(Reading time: 14 - 28 minutes)

தெல்லாம் அவனுக்கு ஒண்ணும் ஆவாது சும்மா நீ வா என்று வலிந்து அலட்சியப் படுத்தியவனாய் அவன் இறங்கினான், அதைக் கண்டவளுக்கு அவன் மீது மிகுந்த கோபம் வரவே ஜீவனுக்கு எக்கச் சக்கமாய் திட்டும் ரூபனுக்கு அதே அளவு கவனிப்பும் நடந்தது. 

மற்றெல்லோரும் ஏற்கெனவே முன்னால் சென்று தங்களுக்கென்று ஏற்கெனவே ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிற அறைக்குச் சென்று தங்கள் பைகளை வைத்துவிட்டு சூரிய உதயம் காண வருவதாக திட்டம். அவளும் தன் பையை பெண்களுக்கான அறைக்குள் வைத்து விட்டு கூட்டத்தை பின் தொடர்ந்து கடற்கரைக்கு மறுபடி வந்தாள்.

ரூபன் கையில் பையொன்றுமில்லை. தான் கடலில் குளிப்பதாக இல்லை என்று எண்ணியிருந்ததால் மாற்றுடையும் இல்லை. பை எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. இன்றைய தினம் எப்படியாவது அனிக்காவிடம் தன் மனதில் இருப்பதை பகிர்ந்துக் கொள்ள வேண்டும். என்னை அவளுக்கு பிடிக்குமா? சரியென்றுச் சொல்வாளா? நான் எதையாவதுச் சொல்லி அவள் என்னை வெறுத்து விடுவாளோ? இந்தக் கூட்டத்தில் எப்படி அவளிடம் தனியாக பேசுவது? எப்படி அவளிடம் தன் காதலைச் சொல்வது? என்கின்ற யோசனையில் அவன் தன்னுடைய குழுவை விட்டு வெகு தொலைவு வந்திருந்தான்.

சூரியன் உதிக்கும் முன்பே மெலிதான இளம் காலை கதிர்கள் இன்பமாய் உடலை வருட ஆரம்பித்தன. அந்த காலைப் பொழுது மிக ரம்யமாய் இருந்தது. அனிக்கா தூரத்தில் ரூபன் செல்வதைப் பார்த்தவளாக அவனைப் பின் தொடர்ந்தாள்.

அத்தான் எங்க போறீங்க ? எல்லோரும் அந்த பக்கம் இருக்கிறாங்க? என்றவளாய் அவனை அழைத்தவாறு பின்னேச் செல்ல சிந்தனை வயப்பட்டவனுக்கு அவள் குரல் காதில் ஒலிக்கவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

சற்றே வேகமாய்ச் சென்றவள் வெகு நிதானமாய் நடந்துக் கொண்டிருந்த அவன் அருகே வந்திருந்தாள். வழக்கம் போல் அனிக்காவின் வருகையை உள்ளுணர்வு எடுத்துச் சொல்ல சட்டென்று திரும்பினான் அவன்.

அங்கு அந்நேரம் சூரியன் புலர்ந்தது......... தூரத்தே இருக்கும் நண்பர்கள் உற்சாக குரல்கள் இவர்கள் இருவரின் காதில் மெலிதாய் கேட்டது. இவர்களைச் சுற்றி ஒருவரும் இல்லை. அனிக்கா ரூபனைப் பின் தொடர்ந்த காரணம் மறந்து இயற்கையில் மூழ்கி ,மெய் மறந்தவளாய் சூரியன் வருகையைப் பார்க்க, ரூபன் சூரிய ஒளியில் தக தகக்கும் பொன் மேனிக் கொண்ட தன் காதலியின் முகத்திலேயே பார்வையை நிறுத்தினான்.

எல்லோரும் கிழக்கைப் பார்க்க இவன் மேற்க்கைப் பார்க்கிறானே என்றெண்ணியவளாய் அவள் அவன் கரம் பற்றி அந்த இயற்கை காட்சியின் புறம் அவனைத் திருப்ப முயல அவள் கரத்தப் பற்றியவனாய் இது வரை தன்னைத் தடுத்த அத்துணை தயக்கங்களையும் புறம் தள்ளி அவள் மற்றோர் கரத்தையும் தன் கையில் எடுத்து தன் பக்கமாய் அமைதியாய் இழுத்தான்.

இப்படி ஒன்று நடக்குமென்றே புரியாமல் திகைத்த அனிக்கா வேகமாய் இல்லாவிடினும் மென்மையாய் அவன் மேல் மோதி நின்றாள். அவள் இடையில் தன்னுடைய கரத்தைக் கோர்த்தவன் தன் தலைஅருகே சற்றே குனிந்த விதம் திகைத்தவளாய் பார்த்துக் கொண்டிருப்பவளிடம் பேசினான்.

“அனிம்மா எனக்கு உன்னை ரொம்ம்ப்ப பிடிக்கும். ரொம்பன்னா எவ்வளவுன்னு சொல்ல தெரியலை. ஆனா நீ தான் என் லைஃப், நீ இல்லன்னா என் லைஃப்ல ஒண்ணுமே இல்லை............ நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? உனக்கு என்னை பிடிக்குமா? நான் இன்னும் அம்மாக்கிட்ட சொல்லல, முதல்ல உன்கிட்ட தான் பேசணும்னு காத்திட்டு இருந்தேன். நான் நம்ம கல்யாணம் விஷயமா வீட்டில பேசட்டுமா? நீ என்னை கட்டிப்பியா?”

அவர்கள் இருவரையும் அந்த அதிகாலையில் ஓவியன் பார்த்திருந்தால் கவிதைப் போல சூரிய ஒளி சுற்றி தன் தணிந்த ஒளிக்கதிரைப் பரப்பி நிற்க, கடலலைகள் இருவர் பாதம் வந்து வருடி வருடிச் செல்ல, கடலின் இதமான இனிய காற்றில் காதல் பரவிட இருவரும் மெய்மறந்து நிற்க்கும் விதமாய் அவர்களை அந்த நிலையில் ஓவியமாய் பதித்திருப்பான். (எல்லோரும் ஒரு தடவை கதையின் இமேஜ் பார்த்துக்கங்கப்பா)

ஒரு வழியாக ரூபன் மனதில் இருப்பதைக் கொட்டிய பின்னும் அனிக்கா இன்னும் தன்னுடைய திகைப்பிலிருந்து மீளவில்லை. மீண்ட போது ரூபனின் கைகள் தன் இடுபை தழுவி இருப்பதைப் பார்த்து அரண்டாள்.

ஸாரி, ஸாரிடா ஏதோ எமோஷனலாயிட்டேன். சட்டென்று தன் கரங்களை அவள் இருப்பினின்று விடுவித்தவன் வெட்கமாய் தன் பின்னந்தலையை வலக் கரத்தால் கோதியவனாய் அவளைப் பார்த்துச் சங்கடமாய் புன்னகைத்தான். அனிக்கா ஏதாவது பதில் சொல்வாளா? என அவன் எதிர்பார்க்க அவள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ரெடியாக இருந்தாள். ரூபன் அந்த சந்தர்ப்பத்தை நழுவ விடுவதாய் இல்லை. சட்டென்று அவள் கரத்தைப் பற்றியிருந்தான்.

ஹேய் அனி பதில் சொல்லு கனிவும் காதலும் கொட்டிக் கிடந்தது அவன் குரலில்,

அவனுக்கு முகம் மறைத்து எதிர்புறமாய் இருந்தாலும் சட்டென்று வெட்கத்தில் சிவப்பேறியது அனிக்காவின் முகம்.

மூச்சுவிட திணறுவது போல சற்று நேரம் அவள் திணறினாள்….

நான்..…

ம்ம்ம்………

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.