(Reading time: 19 - 37 minutes)

நிலா பேபி நீ வா அண்ணா உனக்கு ராமாயணா ஸ்டோரி சொல்றேன்” கிரயான்ஸ் வைத்து வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த நிலாவை அழைத்து மடியில் அமர வைத்து தனது கதை புத்தகத்தில் இருந்த படங்களை காண்பித்து அவளுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

அன்று குழந்தைகள் அனைவரும் வசனங்கள் பேசிக் காண்பிக்க ஆசிரியர்கள் உரிய மாணவர்களை கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்து கொண்டிருந்தனர்.

“முக்கயமான கேரக்டர்ஸ்க்கு பிப்த் ஸ்டாண்டர்ட் பசங்கள போடலாம்னு நினச்சா ஒருத்தர் கூட சரியா செய்யவே இல்லையே... ஷோபா மேம் நீங்க என்ன சொல்றீங்க” அங்கு தேர்வு செய்து கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் கூறவும்

“பெரிய வகுப்பு மாணவர்கள் தான் முக்கிய வேடங்களில் நடிக்க வேண்டும் என்று இல்லை. யார் சிறப்பாக செய்கிறார்களோ அவர்களையே தேர்வு செய்வோம்” ஷோபா தேசாய் பதில் உரைத்தார்.

வியக்கத் தக்க வகையில் நான்காம் வகுப்பு மாணவர்கள் சிறப்பாக நடித்து காண்பித்தனர்.

அபூர்வா முறை வந்த போது அவள் வசனங்களுக்கு ஏற்ப கொடுத்த ஏற்ற இறக்கங்கள், பாவம் அங்கிருந்த ஆசியர்கள் அனைவரையும் கவர்ந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்..

“அபூர்வா சீதா ரோலில் நடிக்கட்டும்” ஒருமனதாக அப்போதே அனைவரும் முடிவு செய்தனர்.

சித்தார்த்தின் முறை வந்த போது அபூர்வாவிற்கு படபடப்பு.

“இவன் ஒண்ணுமே ப்ராக்டீஸ் செய்யலையே” அவள் தான் தவித்தாள்.

அவனோ எப்போதும் போல ஸ்டைலாக வந்து அபூர்வாவை பார்த்து புன்னனைக்க வேறு செய்தான்.

அவன் வசனம் பேச பேச அபூர்வாவின் பொடிக் கண்கள் பளிச் பளிச் என மின்னியது.

மிகத் தெளிவாக கணீர் குரலில் நிமிர்ந்து ஒரு தோரணையுடன் அவன் பேசியதை பார்த்த அனைவரும் கட்டுண்டு தான் போயினர்.

இறுதில் சித்தார்த் ராம் பாத்திரத்தில் நடிக்க தேர்வு பெற்றான். சந்தோஷ் லக்ஷமணன், மிதுன் ஹனுமான், தீப்தி சூர்பனகா, ஐந்தாம் வகுப்பு பையன் ஒருவன் இராவணன் என ஒவ்வொரு பெயராக ஆசிரியை ஷோபா அறிவித்தார்.

தினமும் பள்ளி முடிந்து ஒரு மணி நேரம் நாடக பயிற்சி நடந்தது. சீதையின் சுயம்வரத்தில் இருந்து தொடங்கி ராமன் பட்டாபிஷேகம் வரை முக்கிய நிகழ்வுகள் உள்ளடக்கி நாடகம் அமைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் விருப்பம் இல்லாமல் தான் சித்தார்த் பங்கு பெற்றான். பயிற்சி நாட்களில் அதில் முழுவதுமாக ஒன்றி விட்டான்.

அப்போது சூர்பனகை மூக்கை லக்ஷமணன் பங்கம் செய்யும் காட்சியை  ஆசிரியை விளக்கி ப்ராக்டீஸ் போது அட்டை கத்திக்கு பதில் ஒரு ஸ்கேல் பயன்படுத்தச் சொன்னார்.

சந்தோஷ் உற்சாக மிகுதியில் ஸ்கேலால் தீப்தி மூக்கின் மீது சற்று அழுத்தமாக பதிக்க தீப்தி ஓ வென அலற அது சூர்பனகை அலறல் என்று அனைவரும் நாடக பயிற்சியை தொடர்ந்தனர்.

இதனால் கோபம் கொண்ட தீப்தி சட்டென சந்தோஷ் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டாள்.

அதன் பிறகு சந்தோஷ் அந்த காட்சியை நடிக்கவே பயந்து தான் நாடகத்தில் நடிக்கவில்லை என்று அடம் பிடிக்க சித்தார்த் அபூர்வா ஆசிரியர்கள் எல்லோரும் சமாதனம் செய்து வைத்தனர்.

“ஷோபா மேம். எனக்கு ஒரு ஐடியா தோணுது. நாம ஒரு ப்ரொஜக்டர் வச்சு நாடக காட்சிகளுக்கு ஏற்ற மாதிரி பேக்ரவுண்ட்ல ஒரு ஸ்க்ரீன் செட் பண்ணா இன்னும் நல்லா இருக்கும்” நுண்கலை ஆசிரியர் சொல்ல அது நல்ல யோசனையாக பட்டது ஆசிரியர்கள் அனைவருக்கும்.

“ஆனா இப்போ டைம் ரொம்ப கம்மியா இருக்கே”

“மெயின் இவன்ட்க்கு நான் ரெடி பண்ணிருவேன் மேம். ஆனா ரிஹர்சல்ஸ் பண்ண முடியாது”

“அதுனால என்ன. பேக்ரவுண்ட் தானே. அன்னிக்கே நேரடியா செய்திடலாம்”

பெரிய அளவில் சிறப்பான முறையில் நாடகத்தை அரங்கேற்ற எல்லோரும் ஆவலாக முயற்சி செய்து வந்தனர்.

ண்டு விழா  நாளும் வந்தது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அரங்கம் நிரம்பி வழிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் தங்கள் திறமையை வெளிபடுத்தினர் .

விஸ்வாமித்ரருடன் ராமர் லக்ஷ்மணர் வனம் செல்லும் காட்சியில் தொடங்கி, தடாகை வதம், அகலிகை சாபவிமோசனம் என்று தொடர்ந்து சுயம்வர காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மிக அழகாக காட்சிக்கு ஏற்றார் போல ப்ரொஜெக்டர் மூலம் அரண்மனை, வனம், குடில் என பேக்ரவுண்ட் அமைக்க பட்டது நாடகத்திற்கு சிறப்பு சேர்த்தது என்றால் நாடகத்தில் நடித்த பிள்ளைகள் அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறி பார்வையாளர் அனைவரையும் கட்டிப் போட்டனர்.

“ஐஸா லக் ரஹா ஹை ஜயசே பகவான் ராம் ஹி சாம்னே ஆ கயே” ( சாட்சாத் அந்த பகவான் ராமனே நேர்ல வந்த மாதிரி இருக்கு” நாடகம் கண்டு களித்து கொண்டிருந்த பார்வையாளர்கள் பலர் தங்களிடையே முணுமுணுத்துக் கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.