(Reading time: 17 - 33 minutes)

வர் செவிகளில் அபூர்வா சொல்வது போல இருந்தது.

எப்போதும் அவர் இதை விளையாட்டாக சொல்வதுண்டு. அபூர்வாவும் சிரிப்பாள். ஆனால் இந்த சொலவடை அவள் மனதில் பெரும் பலமாக வேரூன்றி மிகப் பெரிய முயற்சிகளை அவள் மேற்கொள்ள காரணமாக இருந்தது என்பதை இருவரும் அறிந்திருக்கவில்லை.

“முயற்சி செய்து தான் பார்க்கிறேன்” தனக்குள் உறுதி கொண்டவர் கண்மூடி மனதை ஒருநிலை படுத்தினார்.

“பூக்குட்டி பூக்குட்டி...” கையில் இருந்த சலங்களை ஓர் தாளத்தில் அசைத்து இசைத்துக் கொண்டே இருந்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

தே நேரம் சமேலி கிராமம் சமீர் வீட்டில்

“சமீர் சமீர் எழுந்திரு. இந்த பாலையாவது குடி”

பொழுது மறைந்த வேளையில் அழுதுக் கொண்டே வந்த சமீரைக் கண்டு திகைத்துப் போனாள் அவனின் தாய்.

“சமீர் என்னாச்சு. ஏன் அழற” அவர்கள் மொழியில் அவள் வினவ அழுகையையே அவளுக்கு பதிலாக தந்தான் அச்சிறுவன்.

“சமீர் கூட்டிட்டு வந்த மாமா அங்க பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்துட்டார் சின்னம்மா” சமீரின் பெரியப்பா மகன்கள் விடையளித்தனர்.

“ஐயோ” என்று அதிர்ச்சியுற்ற சமீரின் தாய் தன் கணவரை நாடிச் சென்று விஷயத்தை கூறினார்.

“விடு. யாரோ எவரோ. எப்படி போனா என்ன” அலட்சியமாக கூறினார் சமீரின் தந்தை.

“சமீர் அழுதுட்டு இருக்கான்”

“சின்ன பையன். அதிர்ச்சியாக இருக்கும். காலையில் சரியாகி விடுவான்”

சமீரின் தந்தை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இரவு உணவு ஏதும் உட்கொள்ள மறுத்த சமீர் அழுது அழுது உறங்கிப் போனான்.

காலையில் அவனை பால் அருந்த எழுப்ப வந்த அவன் அன்னை அவன் நெற்றியில் கரம் பதிக்கவே அனலாய் கொதித்தது.

“மாமா மாமா” ஜூர வேகத்தில் அனத்திக்கொண்டிருந்தான் சமீர்.

“இங்க வந்து பாருங்க அனலா கொதிக்குது” சமீரின் தந்தையை அவன் தாய் அழைத்து வரவும் அவர் சென்று வைத்தியரை அழைத்து வந்தார்.

“ஒண்ணுமில்ல அதிர்ச்சி தான். எதுக்கும் எந்த பெரியவர் எங்கே விழுந்திருக்கார்ன்னு போய் தேடி பார்த்து கூட்டிட்டு வாங்களேன்” அது சிறிய கிராமம் ஆதலால் அந்த பெரியவர் பற்றி அனைவரும் அறிந்திருந்தனர்.

“சரி நான் போய் தேடித் பார்க்கிறேன். சமீர் பாபா அந்த மாமாவை தேடி பிடிச்சு கூட்டிட்டு வரேன். நீ மருந்து சாப்பிடு” தந்தை கூற அதைக் கேட்ட மைந்தன் தலையசைத்தான்.

தனது அண்ணன் மகன்கள் வழி காட்ட அந்தப் பள்ளத்தாக்கில் எட்டிப் பார்த்த சமீரின் தந்தைக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாறைகளும் முற்புதர்களும் தான் தென்பட்டன.

“இங்க தான் சித்தப்பா விழுந்தார்”

“இங்க யாரையும் காணோமே”

“உருண்டு வேற எங்கேயாச்சும் விழுந்திருப்பார். யாருக்கு தெரியும் அவர் உயிரோட இருக்காரோ இல்லையோ”

“இதை சமீர் கிட்ட எப்படி சொல்றது” யோசித்தார் சமீரின் தந்தை.

“சமீர் கிட்ட அந்த மாமாக்கு ரொம்ப அடிபட்டிருக்கு அதனால கீழ சம்பல் கிராமத்திற்குக்  கூட்டிட்டு போயிருக்காங்க பாபான்னு சொல்லிடுங்க” அண்ணன் மகன்களிடம் அவ்வாறு தெரிவிக்க சொல்லிவிட்டு தான் அங்கிருந்தே சம்பல் கிராமத்திற்குப் பயணித்தார் சமீரின் தந்தை.

தே நேரம் தில்லியில்

சித்து இதுக்கு நீயும் உடந்தையா” கோபமாய் வெடித்தவள் அங்கிருந்து நேராக  அவள் அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டு மெத்தையில் கவிழ்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

“டேய் ஏன்டா இப்படி சொன்ன” சித்தார்த்துக்குமே அதிர்ச்சி தான்.

அபூர்வாவின் கோபக் குரல் கேட்டு அங்கு வந்த சுசீலா என்ன ஏது என்று கேட்க அதே நேரம் வெளியில் சென்றிருந்த கிருஷ்ணமூர்த்தியும் வந்து சேர்ந்தார்.

“என்னப்பா சந்தோஷ் இப்படி சொல்லி வச்சுட்டியே” விஷயம் அறிந்து சுசீலா கிருஷ்ணமூர்த்தி இருவரும் ஆதங்கப் பட்டனர்.

“நான் வேணும்னு சொல்லல ஆன்டி. வந்து...ஆமா ஆன்டி..தப்பு தான். சாரி டா சித்” சந்தோஷ் உண்மையில் மிகவும் கவலையோடு சொல்லவும்

“ஒகே டா மாப்ள...நீ ரொம்ப வருத்தப்படாதே. நீயே  அவ கிட்ட உங்க விஷயம் சொல்லணும்ன்னு தான் நான் ஏதும் சொல்லாம இருந்தேன். நீ சொல்ல வந்ததை விட்டுட்டு இப்படி சொதப்பி வைப்பன்னு நான் என்ன கனவா கண்டேன்” சித்தார்த் இலகுவாக எடுத்து நண்பனை உற்சாகப் படுத்த முயன்றான்.

“நான் போய் அபிகிட்ட சாரி கேக்குறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.