(Reading time: 19 - 37 minutes)

10. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

சிக்கலான புதிர்களின் தீர்வு நீ!!!

Marbil oorum uyire

ந்தோஷ்...வா வா” வாசலில் மணி அடிக்கவும் ஓடிச் சென்று கதவை திறந்து நண்பனை வரவேற்றாள் அபூர்வா.

“அத்தை சந்தோஷ் வந்துட்டான்”

“வா பா சந்தோஷ். நல்லா இருக்கியா. அம்மா அப்பா எல்லாம் சௌக்கியமா”

“நல்லா இருக்கேன் ஆன்டி. அம்மா அப்பாவும் நல்லா இருக்காங்க”

“சித்து என்ன பண்றான் அத்தை. ஜாக்கிங் போயிட்டு வந்துட்டானா. நான் காலையில் இருந்து பார்க்கவே இல்ல” மாடிப்படி அருகில் நின்று மேலே அவன் அறையை பார்த்துக் கொண்டே சுசீலாவிடம் கேட்டாள் அபூர்வா.

“என்னவோ அவசர வேலைன்னு காலையிலேயே கிளம்பி போனான். நீ அசந்து தூங்கிட்டு இருந்த. அபி கிட்ட சொல்லிடுங்க மான்னு சொல்லிட்டு தான் போனான். நான் தான் வேலையில மறந்துட்டேன்”

“அதுனால என்ன அத்தை. வா சந்தோஷ் நாம ரெண்டு பேரும் டிபன் சாப்பிடலாம்”

“ஆன்டி நீங்க”

“நான் அங்கிள் கூட அப்போவே சாப்டுட்டேன். நீங்க சாப்பிடுங்க”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

சுசீலா இருவருக்கும் சிற்றுண்டி பரிமாற நண்பர்கள் இருவரும் பழைய கதைகளை பேசிக் கொண்டே உண்டனர்.

“சந்தோஷ் ... நம்ம கூட படிச்சாலே தீப்தி அவளை அன்னிக்கு சி.பில தற்செயலா பார்த்தேன். உன்னை தான் ரொம்ப விசாரிச்சா”

“எந்த தீப்தி”

“அடப்பாவி இப்படி எந்த தீப்தின்னு கேக்குற ”

“யாரு அபி எனக்கு ஞாபகம் இல்லையே”

“கன்னத்துல பளார்ன்னு வாங்கினது மறந்து போச்சா” அபூர்வா கண்ணடித்து சிரித்துக் கொண்டே கேட்க சந்தோஷ் “அவளா” என்று அதிர்ச்சி காட்டி அபியுடன் சேர்ந்து சிரித்தான்.

“ஹஹஹா அந்த சூர்பனகாவே தான்” அபூர்வா தங்கள் பள்ளிப் பருவத்தை சந்தோஷுடன் சேர்ந்து அசை போட்டாள்.

ப்போது அபூர்வா, சித்தார்த், சந்தோஷ் மூவரும் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர்.  அந்த வருடம் பள்ளி ஆண்டு விழாவில் ராம் லீலா நாடகத்தில் நடிக்க நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து கொண்டிருந்தனர் ஆசிரியர்கள்.

முதலில் ராமாயணம் கதை மாரல் சயின்ஸ் வகுப்பில் பயிற்றுவிக்கப்பட்டது. யாருக்கெல்லாம் நடிக்க விருப்பமோ பெயர் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட அபூர்வா தான் சித்தார்த் சந்தோஷ் பெயர்களையும் தனது பெயரோடு சேர்த்து கொடுத்து விட்டிருந்தாள்.

“பில்லி எதுக்கு இப்போ டிராமால நடிக்க என் பேர் கொடுத்த”

“ஏன் சித்து வேண்டாமா. மிஸ் கிட்ட வேண்டாம்னு சொல்லிடவா” சித்தார்த் கோபமாய்  கேட்கவும் அபூர்வா சோகமானாள்.

அவள் வருத்தத்தை கண்ட சித்து,”சரி சரி நாம மூணு பேரும் நடிக்கலாம்” என்று சம்மதம் சொன்னான்.

அந்த நாடகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹிந்தி ஆசிரியை ஷோபா தேசாய், பெயர் கொடுத்த குழந்தைகள் அனைவரையும் அழைத்தார்.

“பேர் கொடுத்த எல்லோரும் நாடகத்தில் இடம் பெறுவீங்க. ஆனால் முக்கியமான கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்க போறீங்கன்னு முடிவு செய்ய உங்க எல்லோருக்கும் ஒரு தேர்வு வைக்க போறோம்”

தெளிவான ஹிந்தியில் ஆசிரியை சொல்லவும் தேர்வு என்றதுமே பல மாணவர்கள் ஐயோ என்று அலற அபூர்வாவோ ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

கறுப்புப் பலகையில் மூன்று வசனங்களை ஆசிரியை எழுதி மாணவர்களை அதை தங்கள் சுவடிகளில் எழுதிக் கொள்ள சொன்னார். பின்னர் அந்த ஒவ்வொரு வசனமும் எந்த சூழ்நிலையில் எந்த கதாபாத்திரம் கூறுவது என்று விளக்கம் சொல்லி அதை நாடகபாணியில் பேசியும் காண்பித்தார்.

“இதுல இருந்து உங்க எல்லோரையும் ஒரு வசனம் பேச சொல்லி நாளைக்கு தேர்வு வைப்போம். எல்லோரும் பயிற்சி செய்து கொண்டு வாருங்கள்”

ஆசிரியை கூறவும் மாணவர்கள் எல்லோரும் சரி என்று கோரஸ் பாடினர்.

அன்று மாலை சித்தார்த் அபூர்வா சந்தோஷ் மூவரும் சித்தார்த் வீட்டில் கூடி அந்த வசனங்களை சொல்லிப் பார்த்து பயிற்சி ப்ராக்டீஸ் செய்து கொண்டிருந்தனர்.

“சந்தோஷ் “ஸ” இல்ல “ஷ”..” அபூர்வா சந்தோஷின் வசன உச்சரிப்பை திருத்தினாள்.

“பாருடா சந்தோஷ் இந்த பில்லி ஹிந்தினா என்னன்னே தெரியாம முழிச்சுது. இப்போ உனக்கே கிளாஸ் எடுக்குறா” சித்தார்த் கேலி செய்த போதிலும் அதில் ஒரு பெருமிதம் இழையோடியது.

“சித்து...நீ சும்மா வேடிக்கை பார்த்துட்டு கேலி பண்ணிட்டு இருக்கியா. ப்ராக்டீஸ் செய்யவே இல்லை நீ” அபூர்வா முறைத்தாள்.

“பில்லி நீ சொன்னன்னு தான் நான் டிராமால நடிக்கவே ஒகே சொல்லிருக்கேன். ப்ராக்டீஸ் பண்ணுன்னு சொல்லி என்ன டிரில் வாங்காதே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.