந்தையைப் பார்த்தவன், “ அப்பா உங்க க்ரெடிட்கார்டு  கொடுங்க” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.