(Reading time: 20 - 39 minutes)

 03. அடையாளம்!!! - ப்ரீத்தி

Adaiyalam

ய் எழுந்திரிங்க டி... எருமை மாடு மாதிரி தூங்குரதை பாரு... ஏய் அனு... கீர்த்தி ஏந்திரிங்க...” என்று கத்திக்கொண்டே தலையை தூக்கிக்கட்டிக்கொண்டு குளிக்க ஆயத்தமானாள்.

கண்களை துடைத்துக்கொண்டே எழுந்த அனுவிற்கு வெளியில் இன்னும் விடியாமல் இருப்பதை பார்த்ததும் ஒன்றுமே புரியவில்லை. “ஹே என்னடி இன்னும் விடியவே இல்ல அதுக்குள்ள எதுக்கு எழுப்பின...”

“ம்ம்ம்ம் எம்மா தெய்வங்களா... நீங்க இப்போ எழுந்தா தான் மீரா கல்யாண முஹுர்த்தம் முடியுறதுக்குள்ள தயாராகி முடிப்பீங்க” என்று கிண்டல் செய்தவண்ணம் குளிக்க சென்றாள்.

ஒருவாறு அவள் சொல்லியது உண்மை தான் என்றவண்ணம் இரு தோழிகளும் மாறி மாறி அலாரம் வைத்து தட்டு தடுமாறி முழித்து குளித்து கிளம்புவதற்குள் மதுவிற்கு விழிகள் வெளியே வந்துவிட்டது. ஒருத்தருக்கு முதலில் சேலையை கட்டிவிட்டு அழகாக அமரவைத்துவிட்டு அடுத்தவளுக்கு கட்டிவிட்டாள் அதற்குள் முதலில் கட்டிக்கொண்டவள் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறேன் போட்டோ எடுக்குறேன் என்று அங்கும் இங்கும் குதித்து மடிப்பை களைத்துவிடுவாள்.

எப்படியோ போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு கிளம்பி தயாராகி ஓரிரு புகைப்படம் எடுத்த கையோடு அவர்களை அழைத்து செல்ல பெண்ணின் வீட்டில் இருந்து கார் வந்துவிட்டது.

“மது சேலையை கட்டிக்கிட்டு நடக்கவே முடியலை...” என்றாள் கீர்த்தி..  

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“என்னாலையும் தான்...” ஒத்து ஊதினாள் அனு

“ஐயோ... கடவுளே... தயவு செஞ்சு போற வழியெல்லாம் புடவையை சரி பண்ணிக்கிட்டு வராதீங்கப்பா” என்று தலையில் அடித்துக்கொண்டே முன்னே நடந்தாள். அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு என்று நினைத்துக்கொண்டு அனுவும், கீர்த்தியும் சென்றனர். அவர்கள் அலட்சியமாக நடந்து செல்வதை இரு கண்கள் தொடர்ந்துக்கொண்டே இருந்தது. முதலில் அணிட்சையாய் உணர்ந்து பின்னால் பார்த்தது அனு தான்.

“ஏய் கீர்த்தி...” என்று அவள் காதோடு கிசுகிசுத்து ஜாடை காட்ட, அவள் கூறிய திசையின் பக்கம்  கீர்த்தி பார்த்தாள். நேற்று தள்ளாடியபடி பின்னோடு வந்தவனும் அவனோடு சேர்ந்து மற்றவனும் மூடப்பட்டிருந்த கடையின் ஓரமாக நின்றுக்கொண்டு அவர்களை பார்த்துக்கொண்டே இருந்தனர். அவர்களின் பார்வையே கீர்த்திக்கும் அனுவிற்கும் ஒரு அருவருப்பை தந்தது. அது இச்சையா, வெறுப்பா எது என்று சொல்ல தெரியாத பார்வையை வீசினர். ஆனால் அவர்கள் ஒரு வேட்டை உணர்வோடு பார்த்ததை ஏனோ அவர்களுக்கு தெரியவில்லை. மீண்டும் ஏதேனும் பிரச்சனை வருமா... எதாவது செய்துவிடுவானா, மதுவிடம் சொல்லலாமா? இல்லை இல்லை எதுவும் நடக்காது எதுவும் நடக்காது என்று தன் மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டு அவன் புறம் திரும்பாமல் நடையை வேகமாக போட்டு காரை நோக்கி சென்றார்கள். இதுவெல்லாம் ஒரு நிமிடத்திற்கும் குறைந்து நடக்க இது அனைத்தும் தெரியாமல் முன்னே சென்று காரில் அமர்ந்திருந்தாள் மது.

“என்னப்பா நீங்க இவ்வளவு மெதுவாக வரீங்க...” என்று மெல்லமாக கடிந்துக்கொண்டு புறப்பட்டு சென்றனர் பெண்கள்.  

பார்க்க ஒன்றும் பூலோக அழகிகள் போல இல்லாவிட்டாலும் அந்த ஒல்லியான தோற்றத்திலும் அழகாக மின்னினார்கள் பெண்கள். அதுவும் மூவரில் கீர்த்தி அழகாக தெரிந்தாள், அவளது தோழிகளே எதிர்பார்க்காதது தான். மெலிந்த தேகம் என்பதால் சேலை கட்டினால் அழகாக இருக்குமோ என்று சந்தேகத்தில் தான் கீர்த்தியுமே இருந்தாள் ஆனால் இதுவரை பார்த்திராத உடையில் அன்று அழகாக இருந்தாள். எப்போதும் சிரித்த முகம் இன்னும் அழகை கூடியது.

(ஹே ஸ்டாப் ஸ்டாப்... கல்யாண பொண்ணை விட்டுட்டு கீர்த்தியை வர்ணிச்சதுல மீராவுக்கு கோவங்க... கேமெராவ திருப்புங்கப்பா...)

என்ன இந்த பொண்ணு இப்படி இருக்கு... கொஞ்சம் உடம்பை எத்த சொல்லு... முகத்துக்கு ஏதாவது பண்ணிக்க சொல்லு... ஊருல எல்லாரும் நல்லா தான் அழகை பார்த்துக்குறாங்க இவள் ஏன் இப்படி இருக்காள் என்று பலவாறு தன் சுற்றத்தின் வாயிலாக கேள்விபட்டது தான்... ஆனால் என்னவோ இந்த பெண்கள் திருமணம் என்றால் மட்டும் திடிரென்று அழகாகி விடுகின்றனர். அப்படி ஒரு கல்யாண கலையோடு தான் இருந்தாள் மீரா, கொஞ்சம் பூசு மஞ்சளும், கொஞ்சம் கன்ன சிவப்பும் சேர்ந்து அழகாய் மிளிந்தாள், ஏனோ அதில் ஒரு நட்சத்திர ஒளியாய் அவ்வபோது மாப்பிள்ளையை பார்க்கும் போது மின்னியது. இதற்கெல்லாம் மேல எதுவும் சொல்ல வேண்டுமோ என்ன, கல்யாணத்தில் அவரவர் பொண்ணு மாப்பிளையை தேடவந்தவர்கள் என்று ஒரு கூட்டம், வாழ்த்தவந்தவர்கள் என்று ஒரு கூட்டம், சிடுமூஞ்சிகளை சிரிக்கவைக்கவென்று குழந்தைகள் கூட்டம் ஒருபுறம், பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் என்று நிறைந்து இருந்தது மண்டபம்.

“கெட்டிமேளம் கெட்டிமேளம்...” என்று ஒலிகள் நாலா புறமும் பரவ, காலமெல்லாம் கைகோர்த்து இருக்கப் போகும் உறுதிமொழியினை மஞ்சள் நிற மாங்கல்யத்தின் மூலம் நிலை நாட்டினார் மாப்பிள்ளை. தோழிகளின் முறைப்படி மணப்பெண்ணை கிண்டல் செய்து புகைப்படங்கள் எடுத்து சூட்டோடு சூடாக வலைதளத்தில் பரவவிட்டுக்கொண்டு இருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.