(Reading time: 20 - 39 minutes)

கீர்த்தியின் புகைபடத்திற்கு முதல் பதிவே அவளது தங்கை தான். “ஏய் கீர்த்தி... என்ன திடிர்ன்னு அழகா தெரியுற... எதாவது எஃபெக்ட்ஸ் குடுத்திருக்கீயா” என்று கிண்டல் அடித்து போட்டிருந்தாள். அதை பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டவள் அதற்கும் ஒரு லைக் போட்டுவிட்டு பொழுதை போக்கிக்கொண்டு இருந்தாள்.   

போகும் இடமெல்லாம் அவளை அனைவரும் திரும்பி பார்க்க அன்றுபோல் என்றும் அவளுக்குபெருமிதம் தோன்றியதில்லை. ஒரே ஆட்டமும் அரட்டையுமாக நேரத்தை கழித்தவர்கள் மதியத்திற்கு பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தனர். பெண்ணும் மாப்பிள்ளையின் வீட்டிற்கு சென்றுவிட இனி வேறு வேலை இல்லையென்றாலும், மறுநாள் வரவேற்பு விழாவிற்காக அவர்களும் அந்த ஊரிலேயே தங்கினர்.

“நீங்களும் வீட்டுக்கு வந்திருங்களேம்மா...” என்று பெண்ணின் உறவினர் கூற, மூவருக்கும் ஏனோ கூச்சமாக இருந்தது தோழி இல்லாத வீட்டில் தங்குவதற்கு. “இல்ல ஆன்டி ரூம்லேயே இருக்கோம்...” என்று சமாளித்து அவர்களுக்கு என்று பதிவு செய்திருந்த அறைக்கே சென்றுவிட்டனர்.

“ஹலோ... இதோ மீரா பிரிண்ட்ஸ் ட்ரோப் பண்ண வந்திருக்கேன்... ஓ... அப்படியா.. இதோ ஒரு 5 நிமிஷம்...” என்று அவர்களை அழைத்து வந்த உறவினர் பேசினார்.

அவர்கள் ஹோடெளை நேருங்கும் தெருவின் முனையில் கற்கள் வருசையாக நிறுத்திவைக்கப்பட்டு பாதையை மூடி இருந்தது. அதை கண்டவர், “ஆரம்பிச்சுட்டானுங்களா... பந்த்ன்னு சொன்ன உடனே எதாவது ரகளையை பண்ண வேண்டியது” என்று சுற்றும் முற்றும் பார்த்தவர்.

“ஏம்மா... இந்த லெப்ட் திரும்பி கொஞ்ச தூரம் போனதும் ஹோட்டல் தான் நடந்தே போயிடுரிங்களா... தப்பா நெனச்சுக்காதீங்க... அண்ணே வேற கூப்பிடுறாரு” என்று அவசர அவசரமாக பேசினார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை அங்கிள் இதோ பக்கத்துல தானே இருக்கு... நாங்களே போய்கிறோம்” என்று பணிவாக பேசிக்கொண்டு இறங்கிக்கொண்டனர் வர போகும் விழைவு தெரியாமல். பேசிக்கொண்டே பொறுமையாய் நடந்து சென்றனர் மூவரும், அவர்கள் வளைவில் திரும்புவதை பார்த்தவர், காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார். தெருவே காலியாக இருந்தது, பெரும்பாலும் உண்டு உறங்கும் நேரம் அது... அதுவும் பந்த் என்றதும் கடைகள் கூட இல்லாமல் பெரிதும் வெருசோடி இருந்தது, ஆனால் பகல் அல்லவோ... பெண்கள் கவலையே இல்லாமல் நடந்து சென்றனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

குறுக்கே புகுந்த அந்த குடிகாரனும் காலையில் பார்த்த அவனது நண்பனும் கூடவே இன்னொருவனும் மூவரையும் ஒரு மாதிரியாக பார்த்தனர். அவர்களை யாரென்று புரியாத மது அவர்களின் பார்வையிலேயே கொஞ்சம் அருவருப்புற்று தோழிகளை அழைத்துக்கொண்டு ஒதுங்கிசெல்ல முற்பட மீண்டும் முன்னுக்கு வந்து தடுத்தனர்.

“ஹலோ... உங்களுக்கு என்ன வேணும்??? ஒழுங்கா வழியை விடுங்க...” என்று கொஞ்சம் குரலை கடினப்படுத்தி சொல்லவும் குடிகாரன் மற்ற இருவரையும் பார்த்துவிட்டு சிரித்தான். “டேய் இந்த குட்டி தான் திமிரு பிடுச்சவன்னு நெனச்சால், கூட இருக்க குட்டிங்க எல்லாம் அப்படி தான் இருக்கும் போல” என்று ஒரு மாதிரி பார்வையோடு அவர்களை மேலும் கீழும் பார்த்தான்.

“மரியாதையா போறிங்களா.. இல்ல போலீஸ் கூப்பிடுவேன்...”

மேலும் சிரித்தவர்கள்... “டேய் இதுங்க இன்னும் லாலிபாப் சாப்புடுற வயசுலேயே இருக்குங்கடா... இந்த வயசுக்கு என்னலாம் தெரிஞ்சிருக்கணும்” என்று மற்றவன் கூறி சிரித்தான். இருவர் மாறி மாறி பேசிக்கொண்டிருக்க ஒருவன் மட்டும் இடத்தைவிட்டு நகர்ந்தான் அந்த குடிகாரனின் கண்ணசைவில். சென்றவன் எங்கோ திரும்புவதை அனு பார்த்துக்கொண்டிருக்க, அருகில் இருந்தவன் “என்ன குட்டி என்ன பார்க்குற... அவன் தான் வேணுமா எங்களையெல்லாம் புடிக்கலையா???” என்று அவளது அருகில் வந்தான். அவன் மீது மது நாற்றம் வர பயந்து கீர்த்தியின் பின்னால் சென்றாள். அவளை காக்கும் விதமாக மறைத்து நிற்க இப்போது அந்த குடிகாரன் முன்னால் வந்தான்.

ஓரடி முன்னேறி அவர்கள் அருகில் வரவும் மதுவும் தானாக கீர்த்தியின் பின்னால் சென்றாள், கீர்த்தி மட்டும் இருவரையும் காக்கும் வண்ணம் பாதுகாப்பாக நின்றுக்கொண்டு ஓங்கி அவனது கன்னத்திலேயே அறைந்தாள். அறைந்தவள், “இன்னொரு அடி எடுத்து வச்ச செருப்பு பிஞ்சிரும் உன் ஊருனா என்ன வேணா செய்யலாம்ன்னு நினைப்பா???” என்று முறைத்துக்கொண்டே மிரட்டினாள்.

அடிவாங்கியவன் மீண்டும் கோவம் தலைக்கு ஏற, “எவண்டி சொன்னா நான் இந்த ஊருன்னு” என்று அவள் தலை முடியை கொத்தோடு பிடிக்க, ஒதுங்கி சென்றவன் சரியாக ஒரு காரோடு அவர்களின் அருகே வந்திருந்தான். இலகுவாக அவளை பிடித்து காருக்குள் ஒரு தள்ளு தள்ளிவிட்டு அருகே இருந்த இரு தோழிகளுக்கும் ஒரு அறையை கொடுத்து தள்ளிவிட்டுவிட்டு தப்பிவிட்டனர் இருவரும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.