(Reading time: 20 - 39 minutes)

றுநாள் அவரவர் வீட்டில் இருந்து வருவதாக இருந்தது, அதனால் மதுவின் பெற்றோரே கீர்த்தியின் வீட்டிற்கு சென்று சொல்லி அழைத்துவருவதாக சொல்லி இருந்தனர். கீர்த்தியின் தாயை நேரில் காணப்போகும் தயக்கத்தில் இருந்தனர் மதுவும், அனுவும். ஆனால் அவர்கள் நினைத்தது போல இவர்களிடம் கோவித்துக்கொள்வதற்கு அவர்களுக்கு மனம் இடம் தரவில்லை. இவர்களிடம் கோவித்துக்கொண்டு என்ன செய்ய முடியும். தான் தானே பொறுப்பாக இருந்திருக்கவேண்டும் அவளை இங்கே அனுப்பி இருக்க கூடாது. எல்லாம் என் தவறு தான் என்று மனம் மீண்டும் மீண்டும் துடித்துக்கொண்டே இருந்தது அருணாவிற்கு. பயணம் துவங்கிய நேரம் முதல் கடவுளே இது அனைத்தும் கனவு என்று சொல்ல மாட்டாயோ... பொய் கனவு கெட்ட கனவாக இருக்க கூடாதோ என்று நினைத்து வருத்தியபடியே வந்தார்.  

பாரம் நெஞ்சை அடைக்க அழுகை இமைகளின் தடுப்புசுவரை பொருட்படுத்தாமல் வந்துக்கொண்டே இருந்தது. தாயை சமாதானம் செய்யும் விதம் தெரியாமல் குழம்பி போயிருந்தாள் மித்ரா. வரும் வழியெல்லாம் இருவரும் அழுதுக்கொண்டே வர, திண்டுக்கல் வந்து இறங்கியதுமே எதிரில் அனுவும், மதுவும் கண்களில் பட்டுவிட துவண்டு போன உள்ளம் மேலும் விம்மி அழுக துவங்கியது. அந்த அழுகை உன்னை நம்பி தானே என் மகளை அனுப்பினேன் என்று சொல்லாமல் சொன்னது மதுவிற்கு. இருவரும் சில நொடிகள் மாறி மாறி பார்த்துக்கொண்டு அழ, குற்றுணர்ச்சி தாங்காமல் அருணாவை ஓடி சென்று தழுவிக்கொண்டார்கள் மதுவும் அனுவும்.

“என்ன மன்னிச்சிருங்கம்மா... எனக்கு நடந்ததை எதையும் நம்பவே முடியலைம்மா... என்னால அவளை காப்பாத்த முடியலம்மா...” என்று அழத்துவங்கிவிட்டாள். அவளை பற்றி ஆறுதல் சொல்லும் நிலைமையில் இல்லை அருணா.. எதுவும் புரியாமல் இருந்தவரை அங்கே வந்த தோழி மீராவின் தந்தை தான் கொஞ்சம் நம்பிக்கையான வார்த்தைகள் சொல்லி தேற்றினார்.

காவலரிடம் சென்றவருக்கு ஏதேனும் நம்பிக்கையான வார்த்தைகள் கிடைக்கும் என்று அவள் எதிர்பார்த்தாள் ஆனால் அவர்களோ என்னதான் கண்டு பிடித்துவிடலாம் என்று கூறினாலும் எந்த துப்பும் கிடைக்காமல் தள்ளாடினர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

தோழிகளின் வாக்குமூலத்தை வைத்து அந்த முரடர்களே கோவத்தில் தாங்கள் இந்த ஊர் இல்லை என்று கூறியதாக தெரிந்தது. அதனால் சுற்றி இருக்கும் சின்ன சின்ன ஊரில் விசாரிக்க துவங்கினர். அங்கே உள்ள காவல் நிலையத்துக்கு அழைப்பு சென்றது விவரங்கள் சேகரிக்க பட்டது, உள்ளூரிலும் அதே நேரத்தில் தேடத்துவங்கினர். ஆனால் இவர்களுக்கு அது மட்டுமே ஒரு விண்ணப்பம் இல்லையே. நிறைய விண்ணப்பங்கள் இருந்தது அனைத்தையும் பார்த்தாக வேண்டுமே.. தொடர்ந்து முயற்சித்துக்கொண்டு இருந்தனர்.

அவர்களோடு சென்று அருணாவும் அவள் மகளும் சுற்றினார் இரு தினங்களுக்கு, அவர்கள் வந்த அன்றே மற்றவர்கள் ஊருக்கு திரும்பிவிட்டனர். இன்னும் இரு தினங்கள் இருந்து பார்த்துவிட்டு கண்டிப்பாக கீர்த்தியை கையோடு அழைத்து செல்வதாக தான் முடிவு செய்திருந்தனர். ஆனால் நாட்கள் நகர நகர அதுவும் காவலர்களோடு சேர்ந்து தேடும் போதெல்லாம் எந்த விடையும் கிடைக்காமல் சுற்றுவதுப் போல உணர்ந்தனர். “ஐயோ என் பொண்ணு எங்க இருக்கான்னு தெரியலையே என்ன கஷ்ட்டப்படுறாளோ, அவளை என்ன பண்ணானுங்கன்னே தெரியலையே... ஆண்டவா என் புள்ளைய காப்பாத்துப்பா” என்று போகும் வழியில் இருக்கும் ஆலயங்களில் எல்லாம் வேண்டிக்கொண்டே வந்தார் அருணா.

இவர்களின் சோதனைக்கு ஏற்ப கீர்த்தியின் தந்தையால் இந்த சமயத்தில் இந்தியா வருவதற்கு இடம் கிடைக்காமல் போனது. ஒவ்வொரு நாளும் இதோ கிளம்பி விடலாம் இதோ என்று பார்த்துக்கொண்டே இருந்தாரே தவிர சோதனையாக வானிலை சரியில்லாமல் போய்விட அவரால் அப்போதைக்கு வர முடியாமல் போனது. அங்கே இருக்கவும் முடியாமல் இந்தியா வரவும் முடியாமல் பெரும் அவஸ்தையாக இருந்தது அருளுக்கு.

“ஹலோ... சொல்லுங்க” என்று கரகரத்த குரலில் பேசினார் அருணா. அவரின் குரலே அவர் நிம்மதி இன்றி அழைவதை பறைசாற்றியது.

“அருணா... எதாவது நியூஸ் கெடச்சுதா?? கீர்த்திய கண்டு பிடுச்சிடலாம்ன்னு நம்பிக்கையா சொல்றாங்களா...” என்று பதட்டத்தோடு பேசினார் அருள்.

இருவராலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ள முடியவில்லை. அழுது அழுது நீர் வற்றிவிட அருணா உணர்ச்சியற்ற குரலில் தான் பேசினார். “எதுவும் நம்பிக்கையா சொல்லவே மாட்டிங்குறாங்க, சுத்தி இருக்க ஊருக்கெல்லாம் கீர்த்தி பத்தி நியூஸ் சொல்லிருக்காங்க ஆனால் இது வரைக்கும் எந்த துப்பும் கிடைக்கலை... எல்லாம் என்னால தான் என்னாலத்தான்” என்று தலையில் அடித்துக்கொண்டார். “இந்நேரம் அவள் என்ன கஷ்டப்படுறாளோ...”

அதெல்லாம் இல்ல அருணா, எல்லாம் நம்ம தலையெழுத்து... “பாவம் அவள் வாழ்க்கையில பிறந்ததில இருந்தே நிம்மதி இருக்க கூடாதுன்னு நினைசிட்டான் போல ஆண்டவன்...” என்று கரகரத்த குரலில் அவர் துவங்குவமே அருணா நிறுத்திவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.