(Reading time: 19 - 37 minutes)

பார்ட்டி முடித்து வந்ததும் இரவில் மொட்டை மாடியில் சித்தார்த் பாட அதைக் கேட்டுக் கொண்டே நிலவை பார்த்துக் கொண்டிருந்த அபூர்வா திடீரென டாடி என்று கூச்சலிட்டு தன்னிலை மறந்து நிலவை பிடிக்க கைப்பிடிச் சுவரை தாண்ட முற்படுகையில் தாவி வந்து அணைத்து அவளை தன்புறம் இழுத்திருந்தான் சித்தார்த்.

அவனது கரங்களிலே மயங்கி விட்டிருந்தாள் அபூர்வா.

“பில்லி இங்க பாரு...அபி” அவள் கன்னத்தில் தட்டி அவளை தெளிய வைக்க முயன்றான் சித்தார்த்.

மெல்ல கண் விழித்தவள் அரை மயக்கத்திலே “சித்து டாடி அங்க” என்று நிலவை காட்டவும் அவளை சமாதானம் செய்து அவள் அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தான்.

அவள் சற்று நேரம் “டாடி டாடி” என்று முணுமுணுத்துக் கொண்டே உறங்கிப் போனாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“ச்சே இந்த பாட்டு நான் பாடியிருக்க கூடாது. ஆனா நான் பிளான் பண்ணி பாடலையே. என்ன அறியாமலே உள்ளுக்குள் பாடணும்னு ஒரு உந்துதல் எற்பட்டிருச்சு” தனக்குத் தானே சொல்லிகொண்டவன் அவனது அறைக்கு சென்று வெகு நேரம் உறக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுத்து விடிகாலை பொழுதில் சற்றே கண்ணயரந்தான்.

சற்று நேரத்திலே அவன் மொபைலில் அந்த ப்ரேத்யேக டோன்னுடன் கூடிய மெசேஜ் வரவும் சட்டென விழித்தான். தகவல் பார்த்ததும் உடனடியாக தயாராகி கிளம்பி விட்டிருந்தான்.

“அம்மா. நான் முக்கியமான விஷயமா வெளில போறேன். வர கொஞ்சம் நேரம் ஆனாலும் ஆகலாம். சந்தோஷ் வரேன்னு சொன்னான் இன்னிக்கு. நான் வர்ற வரை அவன வெயிட் செய்ய சொல்லுங்க. அபி கிட்ட சொல்லிருங்க. அவளா எழும்பட்டும் மா  டிஸ்டர்ப் செய்யாதீங்க” அவசரமாக அன்னையிடம் கூறிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு லோதி ரோடு நோக்கி பறந்தான்.

“அங்கிள் சாரி உங்க மெசேஜ் இப்போ தான் பார்த்தேன்” ஹெல்மட்டை கழட்டியபடியே அந்த வீட்டின் முன்னறையில் அவன் நுழைய அங்கே இன்னொருவர் அமர்ந்திருந்தார்.

“மோகன், சித்தார்த் இஸ் ஹியர்” சித்தார்த்தால் அங்கிள் என்று அழைக்கப்பட்ட யேசுதாஸ் அறிமுகப்படுத்தவும் அவர்  எழுந்து வந்து சித்தார்த்தோடு கை குலுக்கினார். 

“டூ யூ ரிமம்பர் மீ மை பாய்” அவர் குலுக்கிய கைகளை விடாமல் பிடித்தபடி கேட்க

“ஐ டூ ரிமம்பர் யூ சர். மிஸ்டர் மோகன் ராய். க்ரிப்டாலஜிஸ்ட் (cryptologist) ” சித்தார்த் பதில் கூறவும் புன்னகைத்தார்.

(க்ரிப்டாலஜிஸ்ட் என்பவர் ரகசிய குறியீடுகளை, சங்கேத மொழிகளை ஆராய்ந்து அதன் பொருள் அறிபவர்)

“யூ ஹாவ் க்ரோன் அப் இன் டு எ ஹான்சம் மேன்” அவர் கூறவும் சித்தார்த் லேசாக புன்னகைத்தான்.

விஜயகுமாரும் யேசுதாஸும் கல்லூரி காலத்து நண்பர்கள். விஜயகுமார் ராணுவத்தில் சேர்ந்த பொழுது யேசுதாஸ் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்று இண்டேல்லிஜன்ஸ் பிரிவில் பணியில் அமர்ந்து இன்று அதன் ஜாயின்ட் டைரெக்டர் பொறுப்பில் இருக்கிறார்.

அபூர்வாவையும் சித்தார்த்தையும் விஜயகுமார் யேசுதாஸின் வீட்டிற்கு சிறு வயதில் அழைத்து செல்வார். யேசுதாஸ் மனைவி சுந்தரிக்கு அபூர்வா என்றால் மிகவும் பிரியம். பெண் குழந்தை இல்லாததால் அபியை கொஞ்சி மகிழ்வார். யேசுதாஸ் சுந்தரி தம்பதியின் மகன்கள் அபூர்வா சித்தார்த் விட அதிக வயது மூத்தவர்கள். இவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர்.

தீபாவளி கிறிஸ்துமஸ் போன்ற விசேஷ நாட்களில் குடும்பத்துடன் வாழ்த்து பரிமாறிக் கொள்ளும் நட்பு தொடர்ந்து வந்தது இடையில் சுந்தரியின் மறைவின் பின் குறைந்து போனது.

விஜயகுமாரின் பிரிவிற்கு பின் அபூர்வா கூட்டினுள் சுருண்டுக் கொள்ள சித்தார்த் யேசுதாஸ் உடன் தொடர்பில் இருந்தான்.

ப்போது சித்தார்த் ஐஐடியில் முதல் வருடம் அடி எடுத்து வைத்திருந்த நேரம்.

“சித்து என் கூட ஒரு இடத்துக்கு நீ வர முடியுமா. யாரிடமும் சொல்லாம...அபி கிட்ட கூட சொல்ல வேண்டாம்” விஜயகுமார் கூறவும் சித்தார்த் “சரி மாமா” என்றான்.

அன்று அவர் அழைத்து வந்தது லோதி ரோடில் இருந்த இதே வீட்டிற்கு தான்.

“தாஸ் அங்கிள்” சித்தார்த் யேசுதாஸை பார்த்து வணக்கம் சொல்ல அங்கே இன்னொருவரும் இருந்தார்.

“சித்து இவர் மிஸ்டர் மோகன் ராய். க்ர்ப்டாலஜிஸ்ட்” யேசுதாஸ் அறிமுகம் செய்து வைக்க சித்தார்த் அவருக்கும் வணக்கம் சொன்னான்.

“சித்து உன்னோட ஹெல்ப் எங்களுக்கு வேணும். நீ டீடைல்ஸ் எதுவும் கேட்காம எங்களுக்கு ஹெல்ப் செய்ய முடியுமா”

யேசுதாஸ் கேட்கவும் நாட்பின் பாதுகாப்பு தொடர்புடைய ஏதோ ஒன்று என்று சித்தார்த் உணர்ந்து கொண்டான்.

“என்னால முடிந்ததை கண்டிப்பா செய்றேன் அங்கிள் அண்ட் யூ கேன் ட்ரஸ்ட் மீ” சித்தார்த் உறுதி தந்தான்.

“மோகன் சித்தார்த் இஸ் வெரி குட் அட் க்ராகிங் கோட்ஸ். அது அவன் ஹாபி. அது சம்பந்தமா நிறைய புக்ஸ் படிச்சு சுயமா அவனே டெவலப் செய்துகிட்ட திறமை. அவனால முடியுதான்னு ஒரு டிரை குடுத்து பார்க்கலாம்” யேசுதாஸ் சொல்லவும் மோகன் ராய் அலட்சியமாக தான் இருந்தார்.

“இந்த பொடியன் அவ்வளவு எக்ஸ்பர்ட்ஸ் செய்ய முடியாததை செய்து விட போகிறானா” என்று மனதிற்குள் நினைத்தாலும் அப்போது அவருக்கு எந்த விதத்திலாவது தீர்வு கிடைத்தால் போதும் என்ற நிலை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.