(Reading time: 8 - 16 minutes)

ன்றைய எதிர்பாராத நிகழ்வில் தன்னுடைய பற்களை இழந்திருக்க, என் மேல் கை தூக்கும் அளவிற்கு அவனுக்கு தைரியமா? என்று உள்ளம் ஒரு புறம் பொருமினாலும் அவன் தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்க போகிறான். அதை குறித்து மேலும் பேசி பேசி அவனை அணு அணுவாய் நோகடிக்கலாமென்று இறுமாந்திருக்க, அதற்கு வழிவைக்காமல் அவனை ஹாஸ்டலிலிருந்து நீக்கி விட்டதாக தகவல் வர மிகவும் ஏமாந்துப் போயிருந்தான் அவன்.

தன்னுடைய பணத்திற்காக தன் முன்னே கூழைக் கும்பிடு போடும் நண்பர்களும் கூட அவன் முதுகிற்கு பின்னால் அவன் பல் இழந்தக் கதையை நக்கலாக பேசி வருவது அவனுக்கு தெரியாததா என்ன? ஏற்கெனவே விஷமான மனது இன்னுமாய் விஷமேறிப் போயிற்று.

விக்ரம் என்னும் விக்ரமாதித்தனைக் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள வேண்டுமென்றால், மனிதனின் அழகை உருவத்தின் நிறத்தாலும், தோற்றத்தாலும் அளவிடுவதாக இருந்தால் அவனோ பேரழகன் வரிசையில் முதலிரண்டு எண்களுக்குள்ளாவது வந்து விடுவான். அதே நேரம் ஆணவத்தில், அகம்பாவத்தில், தன்னகங்காரத்தில் மிகுந்தவன். ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் அதுவரைக்கும் யாரிடம் எப்படி நுணுக்கமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்கிற சூட்சுமம் அறிந்தவன். நேரத்திற்கேற்ப மாறுவதில் பச்சோந்தியையும், இனிமையாக பேசிக் கவிழ்ப்பதில் சகுனியையும் மிஞ்சிடும் வல்லமை படைத்தவன். பள்ளிக் காலம் முதல் தான் பட்ட துன்பத்திற்க்கு யார் காரணம்? தன்னுடைய உண்மையான எதிரி யாரென்றே அறிந்திராத ரூபன் இவனிடம் மறுபடி அகப்பட்டு வீழ்வானா? இல்லை அவனை வெல்வானா? என்பதைப் பார்ப்போமா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

சின்னஞ்சிறியவர்கள் பிக்னிக் புறப்படும் போது இருக்கும் குதூகலம் தான் அங்கே இருந்தது. ஸ்கூல் ரீயூனியன் என்று வருடா வருடம் நடக்கும் சந்திப்புக்கள் தான் அந்த வருடம் பிக்னிக்காக மாறி இருந்தது. தீபன் தான் இந்த வருடம் வர முடியாது என்று கூறியிருந்தான். சந்திப்புக்கள் என்றால் பரவாயில்லை, லீவு நாளன்றுமாய் மனைவி பிள்ளையுடன் நேரம் செலவழிக்காமல் முழு நாளைக்கான பிக்னிக் என்னும் போது அவனுக்கு வர விருப்பமில்லை

வழக்கமாக அந்த சந்திப்புக்களை தவற விடாத ஜீவன், அனிக்காவோடு தனக்கு அதிக நண்பர்கள் கிடையாது என்று எப்போதும் வரமறுக்கும் ரூபனையும் அதட்டி மிரட்டி ஒரு வழியாக வர சம்மதிக்க வைத்திருந்தாள் அனிக்கா.

"இப்படியே வேலை வேலைன்னு இருந்தீங்கன்னா ஒரு நாளில்ல ஒரு நாள் நீங்க ரோபோட்டா மாறிடுவீங்க அத்தான்" என்று முறைத்தே அவனை சரிக்கட்டினாள்.

தற்போது ஜீவனுடன் தான் மனம் விட்டுப் பேச ஆரம்பித்திருக்க, அவனும் தன்னுடைய காதல் விஷயத்தில் முன்பு போல முந்திரிக் கொட்டைத் தனமாக இடக்கு மடக்காக பதில் பேசாமல் செவி கொடுத்து கேட்க ஆரம்பித்ததிலிருந்து ரூபனுக்கு மனது இலேசான உணர்வு.

பல மாதங்களாக தான் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் லவ் ப்ரபோசலை ஃபேக்டரி சத்தத்தின் பிண்ணணியில் இல்லாமல் இந்த பிக்னிக்கிலேயே கடற்கரை பின்னணியில், கடலலைகள் காவியமாய் கவி பாட, சூரியனின் மென்மையான கிரகணங்களின் ஒளிச் சிதறலின் முன் நின்று, ஒளி மிக்க அவள் கண்களோடு தன்னுடைய கண்களைச் சேர்த்து தான் ஆண்டுகள் பலவாகச் சேர்த்திருக்கும் அவள் மீதான காதலை அவள் உள்ளம் உணரும் படி உரைக்க வேண்டுமென்கிற மகா மெகா ஆவலோடு கனவினில் மிதந்துக் கொண்டிருந்தவனை

“வா அண்ணா பஸ் வந்திடுச்சாம்” என்று உலுக்கிய ஜீவனின் கரங்களும் குரலும் கலைத்தது.

அட இரவு கடந்து அதிகாலை வரும் வரைக்கும் நான் கற்பனையிலேயே ஆழ்ந்து விட்டேன் போலும், வெட்கமாய் தலைக் கோதி பிக்னிக் பேகைச் சுமந்தவனாய் வீட்டின் வாயிலைக் கடந்தான் ரூபன்.

எத்தனைக் கற்பனைகள் - என்னுள்ளத்தில்

எத்தனைக் கற்பனைகள்

அத்தனையிலும் நீ - கண்ணம்மா

ஆருயிராய் நீ

எந்தன்

தோள் சாய்ந்தவளாய்

சில நேரம்

என் மார்பில் 

முகம் புதைத்தவளாய்

சில நேரம்.

செல்லக் கோபம்

கொண்டவளாய்

சில நேரம்

என் உள்ளம் உவந்திட - என்னைச்

செல்லம் கொஞ்சுபவளாய்

பற்பல நேரம்

கற்பனைகள் நனவாகிடக் கண்டேன்.

நன்மைகளும் எனைச் சேரக் கண்டேன்

செல்வம், புகழ் தரும் போதை

சுகம் எனக்கேனென்பேன்

என் நலனே உனைச் சார்ந்தது தானே

கண்ணம்மா............

நீ என்னோடிருப்பதை விட

நலனேதென்பேன்..

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.