(Reading time: 14 - 28 minutes)

18. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

ந்த அதிகாலை 4 மணிக்கே பிக்னிக் செல்லும் பஸ் கலகலவென்றிருந்தது. அனைவரும் ஆண் பெண் பேதமில்லாமல் அருகருகே அமர்ந்து வளவளவென பேசிக் கொண்டிருந்தனர். பள்ளியில் படிக்கும் போது செய்த சின்னச் சின்னக் குறும்புகள் எல்லாம் வெடிச்சிரிப்புகளாக அங்கே அரங்கேறின. அப்போது மிகப் பெரிய பிரச்சனைகளாக தாம் எடுத்துக் கொண்டவை எல்லாம் இப்போது பொருளற்றதாக, நகைச்சுவையாகத் தோன்றிற்று.

அக்கூட்டத்தில் ரூபனுக்கு தெரிந்தவர்கள் மிகச் சிலரே. ரூபனின் ஒரே நெருங்கிய நன்பனான அசோக்கிற்கு சமீபத்தில் திருமணம் முடிந்திருந்த்தால் தேனிலவுக்குச் சென்று அவன் திரும்பி இருக்கவில்லை. அதனால் ரூபனுக்கு நெருங்கியவர்கள் அக்கூட்டத்தில் குறைவே. என்னதான் தன்னுடைய வேலையில் பலச் சிறப்புகளை எட்டியவனாக இருந்தாலும் எல்லோரிடமும் ஒரு சில வார்த்தைகள் பேசுவது தவிர அவனால் கலகலவென்று அக்கூட்டத்தில் ஒன்ற முடியவில்லை. அதிலும் அங்கிருந்தது ஜீவன், அனிக்கா வகுப்பிற்க்கு முந்திய பிந்திய வகுப்புக்களின் கலவையான கூட்டம். ஜீவன் ஏற்கெனவே தன்னுடைய கூட்டத்தோடு ஒன்ற ஆரம்பித்து விட்டான். அதிகாலை சூர்யோதயம் கடற்கரையில் சென்றுப் பார்க்க போவது அவர்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. தம்பி தன் நண்பர்களோடு உரையாடட்டும், தான் தனியாக எங்கேயாவது போய் அமரலாமா? என்றெண்ணும் போதே கூட அனிக்கா எங்கே இருக்கிறாள் என்று அவன் கண்கள் அவளைத் தேடின.

ஜீவன் இருக்கும் இடத்தில் தான் அவளும் இருப்பாள் என்கின்ற அவனுடைய கணக்கு தப்பவில்லை. பஸ்ஸில் இருவர் அமரும் சீட்டில் ஜன்னல் பக்கத்தைப் பிடித்துக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள். இந்த அதிகாலையிலும் பிக்னிக் என்றதும் கேசுவலில் ஜீன்ஸ் டி ஷர்ட்டில் மிக அழகாய் புறப்பட்டு ஃப்ரெஷ் ஆக அவள் வந்திருப்பதைப் பார்த்து அவனுக்கு புன்னகை மலர்ந்தது. பக்கத்தில் இருந்த பெண்ணிடம் மூச்சு விடாமல் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.

பஸ் அங்கிருந்து புறப்படப் போகிறது என்றதும் , கிட்டே வந்த ஜீவன் “இங்க வாண்ணா, உக்காரு என்று அவனை அனிக்கா இருந்த சீட்டின் எதிர்புறம் இருந்த 3 சீட்டுகளுள் நடுவில் அமரவைத்தான். ஏற்கெனவே ஜன்னல் சீட்டை ஆக்கிரமித்து இருந்த ஒருவன் தான் இருந்த வாக்கில் அப்படியே பின்னே திரும்பி பின் சீட்டில் இருந்தவர்களோடு கதையளந்துக் கொண்டிருந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரீத்தியின் "அடையாளம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

பஸ் புறப்பட்டு சற்று நேரமாகியும் ஜீவனுக்கு ரூபன் உட்கார்ந்திருந்த விதம் சரியாகப் படவில்லை. ஏதோ முள்ளின் மேலிருந்தது போல உட்கார்ந்திருந்தான். ஏனென்று காரணம் தெரிந்துக் கொள்ள பிறர் கேட்கா வண்ணம் அமைதியாகக் கேட்டான்.

“என்னாச்சு?”

கேட்ட விதத்தில் என்னவோ அவன் தான் ரூபனுக்கு அண்ணன் போல இருந்தது. வெகு நேரம் தயங்கியவன் கூறியே விட்டான்.

“எனக்கு அனி பக்கத்தில உட்காரணும்டா”

எதுக்கு? மிரட்டலாக வந்தது குரல்……

“எதுக்குன்னா? அவக்கிட்ட இன்னிக்கு பேசணும்”

“பேசணுமா? அது தான் தினம் ஆஃபீஸ்ல தான் பேசுறோம்ல, இப்ப எதுக்கு தனியா?”

“எனக்கு அவளை ப்ரபோஸ் பண்ணனும் , அதான் இப்ப ஹெல்ப் செய்ய போறியா? இல்லியா?” காட்டமாகவே விழுந்தன ரூபனின் வார்த்தைகள்.

சட்டென்று சிரித்து விட்டான் ஜீவன்.

“பரவால்லியே கடைசில ப்ரபோஸ் செய்யிற வரைக்கும் எங்கண்ணனுக்கு தைரியம் வந்திடுச்சா? சூப்பர் சூப்பர்” அவன் சிரித்த விதத்தில் தம்பியின் முகத்திலேயே குத்து விடுகிறவன் போல முஷ்டியை மடக்கி மூக்கிற்கு நேராக வேகமாய்க் கொண்டு போய் சட்டென்று நிறுத்தினான்.

“சொல்லுவடா, இதுவும் சொல்லுவ , இதுக்கு மேலயும் சொல்லுவ நான் எப்பவே சொல்லியிருப்பேன். எல்லாம் உன்னாலதான். அந்த பிரச்சினை வந்திடும் , இந்த பிரச்சினை வந்திடும்னு ஊர்ல இல்லாத பிரச்சினையெல்லாம் சொன்னது நீதானே…….இனிமேலும் என்னால சொல்லாம இருக்க முடியாது. அவ பக்கத்தில இருந்தாலும் சரியா பாக்க முடியலை. ரொம்ப கண்ட்ரோல்ல இருக்க வேண்டியிருக்கு. எப்படியும் இன்னிக்கு நான் சொல்லத்தான் போறேன். தீர்மானமாய் ஒலித்தது அவன் குரல்.

சரி அவக்கிட்ட போய் மனசில இருக்கிறதை சொல்லு…”…….. என்ற தம்பியின் முகத்தை நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரூபன்.

ஆனால் அவ மாட்டேன்னு சொல்லிட்டா அவளை பழி வாங்கப் போறேன், இல்ல மிரட்டி காதலிக்க வைக்கப் போறேன்னு மட்டும் எதையாவது செஞ்சன்னா…………. நீ செய்ய மாட்டண்ணா ஆனாலும் நீ செஞ்சன்னா நான் தான் உனக்கு முதல் எதிரி பாத்துக்க…….

என்றவனை ஒரு விதமாய் பார்த்தான் ரூபன்.

“என்ன? கெத்துக் குறையவில்லை தம்பியின் குரலில்,

“ம்ஹீம்……….”

என்னங்கிறேன்ல ஏ அண்ணா சொல்லு………….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.